Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

டெல்லி – ஓர் எச்சரிக்கை!

India- Delhi Poll 2015

Story Highlights

  • திருவாளர் மோடிக்கு செக்!!
  • விழித்தெழ வேண்டிய தருணமிது

மறுப்பு

  • இந்தப் பதிவுகள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை
  • இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது.
  • இவை எனது சமுதாய அக்கரையில் பதிவு செய்யப்பட்டது.
  • எனினும் இதில் எவ்விதமான விவாதத்திற்கும் போட்டிகளுக்கும் இடமில்லை.
  • இப்பதிவில் தங்களுக்கு உடன்பாடில்லை எனில் படிக்க / பார்க்க வேண்டாம்.
  • அப்படியே படித்து / பார்த்து விட்டாலோ இதில் விவாதித்து உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.

நன்றி!!!

Translation in English

Disclaimer

  • This post is not for hurting / insulting anybody
  • This post is the sole property of the Author
  • This post is being published in the view of Welfare of Society
  • We do not entertain any discussions / arguments regarding the post
  • Please Avoid reading if you disagree with the post
  • Even if you have read unknowingly kindly leave it without wasting your valuable time

Thanks

 

ஆம்! நன்றி! டெல்லி வாக்காளப்பெருமக்களே!

 

எங்கு சென்று முடியும் இந்தப்பாதை? என்று தவித்துக்கொண்டிருந்த 100 கோடி மக்களின் மனசாட்சியின் எதிரொலியாய் நீங்கள் பதிவு செய்த வாக்குகள் நிச்சயம் எமக்கு மகிழ்ச்சியே!

 

 

ஆம்! பல வருட அரசியல் ஸ்திரமின்மையின் பாதகங்களின் தாக்கங்களிருந்து ஒரு முழு அரசாங்கத்தை ஏற்படுத்தியிருந்த கோடிக்கணக்கான இந்தியர்களின் எதிர்பார்ப்பை, தீர்ப்பை தவறாய் புரிந்ததினால் தற்போதைய மத்திய அரசின் செயல்பாடுகள், அதன் முடிவுகள், திறமை ஆகியவற்றின் மீதான தீர்ப்பாகவே பார்க்கிறோம்!

 

 

நரேந்திர மோடி!

எம் தமிழக மக்களுக்கு அறிமுகமில்லாதவர் தான்! தமிழகத்தில் வெற்றி பெறாதவர் தான். ஆனால் ஒட்டு மொத்த இந்தியாவும் நம்பி ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்ததுக்கு வந்த வேலையை விடுத்து சொந்த வேலையை முடுக்கி விட்ட வியாபாரியைப் போல் கட்சிப் பணிகளிலும், கொள்கைகளிலும் மட்டும் கவனம் செலுத்திய கனவான்!

 

 

முந்தைய தூங்கு மூஞ்சி அரசாங்கங்கள்!!

பாரதம் விடுதலை அடைந்து 67 ஆண்டுகளில் நாம் பெருமை பட்டுக்கொள்ளும் படி எந்த முன்னேற்றமும் இல்லை என்பதே உண்மை! பரங்கியன் ஆட்சியின் எச்சமாய் இந்திய அரசியலமைப்பு ஆகிவிட்டதோ எண்ணுமளவுக்கு இந்த நாட்டை ஆண்ட தலைவர்கள் மக்களை ஜடமாய், முடமாய், மதத்தால், மொழியால், இனத்தால், சிதைத்து, கொழுத்து, வாழ்ந்து சென்று விட்டனர்.

மக்களாக, மக்களால், மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட குடியுரிமை தத்துவம் வெறும் கண் துடைப்புக்காய் பயன்படுத்தப்பட்டதிலிருந்தே அரசியல் தலைவர்களின் தேச நலன் மற்றும் அவர்களை தேர்ந்தெடுத்த மக்களின் திறன் அறியலாம்.

நம் பாரத நாட்டை சூறையாடிய பரங்கியனுக்கும் இந்த நாட்டை அவனுக்கு பின் ஆண்ட நம்மவர்களுக்கும் பெரும் வித்தியாசம் ஒன்றுமில்லை. அவன், அவன் நாட்டிற்காக திருடினான். இவர்கள் தன் வீட்டிற்காக திருடினர்.

 

 

நாடு

இப்போது வல்லரசுகளாக தம்மை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் எப்பேர்பட்ட ஜாம்பவான்களுக்கும் அவர்கள் உருவாகும் முன்னரே கோலோச்சிய நாடு பாரதம். இப்போது உலகின் மாபெரும் மொழியாக பல மொழிகளின் சங்கமத்தோடு கறைபடிந்திருக்கும் மொழிகளெல்லாம் உருவாகும் முன்பே தனி மொழி, கலை, இலக்கியம் கண்ட நாடு. பாரத நாடு. இப்போது பெரும்பான்மையாக பின்பற்றப்படும் பல மதங்களுக்கு அவை தோன்றும் முன்பே வாழும் கலை உணர்ந்து மதமின்றி மதமென்றின்றி பண்பாட்டுடன் வாழ்ந்த புண்ணிய பூமி பாரத நாடு

 

 

ஹை-டெக் அரசாங்கம்

ஆம்! இப்போதைய அரசாங்கத்தை அப்படித்தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அதன் தலைவர் தேர்தலில்கூட பிரசாரத்தில் புதுமை! சொல்லும் கருத்தில் புதுமை.பண்ணிய வியூகத்தில் புதுமை. இப்படி எல்லாவற்றிலும் புதுமை படைத்து காட்டிய தலைவர், ஆட்சிக்கு வந்தவுடன் சில முக்கியமான சுவாரசியமான நடவடிக்கைகள் புதுமையாக இருந்தது.

 

INC Logo
INC Logo

 

பிறகு அவர் தேர்தலில் ஆளும் கூட்டணி அரசாங்கத்தை எதிர்த்து என்னென்ன தாக்குதல் தொடுத்தாரோ அவற்றிலெல்லாம் சத்தமின்றி பின்வாங்கி அவர்கள் செய்ததையே இவர் செய்வதாகக் காட்டிக்கொண்டது அதை விட புதுமையாக இருந்தது. இதை தாமதமாக புரிந்து கொண்ட முன்னாள் ஆட்சியாளர்கள் ஹை-டெக் அரசாங்கத்தை U-டர்ன் அரசாங்கம் என்று கேலி பேசியும் நமது புதிய அரசு அமைதியாய் இருந்தது அதை விட புதுமை!

 

 

நாங்கள் மாற்றத்தை கொண்டு வருவோம் என்று ஒரு வல்லரசில் ஆட்சியை பிடித்த ஒருவரை குடியரசு தின விழாவிற்கு அழைத்து சிறப்பித்த புதுமை அற்புதம்! இங்கே அனைவரும் – அனைத்து மதத்தினரும் தத்தம் விருப்பத்திற்கிணங்க வாழும் சூழல் நிலவுவதாக கூறிவிட்டு தன் நாடு சென்ற பிறகு காந்தி பிறந்த நாட்டில் நடப்பவை காந்திக்கே பொறுக்காது என்று பேட்டி கொடுத்த புதுமையும் பிடித்திருந்தது.

எனக்கு ஒன்றே ஒன்று புரியவே இல்லை. நான் படிக்கும் காலம் தொட்டே இந்த சந்தேகம் உண்டு. காந்தியடிகள் தான் இந்தியாவா? இங்கே மக்களே இல்லையா? அவர்கள் யாரும் விடுதலைக்காக போராட வில்லையா? காந்தியடிகள் தலைமை தாங்கி நடத்திக் கொடுத்தார் அதற்கு அவருக்கு நாம் கடமைப் பட்டவரே! ஆனால் அவர் பின்னால் தத்தம் குடும்பம் குழந்தைகள் துறந்து போராடிய தோல் கொடுத்து நின்றவர்க்கு நாம் மட்டுமல்ல காந்தியடிகள் தான் என்ன செய்து விட்டார்?

ஒரு நாட்டில், அந்நாட்டின் பூர்வ குடிகளை கொன்று விட்டு அதில் குடியேறி அரசாலும் முட்டாள் தேசத்தின் – துரோகிகளின் குடிலின் தலைவனொருவன் எம்பாரத தேசத்தைப் பழிப்பதா? அதை நாம் பொறுப்பதா? காந்தியடிகளை கையிலெடுத்து பேசும் அவன் நிலையென்ன?

 

 

 

அத்துரோகிகளின் குடிலிலிருந்து வெளிவரும் ஒரு நாளிதழ் பாரத தேசத்தின் தலைவரை மதத்தின் பெயரால் நடக்கும் செயல்களில் எதிர்வினை காட்டாமிலிருப்பது, ஒன்று இதை தடுக்கும் திறம் இல்லை அல்லது அதற்கு ஆதரவாய் இருப்பது ஆகிய இரண்டு காரணங்களை தவிர வேறெதுவும் இருக்க முடியாது என்று தூண்டும்படி செய்தி வெளியிடவைத்தது யார்?

 

 

 

அத்துரோகிகளின் குடிலுக்கும் டெல்லி தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்? தற்போது பாரத தலைவர் ஒரு மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மதங்களுக்கெதிரான நடவடிக்கைகள் நிச்சயம் கண்டிப்புக்குரியது என பேச காரணம் என்ன?

 

 

கடந்த இரு நாட்களில் அத்துரோகிகளின் குடிலில் இந்தியர்களும் அவர்கள் வழிபடும் இடங்களிலும் வன்முறைகள் நிகழ்ந்தது எப்படி? இப்போது இதற்கு அத்துரோகிகளின் தலைவன் தான் காரணம் எனலாமா? ஆனால் நமக்கும் அவர்க்கும் அதுதான் வித்தியாசம். என்றுமே சிங்கம் தன் குகையில் தான் சௌகரியமாக இருக்க முடியும். அதுபோல் நம்மவர்களும் செல்வத்திற்கு ஆசைப்பட்டு சென்றால் இப்படித் தான் நடக்கும்.

 

 

 

டெல்லி மக்களுக்கு நன்றி!

Aam Aadmi Party Logo
Aam Aadmi Party Logo

நிச்சயம் நாம் எந்த கட்சியையும் ஆதரிப்பவர் அல்லர். நாட்டில் பதவிக்கு வரும் யாராவது பொதுவாக நடப்பார்களா? நேர்மையாக செயல்படுவார்களா? என்று எண்ணி நம்பி வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான இந்தியர்களில் அடியேனும் ஒருவன்.

இந்த அரசாங்கம் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய துறைகளான விவசாயம், கல்வி, மருத்துவம் இவற்றை விடுத்து நீங்கள் உங்களை நாயகனாக படம்

BJP logo
BJP

பிடித்து காட்டிக்கொள்ளும் செல்பிகளில் ஆர்வமில்லை! நீங்கள் மக்களிடம் உரையாட கையாளும் நவீன தொழில் நுட்பங்களின் பயன் குறித்து வியப்பு இல்லை.

ஆனால் தயவு செய்து இந்தியர்களை கூலியாட்களாய் மாற்றி விடாதீர். இதைப் படித்துவிட்டு கூலியாட்கள் என்றால் கேவலமானவர்கள், கூலியாட்கள் என்றால் அடிமைகள், கூலியாட்கள் என்றால் அடிமட்டத்திலிருப்பவர்கள் என்று பொருள் படும் படி எழுதி விட்டான் இவனென்று எந்த முட்டாளும் சொல்வதை நான் விரும்பவில்லை.

Kiran Bedi, CM Candidate, BJP
Kiran Bedi, CM Candidate, BJP

அம்மூடர்களுக்கான பதில்: கஷ்டப்பட்டு சிரமப்பட்டு உடல் உழைப்பினால் தமது வாழ்க்கை வாழும் ஒவ்வொருவர் கனவும் குறைந்த பட்சம் மரியாதை, கவுரமான வாழ்க்கை சூழ்நிலை நிம்மதியான இருப்பிடம் தான்.

“மேக் இன் இந்தியா” என்று இந்தியாவில் அயல் நாட்டினரை தொழில் தொடங்க வைத்து, இந்தியர்களுக்கு

Narendra Modi
Narendra Modi

வேலை வாய்ப்பு கிடைக்கும், பணம் புழங்கும் என்று ஆதி காலத்து பொய்யை, புதுமையாய், வித்தையாய் காட்டும் தலைவரொருவருக்கு நீங்கள் வைத்த செக்காகவே இம்முடிவை பார்க்கிறோம்!

நான் பள்ளி சென்ற காலத்திலே பெட்ரோல் 1 பேரல் 45 டாலருக்கு விற்றபோது பெட்ரோல் விலை ரூபாய் 34.80 இன்று 1 பேரல் 40 லிருந்து 50 டாலருக்குள் விற்கப்படும் போது இன்றைய பெட்ரோல் விலை ரூபாய் 58.++. இதில் 15லிருந்து  20 சதவீதம் வரை அரசாங்கமே (மத்திய+மாநில) வரியாக வசூலிக்கின்றன. முந்தைய அரசாங்கத்தில் ரூபாய் 68.++ விற்றனரே! நாங்கள் வந்து குறைத்திருக்கிறோம் என்று ஏதாவதொரு முட்டாள் முனியன் பதில் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அம்முனியனுக்காக: உஸ்பெகிஸ்தான் நாட்டில் ரஷ்யாவின் தலையீட்டை தடுக்க ரஷ்யாவை பொருளாதார ரீதியாக முடக்க ஐரோப்பிய இணையம் ரஷ்யாவின் எண்ணெய் வணிகத்தை தடை செய்துள்ளது. வழக்கமாக வளைகுடா நாடுகளின் எண்ணெய் விற்பனை விலை எப்பொழுதெல்லாம் சரியுமோ அப்போதெல்லாம் தனது எண்ணெய் உற்பத்தியை நிறுத்தி விலை சரியாமல் பார்த்துக்கொள்ளும் துரோகிகளின் குடிலின் கைக்கூலி தேசம் மற்றும் அதன் தலைவன் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக உற்பத்தியை நிறுத்தாமல் மேலும் கூட்டினான். அதுவும் அத்துரோகிகளின் குடிலின் ஆணையால். தனக்கு ஒரு கண் போகும்தான்! ஆனாலும் தன் எதிரிக்கு இரண்டும் போக வேண்டும் என்ற நல்லெண்ணம் தான் காரணம்.

எப்போதுமே சாணக்கியன் கூற்றொன்று உண்டு. ‘எதிரிக்கு எதிரி நண்பன் மட்டுமல்ல. நம் நண்பனுக்கு எதிரி நமக்கும் எதிரியே!” சீனா வாலாட்டிய போதும் வேறு எவர் நம்மிடம் வாலாட்டும் போதும் நம்மை உடனிருந்து அரவணைத்து செல்லும் நம் நண்பனான ரஷ்யாவுக்கு யாராவது கெடுதல் செய்தால் நாம் உடனிருக்க வேண்டாமா? அதை விடுத்து அத்துரோகிகளோடு கைகோர்க்கும் கயமைக்கும் கொடுக்கப்பட்ட சவுக்கடியாகவே உணர்கிறோம்! வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கும் அதன் தலைவருக்கும் வாழ்த்துக்கள்!!

 

Arvind Kejriwal
Arvind Kejriwal

 

ஆனாலும் கூட நாம் ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக எதுவும் செய்துவிட முடியாது; அடுத்த தேர்தல் வரை. அவர்களாக இனிமேலாவது தம் பொறுப்புணர்ந்து இந்திய பாரம்பரியத்தை பின்பற்ற வேண்டும் என்பதே எமது ஆவல்!

 

அடிப்படையில் ஒழுங்கின்றி அலங்காரத்தில் கவனம் செலுத்துவதென்பது நடிப்பதன்றி வேறில்லை! அடியேனின் பதிவில் பிழையேதேனும் இருந்தாலும் தாயுள்ளத்தோடு மன்னித்து மறந்து கருத்தில் மட்டும் கவனம் கொள்ள வேண்டுகிறேன்!

About The Author

Related posts