நன்றி! : செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகி, மேரில்போன் கிரிக்கெட் கிளப்
காப்புரிமை: மேரில்போன் கிரிக்கெட் கிளப் (MARYLBONE CRICKET CLUB)
கிரிக்கெட் 250 வருடங்களாக ஒரு தொடர்ச்சியான விதிக்குறியீடுகளின் முலம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இந்த குறியீடுகள் அவ்வப்போது அந்தந்த கால கட்டங்களில் அதன் நிர்வாகிகளால் திருத்தங்களுக்கு மற்றும் சேர்க்கைகட்கு உட்படுத்தபட்டன. கி.பி. 1787ம் வருடம் தோன்றிய மேரில்போன் கிரிக்கெட் கிளப் (MARYLBONE CRICKET CLUB (MCC)) இந்த குறியீடுகள் மற்றும் திருத்தங்கள் செய்யும் ஒரே அதிகாரியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சங்கமே உலக காப்புரிமையை வைத்திருக்கிறது.
250 வருடங்களாக இந்த அடிப்படை கிரிக்கெட் விதிகள் குறிப்பிடத்தக்க வகையில் நின்று வந்துள்ளன. விளையாட்டு வீரர்கள் காலங்காலமாக விதிகளின்படி மட்டுமல்லாது உண்மையான விளையாட்டு உணர்வுடனும் விளையாட பயிற்சி மேற்கொள்வது தான் இதன் உண்மையான காரணமென்று கருதப்படுகிறது.
2000ம் ஆண்டு, MCC இந்த விதிகளை 20ம் நூற்றண்டிற்கேற்ப திருத்தி மீண்டும் எழுதியது. இந்த குறியீட்டின் முக்கியமான புதுமையானது விதிகளுக்கெல்லாம் முன்னுரையாக கிரிக்கெட் உணர்வை அறிமுகப்படுத்தியதுதான்.அதே சமயம் கடந்த காலங்களில் இது உள்ளடக்கமாக புரிந்து விளையாடும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. MCC, இந்த முன்னுரை முலம் கிரிக்கெட்டின் தனித்தன்மையையும் அனுபவத்தையும் தக்கவைக்க தெளிவான வழிகாட்டுதல் கிட்டும் என நம்பியது. அதுமட்டுமல்லாது குறிப்புகளை தவிர்க்கவும், அனைத்து புள்ளிகளையும் விதிகளுடன் இணைக்கவும், எங்கு அவசியமோ அங்கெல்லாம் தெளிவின்மையை போக்கவும், அணித்தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடுவர்கள் அவர்கள் எந்த விளையாட்டு நிலைகளில் விளையாடினாலும் கிரிக்கெட்டை தொடர்ந்து அனுபவிக்கவும் இந்த புதுமை சேர்க்கப்பட்டது. MCC கிரிக்கெட்டின் ஆட்சிக் குழுவான சர்வதேச கிரிக்கெட் சபையின் (International Cricket Council (ICC) ) முழு உறுப்பினர்களிடம் பரவலாக ஆலோசனை நடத்தியது. மேலும் நடுவர் மற்றும் ஸ்கோரர் சங்கங்களுடன் நெருக்கமான ஆலோசனை செய்தது. அது மட்டுமல்லாது உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நடுவர்களின் , விளையாட்டு வீரர்களின் கருத்தையும் இதில் சேர்த்துகொண்டது.
இந்த சமீபத்திய பதிப்பு (கிரிக்கெட் விதிகள் 2000 குறியீடு ,4வது பதிப்பு – 2010), அக்டோபர் 2000 லிருந்து நடைமுறை பயன்பாடு மற்றும் அனுபவங்களிருந்து பல்வேறு அவசியமான சேர்க்கைகளை உட்கொண்டுள்ளது.
*முன்னுரை தொடரும் …