Vels View – 16.05.2014
The poet is in my Mother Tongue (Tamil)
அடியேன் (Am)
எனக்கொரு சட்டம்; கட்டுப்பாடு!
அதில் பொது சட்டத்திற்கு முன்னுரிமை!
உலகம் எப்படி இருந்தாலும் அதில்
கவனம், ஆர்வம் இல்லை! ஆனால்
அக்கறையும் கவலையும் உண்டு!
என் சுய கட்டுப்பாட்டில்
பிசகும் விலகலும் இருந்தால் மட்டுமே
என் மேல் கோபம் வரும்
அதில் யார் குறுக்கிட்டாலும்
அதே நிலை தான் அவர்க்கும்!
எங்கும் எதிலும் என் சிந்தனை
முழுமையும் என்னைப்பற்றியே!
எனக்குள் யாவரும் நல்லவரே!
எங்கும் எதிலும் என் பார்வை
முழுமையும் என்னைப்பற்றியே!
எனக்குள் யாவரும் சிறந்தவரே!
எள்ளிலும் நன்மை காண்பதே
என் முயற்சி! எனினும்
முள்ளிலும் எழில் காணும்
பார்வை என்னுடையது!
இவை அனைத்தும் நான்
என்னும் கர்வமில்லை எனக்கு!
அடியேனின் சிறு அடையாளம்
என்பதில் நம்பிக்கை உண்டு!
இறுதியாக எனினும்
முடிவல்ல!
எங்கோ எப்படியோ
வாழலாம் என்னும் போக்கு
எனக்கில்லை!
உலகம் எப்படி இருந்தாலும்
இப்படித்தான் வாழ வேண்டும்
எனும் உறுதி உண்டு!
TRANSLATION IN ENGLISH
will be updated