
Story Highlights
- ஓர் தந்தையின் மறுபிறப்பு
Vels View – 17.05.2014
புதிதாய் பிறந்தேன்!!
எனது அகவை 26ல்
பிறந்தவன்
அகவை 34ல்
அளித்த பிறந்த நாள் வாழ்த்தில்!!

அகவை ஏழரையில்
அவனறிவில் மகிழ்ச்சி!
மிக்க மகிழ்ச்சி !!

வாழ்த்து அட்டை
தயார் செய்ய
எழுந்த சிந்தனை ஆச்சர்யம்!!

அதில் எழுதிய
வார்த்தைகள்; விதம்
அனைத்தும் அற்புதம்!!

அவன் வரைந்த
பூக்கள் மற்றும் தோரணம்
அளவிலா கலை ஓவியம்!!

கிடைத்ததைக் கொண்டு
நினைத்ததை முடித்ததில்
அறிவது அவன் அறிவு மற்றும்
சிக்கனம்!!
ஐந்து வயது
அழகிய தெய்வம்
அள்ளி வழங்கிய
அணைப்பு மற்றும் அளவிலா முத்தம்!!
தமிழிலில்லை என்றாலும்
கொஞ்சும் மழலை வாழ்த்து
அற்புதம்!
நேரில், நிழலில்
அலையில், வலையில்
வாழ்த்து வழங்கிய
அறிந்தும் அறியாத
பழகிய, பார்த்த
புரிந்த, புதிதான
அன்பு நெஞ்சங்கள்!
உங்கள் அனைவரின்
வாழ்த்தாலும்
அன்பாலும்
புதிதாய் பிறந்தேன்!!!