Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

லிங்கா – திரை விமர்சனம்

காப்பிரைட் கட்டுப்பாடு காரணமாக இப்படம்-லிங்கா! Due to copyright restriction, Art by Vels

லிங்கா – திரை விமர்சனம்

இது வெறும் திரை விமர்சனம் மட்டுமல்ல! இதில் சில முக்கியமான பதில்களும் உண்டு! அப்பதில்கள் எனது (நீக்கப்பட்டது) சகோதரர்களுக்கானவை!

மறுப்பு

  • இந்தப் படங்கள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை
  • இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது.
  • இவை எனது சமுதாய அக்கரையில் பதிவு செய்யப்பட்டது.
  • எனினும் இதில் எவ்விதமான விவாதத்திற்கும் போட்டிகளுக்கும் இடமில்லை.
  • இப்பதிவில் தங்களுக்கு உடன்பாடில்லை எனில் படிக்க / பார்க்க வேண்டாம்.
  • அப்படியே படித்து / பார்த்து விட்டாலோ இதில் விவாதித்து உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.

நன்றி!!!

Translation in English

Disclaimer

  • This post is not for hurting / insulting anybody
  • This post is the sole property of the Author
  • This post is being published in the view of Welfare of Society
  • We do not entertain any discussions / arguments regarding the post
  • Please Avoid reading if you disagree with the post
  • Even if you have read unknowingly kindly leave it without wasting your valuable time

Thanks

Superstar Rajini's latest blockbuster
Lingaa

லிங்கா: படத்தின் கதையைப் பற்றி பார்ப்போம்! பாரதம் விடுதலை பெறும் முன்னர் ஆங்கிலேயனுக்கு அடிமைப்பட்டு அவர்களின் ஆட்சியை ஏற்று மன்னர் பதவியையும் சொத்துக்களையும் காப்பாற்றிக்கொண்ட ஓர் குறுநில மன்னன், மன்னனின் வாரிசான ரஜினி இங்கிலாந்தில் கட்டிடக்கலையில் பொறியியல் கல்வி படித்தவர். கூடவே குடிமையியலும் படித்தவர். எனவே அவர் ஆங்கிலேய அரசாங்கத்தின் ஜில்லா அதிகாரியாகவும் பணிபுரிகிறார். தனது பதவியால் தனது நாட்டுக்கு நாட்டு மக்களுக்கு தான் நினைத்த நல்லதை செய்ய முடியாத போது தனது படிப்பின் உதவியால் தனது ராஜ வாழ்க்கை, வசதிகள் துறந்து பல சூழ்ச்சிகளை சமாளித்து தனது முயற்சியில் வெற்றி அடைகிறார். அவ்வெற்றிக்காக அப்பெயரையும் இழக்கிறார்; அவப்பெயரையும் சுமக்கிறார். நமக்கு உதவிய தலைவர்களுக்கு நாம் என்று தான், என்ன தான் செய்திருக்கிறோம்? அவ்வாறே அவரது வாரிசும் மறக்கப்படுகிறார்; திருடன் ஆகுமளவிற்கு! அப்படி அந்த ராஜா ரஜினியின் முயற்சியில் பலனடைந்த மக்களுக்கு சுதந்திரத்துக்குப் பிறகு சுயநலமான அரசியல்வாதியால் கேடு வருகிறது! அதை ராஜா ரஜினியின் பேரனான நிகழ்காலத்தில் திருடனாக வாழும் ரஜினி முறியடித்தாரா?  அம்மக்களை காப்பாற்றினாரா? என்பதே கதை! ரஜினி முறியடித்தாரா?, காப்பாற்றினாரா? என்ற கேள்வியே தவறு!!

Super Star: Rajinikanth in Words (Due to Copyright restriction) / காப்பிரைட் கட்டுப்பாடு காரணமாக இப்படம்- ரஜினி!
Super Star: Rajinikanth

இனி திரைக்கதையைப்பற்றி பார்ப்போம்!

மிகவும் நேர்த்தியாக நெய்யப்பட்ட திரைக்கதை!
நிகழ்காலத்தில் ஒரு அசம்பாவிதம் பற்றியும் அதன் பரிகாரம் பற்றியும் கூறி விட்டு, படத்தின் நாயகனை படோபடமாக அறிமுகப்படுத்தி எதிர்மாறாக திருப்பம் வைத்து திடீரென்று கதாநாயகியையும் அதிரடியாக அறிமுகப்படுத்தும் திரைக்கதைக்கு ஒரு சலாம்! கதாநாயகனின் நிகழ்கால திறமை, கொள்கை, குணத்திற்கு சான்றாய், சில காட்சிகள், நாயகன், நாயகியின் காதலை குறுங்கவிதையாய் காட்ட சில காட்சிகள். அப்படியே நம்மை கடந்த காலத்துக்கு இட்டு செல்ல சில காட்சிகள். கடந்த காலத்தைப் பற்றி விவரிக்க தனிப்பகுதியே உண்டு! அதனால் இப்பொழுது எம்மை பொறுத்தருள்க!! கடந்த காலத்திலிருந்து மீண்டும் நிகழ்காலத்திற்கு கொண்டு வந்து சுபம் போடுதல் வரைக்கும் இயக்குனர் உண்மையாகவே உழைத்திருக்கிறார்!

ர3- மூன்று 'ர' (3 X R)
ர3-ர (ஜினி), (ஹ்மான்), (விகுமார்)

ரஜினியைப் பற்றி பிறகு பார்ப்போம்! ஏனென்றால் படம் முழுவதும் நிறைந்த ஒருவரை இறுதியாகவே பார்ப்போம்

ஆஸ்கார் நாயகர்: இவர் இசையில் பாடல்கள் இனிமையாகவும் படத்துடன் இயைந்தமைந்துள்ளது. சில இடங்களில் சிறிது இரைச்சல் உள்ளது.ஒரு வேளை நான் கேட்ட ஒலி அமைப்பில் பிழையோ? தெரியவில்லை! பொதுவாக இசை புயலின் பாடல்கள் தனியே கேட்டாலும் மனதில் ஓட்டும். இம்முறை இசையில் புதுமை தெரியவில்லை. அதனால் மனதில் ஒட்டவில்லை.

ஃபினிஷிங் குமார்: மிக வேகமாக இயக்குபவர்! திறமையாக வேலை வாங்குபவர் என்று பேரெடுத்த சீமான்! மிகவும் மெனக்கெட்டு பணியாற்றி நம் கண் முன்னே அணை கட்டுவது, சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் இழிநிலை ஆகியவற்றை கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் என்றால் அது மிகையல்ல. இந்தக் கதைக்கு வேறு யாரும் இதை விட நல்ல திரைக்கதை அமைத்து விட முடியாது என்பதே உண்மை! ஒரு சூப்பர் ஹீரோவை வைத்து அவரின் ஸ்டார் மதிப்பையும் காப்பாற்றி கதையையும் காப்பாற்றிய அவரது முயற்சி நிச்சயம் பாதிக்குமேல் வெற்றி தான்.

ரஜினி: மூன்றெழுத்து மந்திரம்!  ரஜினியைப்பற்றி வேறெதுவும் சொல்வதற்கில்லை!ரஜினி என்ற பெயரே போதும்! படம் ஓடும்! ரஜினி என்ற பெயரே போதும் எக்கதையையும் தாங்கும்! இவ்வளவு படங்கள் நடித்த பிறகு அவர் வருத்தத்தோடு இதை சொல்லி இருக்க தேவையில்லை!..என் படங்களில் கதை இல்லை என்று சொல்வது தவறு! இப்படத்தில் பாருங்கள் கதையை  என்று! திரு. ரஜினி அவர்களே! நாங்கள் தங்களிடம் எதிர்பார்ப்பது கதையை அல்ல! பொழுது போக்கு! ஒவ்வொரு தனி மனிதனின் ஆன்மாவாக நீங்கள் திரையில் உலா வருகிறீர்கள்!

இப்போது வலை தளங்களில் புற்றீசல் போல் விமர்சகர்கள் வளர்ந்து விட்டனர் (யாரறிவார் நீயும் அப்படிப்பட்ட புற்றீசல் தான் என்று யாராவதொரு முட்டாள் / புத்திகெட்ட/கேடு குணம் நிறைந்த/வகுப்பு வாதி/ மத வாதி சகோதரன் கமெண்ட் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!) அவர்களில் சிலர் ரஜினி மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா? என்கின்றனர்! ஆம்! நிச்சயமாக! ரஜினியை விமர்சனம் யார் செய்யலாம்! ரஜினியை விட அதிகம் அத்துறையில் பணியாற்றியவர் யாரோ அவர் விமர்சனம் செய்யலாம்! இன்னும் சிலர் இதன் தொடர்ச்சியாக “100 ரூபாய் 500 ரூபாய் 1000 ரூபாய் பணம் கொடுத்து படம் பார்த்து ஏமாந்து போன ரசிகர்கள் தங்கள் ஏமாற்றத்தை இவ்வாறு பதிர்கின்றனர்! இதிலென்ன தவறு உள்ளது!”, என்கின்றனர்! சரி பணம் கொடுத்தது படம் பார்க்கத்தானே! படமே அவருக்கு சொந்தமாகிவிடுமா என்ன? சரி இவ்வகையான விமர்சனங்கள் அக்காலத்தில் வாய்மொழியாக பரவி படங்களை வெற்றி/தோல்வி அடையச் செய்தன!அது போல் விஞ்ஞான வளர்ச்சியில் வலைதளங்களில் பகிர்கின்றனர்! இதிலென்ன தவறு? என்ற உங்களது கேள்வி எனக்கு புரிகிறது. விமர்சனங்கள் வரம்பு மீறும் போது விபரீதங்கள், வன்முறை எண்ணங்கள் தலைப்படுவதை கண்டிக்க வேண்டியதும், ஒதுக்க வேண்டியதும் நமது கடமையே!

இப்பதிவின் காரணமும் அதுவே! நான் முன்பே குறிப்பிட்டிருந்ததைப் போல் என் (நீக்கப்பட்டது) சகோதரர்களுக்கான பதில் இதுதான்! படம் நல்லா இருக்கு என்பது, உங்களுக்கு / உங்கள் பிரியமானவர்க்கு படம் பிடித்திருக்கலாம். அல்லது அப்படத்தின் நடிகர்கள், இசை, இயக்கம் போன்றவை பிடித்திருக்கலாம்
படம் சுமாராக இருந்தது! எனக்கு பிடிக்கவில்லை என்பது, நீங்கள் எதிபார்த்த அளவிற்கு இல்லாமல் போகலாம்
படம் பிடிக்கவில்லை என்பது கூட ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ளலாம்; அப்படத்தின் கருத்தின் காட்சிகளில் உடன்பாடில்லையெனில்! 

ஆனால் வலைதளங்களில் பதிவிட்டிருக்கும் கருத்துக்கள் மிகவும் கண்ணியமற்ற முறையிலும் இன மான வகுப்பு வாத பிரச்சினைகளை உண்டாக்கும் விதமாகவும், அக்கருத்துக்களை பதிந்தவரே மனசாட்சியோடு திரும்பப் படித்துப்பார்த்தால் வெட்கப் படும் விதமாகவும் உள்ளன! இது எனது சகோதர்களின் முட்டாள் தனத்தினால் நிகழ்ந்தது! தவறான புரிதலினால் விளைந்தது!

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், ரஜினி என்பது மூன்றெழுத்து மந்திரம்! ஒவ்வொரு தனி மனிதனின் மனசாட்சியின் பிம்பம், இன்னும் விளக்கிச் சொன்னால் அம்பியின் ‘அந்நியன்’ போல். மிகவும் போட்டி, சூது மற்றும் குளிர் பகை சூழ்ந்த நமது சமகாலத்தில் ஒரு மனிதன் நினைக்கின்ற எந்த நல்ல காரியத்தையும் நினைத்தது போல் செய்ய முடியாது. தவறை தட்டி கேற்க முடியாது.குற்றவாளியை தண்டிக்க முடியாது. இப்படி முடியாத பல விசயங்களை திரையில் சாத்தியப்படுத்தி நம்மை மன ரீதியாக முன்னேற்றிச் செல்லும் மந்திரமே ரஜினி!

எல்லா சூழ்நிலைகளிலும் நமது மக்களுக்கு அப்படி ஒரு ஆக்கப்பூர்வமான சக்தி தேவைப்படுகிறது. முன்பு மக்கள் தலைவர்; இப்போது சூப்பர் ஸ்டார். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் காலத்தின் கோலம் தெரியாத மூடர் சிலர் (தங்களை பலர் என்று தாங்களே நினைத்துக்கொள்ளும் “சிலர்”) அடுத்த சூப்பர் ஸ்டார் இவர் தான்  அவர் தான் என்று அடித்துக் கொள்கின்றனர்! அடுத்த மக்கள் தலைவர் என்று திரிந்தவர்களின் நிலையறியா மூடரவர்!

எங்களுக்கும் தெரியும் முட்டாள்களே! ரஜினியின் பூர்விகம் கர்நாடகா தான். வம்சாவளி மராட்டியம் தானென்று! படத்தில் மட்டும் சொத்தை விற்று தானம் செய்கிறார்! என்று நீங்கள் சொல்லும் போது உங்கள் முட்டாள்தனம் தான் தெரிகிறது! படங்களில் அரசியல் வசனங்கள் வைத்து ரசிகர்களை உசுப்பேற்றி படம் பார்க்க வைத்து சம்பளம் அதிகம் வாங்கி சொகுசாய் வாழ்ந்து விட்டு தமிழ் தமிழனுக்காக எந்தக் காரியமும் செய்யவில்லை என்று நீங்கள் சொல்லும் போது, நீங்கள் என்ன செய்து விட்டீர்கள் இதை கேற்பதற்கு;தமிழ் நாட்டில் பிறந்ததை தவிர? இனம் மானம் வகுப்பு வாரியாக பேசும் கருத்துக்களை பதியும் நீங்கள் அதிகபட்சமாக என்ன செய்திருப்பீர்கள்; சுய விளம்பரத்தை தவிர!

என் (நீக்கப்பட்டது) சகோதரர்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தால் இன்னும் இரண்டு பக்கம் வரும்!
எனவே படத்தைப் பற்றி பார்ப்போம்!

லிங்கா படத்தில் முக்கியமாக சொல்ல வேண்டிய ஒரு விசயம்! படத்தை அனைவரும் குடும்பத்துடன் சென்று ரசித்துப் பார்க்கலாம்! குறிப்பாக குடித்துக்கொண்டே ஆடும் கானா பாடல் இல்லை! புகை பிடிக்கும் காட்சிகளும், முகம் சுளிக்கும் காட்சிகளும் இல்லை! பல இடங்களில் இயக்குனர் கவனமாக வேலை செய்ததன் பயனாக காட்சிகள் ரசிக்கும் படி உள்ளன. குறிப்பாக சந்தானத்தின் வசனம் ரஜினியின் மதிப்பை குழைக்காமலிருப்பது, இந்தியன் மட்டும் வந்தாப் போதும் என்று ரஜினி சொல்வது, படத்தின் இறுதியில் ரஜினி ரவிக்குமாரிடம் பேரைக் காப்பாத்திட்டீங்க ரொம்ப நன்றி என்பது! நாயகனை உயர்த்திக் காண்பிக்க சில பல இடங்களில் இலக்கிணப்பிழை செய்தாலும் கூட

ரஜினி படங்களில் ரஜினி மட்டுமே இலக்கிணம். எப்போதும் போல் ரஜினியின் எல்லாப் படங்களையும் போல் ரஜினியும் ரஜினியின் வில்லன்/வில்லி/நாயகியுமே படத்தை முழுவதும் தூக்கிப் பிடித்து சென்றுள்ளனர்! நிகழ்கால நாயகியாக நடித்தவர் தன் திறமையின் கால்வாசி பங்கை மட்டுமே செலுத்தி பாத்திரத்தை சிறக்கச் செய்துவிட்டார்! புதுமுக நடிகை நிச்சயம் திறமைசாலி தான்! தற்கால ரசிகர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சிதான்! உண்மையிலே இந்தப்படத்தின் பலமாக இயக்குனர் செதுக்கியிருப்பது சுந்தரராஜன் அவர்களைத்தான்! நிச்சயம் கோடி சாபம் பெறுவார்! அதுவே அவர் நடிப்பிற்கு விருது!

நாம் விமர்சனத்தின் இறுதிப்பகுதிக்கு வந்து விட்டோம்! ரஜினியின் படங்களில் நாங்கள் எதிர்பார்ப்பது கதையை அல்ல! ரஜினி படம் என்றால் எங்களுக்கு அதுவே எல்லாவற்றிலும் சிறந்த பொழுது போக்கு! நாங்கள் எங்கள் நேரத்தை இனிமையாக கழிக்கவே பணம் கொடுத்து படம் பார்க்கிறோம்! இந்தப் படமும் நிச்சயம் அந்த வரிசையிலான படம் தான்.

இயக்குனர் இன்னும் கொஞ்சம் எளிமையாக யோசித்திருந்தால் நிச்சயம் படத்தினிடையே ஓடும் ஒரு இறுக்கத்தை தவிர்த்திருக்கலாம்! ரஜினி இயல்பாக சறுக்கும் இடங்களாக காட்டிய இடங்களில் ரஜினியிசம் மூலம் திருப்புமுனைகள் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!

படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடினாலும் சலிப்பே இல்லை! (26 நிமிடங்கள் குறைக்கப்பட்டதை அறிந்து வருந்துகிறோம்; நிச்சயம் புதிதாய் பார்ப்பவர்களுக்கு, அது இழப்புதான்)

குறிப்பு: இந்தப் பதிவில் நான் ஏற்கனவே கூறிய படி கமெண்ட் செய்ய இயலாது! எனது சகோதரர்களே உங்களில் சிலரை (நீக்கப்பட்டது) சகோதரர்கள் என்று அழைத்ததற்கு மன்னிக்கவும்!

மறு தொகுப்பு: 17.12.2014 அன்று செய்யப்பட்டது! திருத்தம்:கடும் சொல் நீக்கப்பட்டது!

About The Author

Related posts