மறுப்பு:குழந்தைகளிடம் வாய் மொழியாய் கேட்டு பதிந்தவை! ரிஷி மூலம், நதி மூலம் யாமறியோம்! யார் மனதையும் புண்படுத்தும் எண்ணத்தில் பதியப்படவில்லை! படித்து சிரிக்க மட்டுமே! சிரித்து மறந்தாலும் சரி! பயன்படுத்தினாலும் சரி! தயவு செய்து யாரையும் கேலி செய்ய பயன்படுத்த வேண்டாம்
குழந்தைகளின் மொழியில் என்றும் பிழையில்லை!
அதைப் பருகும்போது பிணியுமில்லை !
மழலை ரைம்ஸ்
- abcd மொட்ட மாடி!
கீழே விழுந்தா டெட் பாடி!
பொண்ணுக வந்தா மேக் அப்பு!
போலீஸ் வந்தா எஸ்கேப்பு!
பீச்சுக்கு போனா ஜாலி!
சுறாமீன் வந்தா காலி!
- அப்பன் டிப்பன்!
செல் போன் நம்பர்
1 2 3 !
ஈகோ ப்ரீ!
அம்பேரி
சோப்பு டப்பா ப்ரீ!
- ஐஸ் ஐஸ் ஐஸ்!
அஞ்சு பீசா ஐஸ்!
ஆப்பிள் ஜூஸ்!
நீ ஒரு லூஸ்!
- குண்டு பூசணிக்கா!
எப்ப கல்யாணம்?
நேத்து மத்தியானம்!
யாரு வந்தாரு?
அய்யர் வந்தாரு!
என்ன கொடுத்தாரு?
மோர் கொடுத்தாரு!
என்ன மோரு?
வெச மோரு!
என்ன வெசம்?
பாம்பு வெசம்!
என்ன பாம்பு?
மலைப்பாம்பு!
என்ன மலை?
அண்ணாமலை!
- மிஸ்சுக்கிட்ட மாட்டி!
நான் போறேன் ஊட்டி!
ஊட்டிக்குள்ள காடு!
காட்டுக்குள்ள வீடு!
வீட்டுக்குள்ள ஃப்ரிட்ஜ்!
ஃப்ரிட்ஜுக்குள்ள ஐசு!
ஐஸுக்குள்ள தண்ணி!
தண்ணிக்குள்ள கப்பல்!
கப்பலுக்குள்ள ஆளு!
ஆளு பேரு துரை!
விட்டான் பாரு அறை!
மழலைகள் உலகம் அது நாம் விரும்பி விலகிய உலகம்
இழந்தபின் மீண்டும் அனுபவிக்க துடிக்கும் பருவம்