
Story Highlights
- Save for your Lovable Daughter
- செல்வ மகளை செல்வ மங்கையாக்கிட
செல்வ மகள் சேமிப்பு திட்டம் – Sukanya Samridhi Savings Scheme
அப்பாக்களுக்கு மட்டுமல்ல அக்குடும்பத்திற்கே பெண் குழந்தைகள் எப்போதும் செல்வம் தான்; செல்லம் தான்!
நம் செல்வங்களுக்கு நாம் சேமிக்கவும் அவர்களை, அவர்களின் வளமான வாழ்வு குறித்த நமது கவலைகளை அக்கறைகளை புரிந்து கொண்டு மத்திய அரசு அறிவித்திருக்கும் சிறு சேமிப்பு திட்டம் தான் இந்த செல்வ மகள் சேமிப்பு திட்டம் (Sukanya Samridhi)

நன்றி: திருப்பூர் தலைமைஅஞ்சல் நிலையம்
உங்கள் வீட்டில் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் இருக்கிறார்களா?
- உங்கள் செல்ல மகளை செல்வமங்கையாக ஆக்கிட…
- உங்களது அன்பு மகளுக்கு ஆனந்தமான எதிர்காலம் அமைத்திட…
- உங்கள் பெண் குழந்தைக்கு வளமான வாழ்வாதாரம் அளித்திட…
மத்திய அரசு அஞ்சல் துறை மூலம் பாசத்துடன் வழங்கும் மகத்தான சிறு சேமிப்பு திட்டம் தான் செல்வ மகள் சேமிப்பு திட்டம்
சிறப்பு அம்சங்கள்
10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாக குறைந்த பட்ச தொகையாக 1000/-(ஆயிரம் ரூபாய்) மட்டும் செலுத்தி இந்த சேமிப்பு கணக்கினை துவக்கலாம். துவக்க சலுகையாக 02.12.2003 அன்றோ அதன் பிறகோ பிறந்த பெண் குழந்தைகளுக்கும் இந்த சேமிப்பு கணக்கினை துவக்கலாம்.
ஒரு நிதியாண்டில் (ஏப்ரல் முதல் மார்ச் வரையான 12 மாதங்களில்) குறைந்த பட்சமாக ஆயிரம் ரூபாய் மற்றும் அதிக பட்சமாக 1.5 இலட்சம் ரூபாய் வரை தவணை முறையில் (100 ரூபாயின் மடங்குகளாக) உங்களது வசதிக்கேற்ப எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்.
2014-2015 நிதியாண்டில் வருடாந்திர வட்டி விகிதம் 9.1 சதவீதம் கூட்டு வட்டி.
சேமிப்பு கணக்கு துவங்கிய தேதியிலிருந்து 14 வருடங்களுக்கு பணம் செலுத்தலாம் மற்றும் கணக்கு துவங்கிய 21 வருடங்கள் முடிந்த பின்பு, இந்த கணக்கினை முடித்து கொள்ளலாம்.
பெண் குழந்தைகளுக்கு 18 வயது முடிந்த பிறகு, தேவைப்பட்டால் இருப்புத் தொகையிலிருந்து அதிக பட்சமாக 50% தொகையினை அவர்களின் உயர்கல்வி அல்லது திருமண செலவிற்காக பெற்றுக் கொள்ளலாம்.
திருமணத்திற்கு பிறகு முன்கூட்டியே கணக்கினை முடிக்க விரும்பினால் எந்த வித வட்டி இழப்புமின்றி முடித்துக் கொள்ளலாம்.
வாரிசு நியமன வசதி இல்லை.
கணக்கு துவங்க இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
- ஆதார் அட்டை நகல் அல்லது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் நகல்
- பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் நகல்
- பெற்றோரின் (தந்தை அல்லது தாய்) / காப்பாளரின் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் குழந்தையின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
மேலும் இத்திட்டத்தினை நன்கு புரிந்துகொள்ள மற்றும் இதில் கிடைக்கும் இறுதி தொகை குறித்து அறிய தயவுசெய்து கீழ்காணும் மாதிரி கணக்கினைப் பார்க்கவும்!

மேலும் புரிதலுக்காக பாரத ஸ்டேட் வங்கியில் இத்திட்டம் போல் முதலீடு செய்தால் என்ன பயன் கிடைக்கும் என்றும் பார்ப்போம்!
குறிப்பு:
1 முதல் 14 வருடங்கள் வரை ரெக்கரிங் டெபாசிட் ஆகவும், 15 முதல் 21 வருடங்கள் வரை ஃபிக்செட்டெபாசிட் ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது

சாதகங்கள்
- மாதம் ஆயிரம் ரூபாய் என்பது குறைந்த பட்சம் என்றால் கூட 1.5 இலட்சம் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் (100ன் மடங்குகளில்) எப்படி வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம்.
- வட்டி விகிதம் குறையாத பட்சத்தில் வங்கியை விட குறைந்தது ஐம்பதாயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக்கும் வாய்ப்பு
பாதகங்கள்
- பெண் குழந்தைகளுக்கு மட்டும் பொருந்தும்.ஆனால் வங்கியில் யாருக்கு வேண்டுமானாலும் போடலாம்.
- வட்டி விகிதம் வருடத்திற்கு ஒருமுறை மாறக்கூடும்.ஆனால் வங்கியில் நிலையானது.
- வாரிசு நியமனம் இல்லை
எம் தாழ்மையான கருத்து:
இது அடிப்படையில் பொருளாதார திட்டமிடுதலில் அனுபவமில்லாத, ஆர்வமில்லாத குடிமக்களுக்கு இது எளிமையான கவர்ச்சிகரமான உன்னதமான சேமிப்பு திட்டம்!
Great … En paiyanukku enna pannurathu
Gentleman! let us try through bank rd and fd as illustrated