
Story Highlights
- இப்பதிவு பகுத்தறிவு மூடர்களுக்காக!
- பகுத்தறிவில்லாத மூடர்க்காக!!
பகுத்தறிவு மூடர்கள்
- பகுத்தறிவு மூடர்கள்
பகுத்தறியும் திறனிலா மூடரவர்
பகுத்தறிவின் பொருளும் அறியா
பதரவர்!
தொண்டனை சொல்லி பயனில்லை
அவர் தலையும் அவ்வாறே
அறிவி(ய)ல் இல்லாதவர்!
பனையிருந்தால் கள் இறக்குவரென்று
பனையனைத்தும் மண் சாய்த்த
மடையரவர்!
பனையிருந்தால் நிலநீர் நிலைக்குமென்று
பகுத்தறிந்த என் மூதாதையரின்
நுண்ணறிவில்லாத எச்சமவர்!

- பகுத்தறிவு குருடர்கள்
பகுத்தறிவு குருடர்கள்!
எம் வாழ்க்கை நெறி முறைகளின்
இலக்கிணப் பிழையவர்;
பிணியவர்!
வாழும் கலையான
எமது அன்பு சமுதாயத்தின்
வஞ்சகரவர்!
சோற்றுக்கும் சொத்துக்கும்
சோடை போன
பகுத்தறிவு மூடரவர்!
ஆதி பாடமாம், தந்தை
சொல் மிக்க மந்திரமில்லை!
அதை அறியா, உணரா அறிவீலியவர்!
பெற்றவரெல்லாம் தந்தை தாயுமில்லை
பேணிப் போற்றி வளர்த்தவரே
பெற்றோரென்பதின் பொருளுணரா
குருடரவர்!
எம் சமுதாய எதிரியவர்
எப்போதும் நேர்மையிலா
எத்தரவர்!

- பகுத்தறிவுக் கோழைகள்
எப்போதும் எம் வாழ்வில்
எம் வாழ்வின் முறை குறித்து
எள்ளி நகையாடும் வீரரவர்!
ஏனென்றால் நாம் மட்டுமே
அன்பு வழி வாழும்
அறநெறியாளர்கள்!
மாற்று மத வழி குறித்தோ
மொழி குறித்தோ வாய் மொழி மட்டுமல்ல
நினைவில்கூட எண்ணாத
கோழைகள்!
மாற்றி உரைத்தால்
சோற்றுக்கும் சொத்துக்குமட்டுமல்ல
சொந்த தலைக்கும் வாள்
வருமென்றறிந்த அறிஞரவர்!

- பகுத்தறிவு முதலைகள்
ஓட்டுக்கும் கூட்டுக்கும்
நாம் மட்டுமல்ல
அவர்களும் வேண்டும்!
சோற்றுக்கும் சொத்துக்கும்
நாம் அல்ல
அவர்கள் மட்டுமே போதும்!
பிழையேதும் பிணியேதும்
அவரிடத்து இல்லை
ஆனால் இவரிடத்துண்டு!
பஸ் ஏற காசில்லா காலமெலாம் உண்டு
சாடிலைட் சேனல்களின்
அதிபர்கள் இன்று!
அச்சேனல்களின் போட்டியிலே
எம் புத்தாண்டை புதைக்க முயன்ற
கயமைத்தனமுமுண்டு!
சித்திரைத் திருநாளே தமிழர்களின்
புத்தாண்டென்பது வழக்குமட்டுமன்று
அதெம்மூதாதையரரின் கோளவியல்
அறிவின் சான்று!
-
பகுத்தறிவு
பகுத்தறிவென்பது
பகுத்து அறிந்து கொள்வதன்றி
அறிய முடியாததையும்
உணரும் அறிவில்லாததையும்
மூட நம்பிக்கை என்பதன்று!
புரிந்துகொள் பகுத்தறிவு மூடனே!