Story Highlights
- பெண் அழகிய தேவதையா,சூனியக்காரக் கிழவியா?
- இக்கதை ஒரு முகநூல் பகிர்வு
நன்றி: திரு. கொங்கு சாய் செந்தில் (படித்ததில் பிடித்தது)
படம்: கூகுள் மூலம் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது
அன்பு நண்பர்களே!, உங்கள் இனியவனின் கதைகள் வெளிவரும் முன் நமது நண்பர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிந்த பொருள் நிறைந்த நற்சிறுகதையைப் பகிர்வதில் பெருமகிழ்வெய்துகிறேன்!
பெண்: தேவதை அல்லது சூனியக்காரி
பெண் அழகிய தேவதையா,சூனியக்காரக் கிழவியா?
ஒரு குட்டிக்கதை
இரண்டு மன்னர்களின் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான். “நான் கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே!” என்று.
வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டுவிட்டு, விடை சொன்னால்தான் திருமணம் எனச் சொல்லியிருந்தாள். கேள்வி என்னவென்றால் “ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?”
தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான். ஆனால், யாரிடமும் விடை கிடைக்கவில்லை. கடைசியாக, சிலர் சொன்னதின் அடிப்படையில் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.
பதிலுக்கு அவள், “விடை சொல்கிறேன்!. அதனால் அவ்வரசனுக்கு திருமணம் நடக்கும்; உனக்கு உன் நாடு கிடைக்கும். ஆனால், எனக்கு என்ன கிடைக்கும்?” என்றாள்.
அதற்கு தோற்ற மன்னன் ” நீ என்ன கேட்டாலும் தருகிறேன்!” என்று வாக்களித்தான்.
அதை ஏற்றுக்கொண்ட அவள், “ஒரு பெண், தன் சம்பந்தமான முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே அவளின் ஆழ்மன எண்ணமாகும்” என்று பதிலுரைத்தாள்.
இம்மன்னனும் வென்ற மன்னனிடம் அப்பதிலைச் சொல்ல, அவன் அதை தன் காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் இனிதே நடந்தேறியது. இவனுக்கும் நாடு திரும்ப கிடைத்தது. தான் வாக்களித்தபடியே அவ்வரசன் கிழவியிடம் “நீ வேண்டுவது என்ன?” என்றான்.
கிழவியும் சட்டென்று “நீ!, என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்!” என்றாள். அம்மன்னனும் தான் கொடுத்த வாக்கின்படியே அவளைத் திருமணம் செய்து கொள்ள முன் வந்தான். உடனே அக்கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.
மேலும் அவள் அவ்வரசனிடம் ஒரு கட்டுப்பாடு விதித்தாள். அதாவது, இருவரும் தனியாக இருக்கும்போது கிழவியாக இருந்தால், வெளியே உன்னுடன் பொது இடங்களுக்கு வரும்போது தேவதையாக இருப்பேன். அல்லது தனியாக இருக்கும்போது அழகிய பெண்ணாக – தேவதையாக இருந்தால், வெளியே பொது இடங்களில் சூனியக்காரக் கிழவியாகி விடுவேன். இதில் உனது விருப்பம் என்ன? என்று கேட்டாள்.
அதற்கு அம்மன்னனும் சற்றும் யோசிக்காமல் “இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்; முடிவை நீதான் எடுக்க வேண்டும்” என்று சொன்னான்.
அதற்கு அத்தேவதை, “முடிவை என்னிடமே விட்டு விட்டதால், நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்” என்று பதிலளித்தாள்.
நீதி:
பெண்!, அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும்போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.
குறிப்பு: இதிலும், பெண்மையானது அழகுக்கு, அழகென்றால் மட்டுமே முக்கியத்துவம் தருவார்கள் என்ற கருத்தைக் கொண்டால் அது எதிர்மறை அணுகுமுறை