அனுபவ வார்ப்புகள்!!
மனிதனாய்ப் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும். இவ்வாழ்க்கையில் நாள்தோறும் நாம் பெரும் அனுபவங்களே தத்துவங்களாய் வழிமுறைகளாக மாறுவதும் இயற்கையே!
இதோ! அடியேனின் அனுபவ மொழிகள்!
-
நட்பும் துரோகமும்
நட்பு!
பொன், பொருள்,
அன்பு, அறிவு,
ஆற்றல், ஆதரவு
துன்பம், தோல்வி
ஆகியவற்றை பெறுவதில்
மட்டுமில்லை
அவற்றை திருப்பி
தருவதிலும் தான்
நட்பின் துரோகம்!
நீ என்னை
ஏமாற்றி வந்திருக்கிறாய்
என்பதில் எனக்கு துளியும்
வருத்தமில்லை!
உண்மையில்
என்னை ஏமாற்ற நீ
உன்னை வருத்திக்
கொண்டிருந்திருக்கிறாய்
என்பதே வலிக்கிறது!
-
நான்
உனக்கு!
என்ன செய்கிறேன்?
எப்படி செய்கிறேன்?
எவ்வாறு வாழ்கிறேன்?
என்பது உனக்கு!
உண்மை!
வாழ்க்கையை, வாழ்க்கையின்
மூலத்தை அறிய முயலும்
மிகச்சிலரில் ஒருவன்!
வாழ்க்கையை, வாழ்க்கையின்
அவலத்தை புரிந்து கொண்ட
மிகச்சிலரில் ஒருவன்!
வாழ்க்கையை, வாழ்கையின்
மோட்சத்தை உணர்ந்து வாழும்
மிகச்சிலரில் ஒருவன்!
-
புதிர்
குடியரசு
மக்களுக்காக,
மக்களால்,
மக்களின்
அரசு!
முகவரசு
வியாபாரிகளுக்கு,
தொழிலதிபர்களுக்கு,
முகவர்களின்
அரசு!
-
நீதி
அரசாங்கங்கள்,
வியாபாரிகளின்
முகவராய்ப் போனது போல்
நீதியும்
நெறி பிறழ்கிறதோ?
-
அடிப்படை
நல்ல சாலை இல்லை
நல்ல வாகன வசதி இல்லை
சரியான கண்காணிப்பு இல்லை
அதைவிட அதைப் பின்பற்றும்
ஒழுக்கம் மக்களுக்கில்லை!
ஆனால் தலைக் கவசம் மட்டும் வேண்டும்!
தடை செய்ய வேண்டிய
உடல் நலத்துக்கு கேடான
உணவுகள், பானங்கள்
பயன்பாட்டுப் பொருள்கள் எல்லாம்
அரசின் அனுமதியோடு
உலா வந்து கொண்டிருக்க,
சிலவற்றை அரசே
நேரடியாக லாப நோக்கில்
விற்பது அதைவிட கேவலம்!
ஆடம்பர பொருள்களெல்லாம்
இலவசமாய்ப் பெறமுடியும்!
ஆனால் உயிர் கவசம்
அதனை பணம் கொடுத்தே
பெற முடியும்!
அணியவில்லை என்றால்
அபராதம், தண்டனை
என்பதைவிட
உண்மையிலேயே நீதிக்கு
அக்கறை இருந்திருந்தால்….
தண்டனைக் கட்டணத்திலேயே தலைக்கவசம் தந்திட ஆணையிட்டிருக்கவேண்டும்!