Story Highlights
- இது ஒரு எதிர்மறைப் பதிவுதான்!
- ஆனாலும்
- அதுவே எதார்த்தமானதாய் போனதே வருத்தத்திற்குறியது!
உங்களால் நிச்சயம் முடியாது!
முயல்கிறீர்களா?
உங்களால் முடியுமா?
என்னப்பா,சும்மா படம் காட்றீங்க?
விசயத்தைச் சொல்லுங்க முதல்ல!
அப்புறம் பார்க்கலாம்! முடியுமா? முடியாதான்னு!
ஒரு நாள், உண்மை மட்டுமே
பேசமுடியுமா?
தொழில், வாழ்க்கை, நட்பு
குடும்பம், உறவு மட்டுமல்லாது
நமக்கு நாமே உண்மையாக
உண்மை மட்டுமே பேசி வாழ
முடியுமா?
ஒரு நாள், கைப்பேசியைப்
பயன்படுத்தாமல் இருக்க முடியுமா?
அழைப்புகளுக்கு மட்டுமின்றி,
குறுஞ்செய்திகளைக் காண, என்னாச்சு (வாட்ஸ் அப்) செயலியைப் படிக்க,
கோவிலோட்டம் விளையாட, பந்தடிக்க,
அலாரம் வைக்க, படம் பிடிக்க
ஆகிய எந்த ஒரு செயலையும்
கைப்பேசியில் செய்யாமலிருக்க
முடியுமா?
சட்டம் மற்றும் விதிமுறைகளைப்
பின்பற்றி வாழ முடியுமா?
சாலையில்:
போக்குவரத்து விதிகளை
மதித்து, பின்பற்றி
எப்போதும் வாழ முடியுமா?
சோலையில்: (பொது இடங்களில்)
சக மனிதன் நடந்து வரும்போது
எச்சில் துப்பாமல் இருக்க
முடியுமா?
சக மனிதர்கள் மத்தியில்
புகை பிடித்து அனைவருக்கும்
கொள்ளி வைக்காமல் இருக்க
முடியுமா?
வேலையில்:
நேர்மையாக வேலையைச் செய்ய
முடியுமா?
வேலையென்று அரச விதிகள்
மீறாமல், ஏய்க்காமல் இருக்க
முடியுமா?
பொதுவில் நன்மனிதனாக இருக்க
முடியுமா?
கோவிலில் வேண்டாமலிருக்க
முடியுமா?
வீட்டினில் யாருக்காவது
உண்மையாக இருக்க
முடியுமா?
நண்பரிடத்து நடிக்காமல் இருக்க
முடியுமா?
நமக்கே நம்மைப் பிடிக்கும்
என்றெண்ணும்படியாகவும்
என்னைப் போல் நன்மனிதன்
இவ்வுலகில் வேறு யாரும்
இல்லை என்றெண்ணும்படியாகவும்
நானே நல்லவற்றைச் செய்பவன்
என்றெண்ணும்படியாகவும் இருக்க
முடியுமா?
மீண்டும் ஆரம்பச் செய்திக்கே வருகிறேன்!
உங்களால் நிச்சயம் முடியாது!
முயல்கிறீர்களா?
இது ஒரு எதிர்மறைப் பதிவுதான். எனினும் நம் ஒவ்வோர் மனசாட்சியின் ஆழத்தில் நமது அன்றாட பணிப்பளுவினடியே சிக்கி நம்மை உறுத்தி வரும் உண்மை இதுவே என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது என்றே நம்புகிறேன்!