Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

இஸ்லாம் – Islam

Medallion showing Name of Allah
Photo Credit To wikipedia

Story Highlights

  • விழித்தெழும் நேரமிது!
  • நிச்சயம் இது மத பிரசாரப் பதிவல்ல!!
  • உண்மையை உணருங்கள்!!!

மறுப்பு

  • இந்தப் பதிவுகள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை
  • இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது.
  • இவை எனது சமுதாய அக்கரையில் பதிவு செய்யப்பட்டது.
  • எனினும் இதில் எவ்விதமான விவாதத்திற்கும் போட்டிகளுக்கும் இடமில்லை.
  • இப்பதிவில் தங்களுக்கு உடன்பாடில்லை எனில் படிக்க / பார்க்க வேண்டாம்.
  • அப்படியே படித்து / பார்த்து விட்டாலோ இதில் விவாதித்து உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.

நன்றி!!!

Translation in English

Disclaimer

  • This post is not for hurting / insulting anybody
  • This post is the sole property of the Author
  • This post is being published in the view of Welfare of Society
  • We do not entertain any discussions / arguments regarding the post
  • Please Avoid reading if you disagree with the post
  • Even if you have read unknowingly kindly leave it without wasting your valuable time

Thanks

இஸ்லாம்

உலகின் இரண்டாவது பெரும்பான்மையான மக்கள் பின்பற்றும் மதம்! நாம் இப்பதிவை இங்கு இப்போது இடுவதற்கான காரணம் இறுதியில் உரைக்கிறேன்!

 

 

நன்றி!

நாம் இஸ்லாம் மதத்தைப் பற்றி எமது பள்ளிக்காலங்களிலேயே சில விஷயங்களை அறிந்திருந்தாலும் பதிவின் பொருட்டு நிறைய வலைதளங்களிலிருந்து படங்கள் மற்றும் தகவல்களை பயன்படுத்தியுள்ளோம். அவற்றில் முக்கியமாக விக்கிபீடியா தளத்திலிருந்து பெரும்பான்மையாக பயன்படுத்தியுள்ளோம். அத்தளத்திற்கு நன்றி!

இஸ்லாம்

இஸ்லாம் என்பது கடவுளுக்கு தன்னார்வத்துடன் அர்ப்பணிப்பது என்று பொருள்படும். இஸ்லாம் ஓரிறைக் கொள்கை உடையது. அதாவது, இறையென்பது ஒருவரே! அதுவும் அல்லாவே! அவரின் கடைசி தீர்க்கதரிசி முகமதுவே!

Mohammed in Arab
Mohammed

நம்பிக்கை

இஸ்லாம் மதத்தின்படி வாழ்பவர்கள் இஸ்லாமியர்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவர்களின் நம்பிக்கையாவது: இறைவன் ஒருவனே! வாழ்வின் நோக்கம் இறைவனைத் தொழுவதே! ADAN, NOAH, ABRAHAM, MOSES மற்றும் JESUS போன்ற தீர்க்கதரிசிகள் கூட கூறிய இறை செய்திகளின் முழு, இறுதி வடிவமே இஸ்லாம் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை! (பின்னாட்களில் அவர்களின் செய்திகள் திரிந்ததாயும் நம்புகின்றனர்) அவ்வாறு இறை செய்தியின் முழு, இறுதி வடிவமே இஸ்லாமின் புனித நூல் ‘ குரான்’ என்றும் நம்புகின்றனர். இறை அறிதல் மற்றும் இறை வழி சேர்தல் குறித்து குரான் உரைப்பது, முக்கியமாக – ஐந்தூன்கள் (Five Pillars of Islam).

 

ஐந்தூன்கள் – FIVE PILLARS

இஸ்லாம் போதிக்கும் ஐந்து முக்கிய கடமைகள்

ஐந்தூன்கள் - Five Pillars of Islam
ஐந்தூன்கள் – Five Pillars of Islam

 

SHAHADAH – நம்பிக்கை

கடவுள் என்று யாருமில்லை ஆனால் இறையென்பதொன்றே! முகமதுவே இறை தூதர்!

 

SALAT – இறை தொழுகை

தினமும் ஐந்து முறை கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய இறை தொழுகை

SALAT - இறை தொழுகை
SALAT – இறை தொழுகை

 

ZAKAT – வரி

ஒருவர் தனது மொத்த வருமானத்தில் 2.5% ஏழைகளுக்கும் தேவைப்படுவோர்க்கும் தர வேண்டும். இதை தானமாக எண்ணாமல் இறைவனுக்கு செலுத்தும் வரியாக எண்ண வேண்டும்!

 

SAWM – விரதம்

விரதத்தின் காரணங்கள் மூன்று : இறைவனோடு ஒன்றியிருக்க; தனது முந்தைய தவறுகளுக்கு வருந்துதல் மற்றும் இயலாதவர்க்கு உதவுதல்.

ரமதான் - Ramadaan
ரமதான் – Ramadaan

மேலும் ரமதான் (ஹிஜிரி – 9 வது மாதம்) மாதத்தில் கண்டிப்பாக சுய கட்டுப்பாட்டோடு உண்ணா விரதமும் மேற்கொள்ள வேண்டும்.

 

HAJJ – மெக்காவிற்கு புனித பயணம்

ஒவ்வொரு இஸ்லாமியரும் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது DHU-AL-HIJJAH (ஹிஜிரி 12  வது மாதம்) மாதத்தில் மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.

 

வரலாறு

Mecca Madina Map
Mecca Madina Map

570ம் வருட வாக்கில் மெக்காவில் பிறந்தவர் முகமது. அவரது 40வது வயதில் ஹிரா மழைக்குகையில் குரான் வார்த்தைகளை இறையிடமிருந்து பெற்றதாகவும் அதன் பிறகு அவர் செய்த செயல்களும் சாகசங்களும் ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் மாதிரியாக அறியப்படுகிறது. மெக்காவில் அவருடைய பிரச்சாரத்தினால் ஆளும் பழமைவாதிகள் தமது கலாச்சாரம் பாதிப்புக்குள்ளாகும் என்று கருதி முகமது மற்றும் அவரது ஆதரவாளர்களை அழிக்க முயன்றனர். அதன் காரணமாக 622ம் வருட வாக்கில் முகமது மற்றும் நண்பர்கள் மெக்காவிலிருந்து மெதீனாவிற்கு புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். மெதீனாவிலும் அவருக்கு ஆதரவு பெருகி ஆதிக்கம் செலுத்தினார். மெக்காவிலிருந்து மெதினாவிற்கு சென்றதையே ஹிஜ்ரா பெயர்தல் எனப்படுகிறது.

Hijira
Hijira

632ம் வருடம் முகமது நபியின் மறைவிற்குப்பிறகு அவரது நெருங்கிய நண்பரான அபூ பக்கர் இஸ்லாமிய தலைவராய் வழி நடத்தி வந்தார்.634ம் வருடம் அபூ பக்கரின் மறைவிற்குப்பிறகு உமர் இஸ்லாமிய தலைவராய் வழி நடத்தி வந்தார். 644ம் வருடம் உமர் படுகொலை செய்யப்பட்ட பிறகு உத்மன் தலைவராய் வழி நடத்த தேர்வு செய்யப்பட்டபோது மிகுந்த எதிர்ப்பு நிலவியது.  656ம் வருடம் உத்மனும் கொலை செய்யப்பட்டார். அலி, உத்மனுக்குப் பிறகு மத மற்றும் அரசியல் தலைவரானார். 661ம் வருடம் அலி கொலையுண்ட பிறகு முவாவியா தலைமையேற்றார். இவர் உமாயத் வம்சாவளியைச் சேர்ந்தவர். அலி அவர்களுக்கு முன் ஆண்ட மூன்று தலைவர்களை ஏற்று பின்பற்றிய பெரும்பான்மையினர் சன்னீஸ் என்றழைக்கப்படுகின்றனர். அம்மூவருடன் அலி மற்றும் அவருக்குப் பின் வந்த தலைவர்களைப் பின்பற்றியவர்கள் ஷியாஸ் என்றழைக்கப்படுகின்றனர்.

 

சவுதி அரேபியா, சிரியா மட்டுமின்றி மெதுவாக இஸ்லாமிய மதம் பரவ தொடங்கியது. இந்திய துணைக்கண்டத்தைப் பொறுத்தவரை, கி.பி.750-1258 ஆண்டுகளில் தில்லி சுல்தான் ஆட்சியில், இஸ்லாமிய மதம் வட இந்தியப் பகுதிகளில் பரவ ஆரம்பித்தது.  தில்லி சுல்தானின் 5 தலைமுறையினர் தில்லியை ஆண்டனர். அதில் முதல் 4 தலைமுறையினர் துருக்கிய வம்சாவளியினர். கடைசி 5 வது வம்சாவளி ஆப்கானிய லோடி வம்சத்தினர். கி.பி.1526 வரை நீடித்த தில்லி சுல்தானிய ஆட்சி முகலாயர்களின் வசம் மாறியது (18வது நூற்றாண்டு வரை). முகலாயர்கள் உள்நாட்டு மத சமுக பழக்க வழக்கங்களில் குறுக்கிடாமல் அனுசரனையான போக்கில் ஆட்சி செலுத்தினர். அக்பர் வரை அனைத்து முகலாய அரசர்களும் இஸ்லாமியரே! (அக்பர், தீன் இலாஹி என்ற புதிய மதத்தை நிறுவினார்)

 

இவ்வாறு இஸ்லாமிய மதம் உலகெங்கும் தடம் பதித்தது.

உட்பிரிவுகள்

  • Sunnis – சன்னீஸ்
  • Shiya – ஷியாஸ்

 

இஸ்லாமிய மாதங்கள்

இஸ்லாமிய காலண்டர் சந்திரனை அடிப்படையாகக் கொண்டது. ஹிஜிரி காலண்டர் என்றொரு பெயரும் இதற்கு உண்டு. 12 மாதங்கள் கொண்ட இக்காலண்டரில் வருடத்திற்கு 354 நாட்கள் உண்டு. இஸ்லாமிய முதல் ஆண்டு கி.பி.622 ஆகும். இது முகமது நபி மெக்காவிலிருந்து மெதினாவிற்கு இடம்பெயர்ந்த ஆண்டைக் குறிக்கும். 12 மாதங்களும் அவற்றின் அர்த்தங்களும் அம்மாதங்களில் ஆற்ற வேண்டிய கடமைகளையும் காண்போம்.

  1. முகரம் (தடை செய்யப்பட்ட) – அனைத்து விதமான சண்டைகளும் தடை செய்யப்பட்ட காலம்
  2. சஃபர் (வெறுமை)- அந்நாட்களில் வீடுகளில் பெரும்பாலும் எதுவும் இல்லாத காலம்
  3. ரபீ 1 – முதல் வசந்த காலம்
  4. ரபீ 2 – இரண்டாவது மற்றும் இறுதி வசந்த காலம்
  5. ஜூமாதா 1 – முதல் கோடை காலம்
  6. ஜூமாதா 2 – இரண்டாவது மற்றும் இறுதி கோடை காலம்
  7. ரஜப் (மரியாதை;கெளரவம்) – இதுவும் சண்டைகள் தடை செய்யப்பட்ட புனிதமான காலம்
  8. ஷபன் (சிதறிய) – நீரின் பொருட்டு தேடும் காலத்தைக் குறிக்கும் மாதம்
  9. ரமதான் (எரியும்) – மிகவும் புனிதமான மாதம். சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரையில் உண்ணா நோன்பு மேற்கொண்டு, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய மாதம்
  10. ஷவ்வால் (உயர்தல்) – வழக்கமாக வாரிசு விருத்தியடைந்திருக்க வேண்டிய காலம்
  11. து-அல்-குதா (போர் இடை நிறுத்தம்) – போர்கள் செய்ய தடை செய்யப்பட்ட காலம்
  12. து-அல்-ஹிஜ்ஜாஹ் (புனித யாத்திரை) – இஸ்லாமியர்கள் மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டிய காலம்

 

இஸ்லாம் சொல்லும் அடிப்படைத் தத்துவம் – நம்பிக்கை
  • கடவுள் ஒருவரே! (There is no god but God)
  • இறைவனின் தூதர் முகமது

 

இப்பதிவின் நோக்கம் பற்றி இதன் தொடர்ச்சியான அடுத்தப் பதிவில் காண்போம்! வேறொரு மதத்தோடு!!

 

இறைனிலை என்பது தன்னிலை அறிவதன்றி வேறில்லை!

தன்னை அறிந்தவன் இறைவனே!

 

 

பின்குறிப்பு: முன்பே சொல்லியிருக்க வேண்டியது! நாம் எந்த மதத்திற்கும் ஆதரவானவனும் இல்லை; எதிரியும் இல்லை! உங்கள் ஆரோக்கியமான விமர்சனங்கள், விளக்கங்கள், திருத்தங்கள் ஏற்கப்படும்! நன்றி!

Post source : wikipedia

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *