Story Highlights
- விழித்தெழும் நேரமிது!
- நிச்சயம் இது மத பிரசாரப் பதிவல்ல!!
- உண்மையை உணருங்கள்!!!
மறுப்பு
- இந்தப் பதிவுகள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை
- இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது.
- இவை எனது சமுதாய அக்கரையில் பதிவு செய்யப்பட்டது.
- எனினும் இதில் எவ்விதமான விவாதத்திற்கும் போட்டிகளுக்கும் இடமில்லை.
- இப்பதிவில் தங்களுக்கு உடன்பாடில்லை எனில் படிக்க / பார்க்க வேண்டாம்.
- அப்படியே படித்து / பார்த்து விட்டாலோ இதில் விவாதித்து உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.
நன்றி!!!
Translation in English
Disclaimer
- This post is not for hurting / insulting anybody
- This post is the sole property of the Author
- This post is being published in the view of Welfare of Society
- We do not entertain any discussions / arguments regarding the post
- Please Avoid reading if you disagree with the post
- Even if you have read unknowingly kindly leave it without wasting your valuable time
Thanks
சீன நாட்டு மதம்
உலகின் நான்காவது பெரும்பான்மையான மக்கள் பின்பற்றும் மதம்! நாம் இப்பதிவை இங்கு இப்போது இடுவதற்கான காரணம் இறுதியில் உரைக்கிறேன்!
நன்றி!
நாம் இப்பதிவின் பொருட்டு நிறைய வலைதளங்களிலிருந்து படங்கள் மற்றும் தகவல்களை பயன்படுத்தியுள்ளோம். அவற்றில் முக்கியமாக விக்கிபீடியா தளத்திலிருந்து பெரும்பான்மையாக பயன்படுத்தியுள்ளோம். அத்தளத்திற்கு நன்றி!
சீன நாட்டு மதம் (Chinese Traditional Religion – Chinese Folk Religion)
சீன பாரம்பரிய மதமானது இறைவனை (SHEN) வழிபடுவதை அடிப்படையாகக் கொண்டது. ‘SHEN’ என்பவர் கடவுள்கள், ஆன்மாக்கள், விழிப்புணர்வு, தன்னிலை உணர்தல் என்று உணர்ந்து போற்றப்படுகிறார். அவர் இயற்கை வடிவாகவோ, நகர, நாட்டு காவல் தெய்வங்களாகவோ, பாரம்பரிய, கலாச்சார கதாநாயகராகவோ, மூதாதையர்களாகவோ வணங்கப்படுகிறார்
வழிபாட்டு முறை
- Wuism
கி.மு. (4700 – 2900) ஆண்டுகளில் வடகிழக்கு சீனாவில் நடைமுறையில் இருந்த ஹாங்சான் கலாச்சார (Hongshan Culture) முறையிலான வழிபாடு.
- Nuo Ritualism
கடவுள்களுக்கு மர முகமூடி அணிவித்து வணங்குதல். மூதாதையர்கள், ஊர் – நாட்டு காவல் தெய்வங்களை வணங்கும் வழிபாடு.
சீன நாட்டு மதமானது சில நேரங்களில் ‘TAOISM’ என்றும் அழைக்கப்படுகிறது. ‘TAO’ என்றால் பாதை – கொள்கை என்று பொருள்படும். இதன்படி ‘TAOISM’ என்பது மனித இன ஒருமைப்பாட்டிற்கு; நல்லிணக்கதிற்கான பாதை – வழி என்று பொருள்படும்.
அடிப்படை
சீன பாரம்பரிய மதமானது கீழ்காணும் மூன்று விஷயங்களை அடி நாதமாகக் கொண்டது.
- நான்கு விதமான ஆன்மீகக் கோட்பாடு உடையது.
- அண்ட அடிப்படையிலான பார்வைகள்
- ஒழுக்க நெறி சம்பந்தப்பட்ட வாழ்வியல் முறை
வரலாறு
சீன பாரம்பரிய மதமானது, சீனப் பேரரசின் இரண்டாவது பெரிய ஆட்சி வம்சாவளியான ஹன் (HAN) காலங்களில் (கி.மு.206- கி.பி.220) பெரிதும் மறுமலர்ச்சி அடைந்தது. கடவுளை ‘LORD OF SHE’ என்று வணங்கி மகிழ்ந்தனர். இதன் பொருள், பூமியின் கடவுள் என்பதாகும்.
சீன நாட்டு மதமானது மிகவும் விரிந்த வேறுபட்ட நடைமுறைகளைக்கொண்டது. அது பகுதிக்குப் பகுதி,ஏன், கிராமத்திற்கு கிராமம்கூட மாறுபட்ட வழிபாட்டு முறைகளைக் கொண்டது. ஆனாலும் கூட அது எந்த பகுதிக்குள் வருகிறதோ அந்தப் பகுதியின் நிர்வாக அமைப்பின் விதிமுறைகள் மற்றும் சமய பழக்க வழக்கங்களை உறுதியாகக் கடைப்பிடிக்கும் வழக்கம் கொண்டது. அந்நிர்வாகங்களின் கீழ் அப்பகுதியின் கோவில்கள் பாரம்பரிய முறைப்படி பேணப்படுகின்றன.
சீனப் பேரரசும் (IMPERIAL CHINA) சரி, தற்போதைய மக்கள் குடியரசும் (PEOPLE’S REPUBLIC OF CHINA – PRC) சரி, சீன நாட்டு மதத்தையும் சமய பழக்க வழக்கங்களையும் மூட நம்பிக்கைகள் என்று ஒதுக்காமல் தமது அழிவில்லா பாரம்பரியமாக சொத்தாக போற்றி வருகின்றனர். 19ம்-20 வது நூற்றாண்டுகளில் சீன பாரம்பரிய மதம் மறுமலர்ச்சி அடைந்துள்ளது.
சீன நாட்டு மதத்தின் அடிப்படைத் தத்துவம் – நம்பிக்கை
- ஆன்மீகமே மனித குல ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கு அடிப்படை
- கடவுள் என்பது அண்டமே! அவர் அண்டத்தின் மாபெரும் சக்தி.
- வாழ்வின் நோக்கம் அண்டத்தில் இணைவதே! கடவுளாய், கடவுளில் இணைவதே!
- அதற்கான வழியானது: சரியானதைத் தேர்ந்தெடுத்து முறையாகப் பயின்று உண்மை நிலை உணர்தல்.
- சமய வழிபாடுகள் மனிதனை உலகெலாம் நிறைந்திருக்கும் இறைவனுடன் – அண்டத்துடன் இணைக்கும் பாலம்.
சுருக்கமாகக் கூறின், சீன பாரம்பரிய மதம் (CHINESE TRADITIONAL RELIGION) கூறும் தத்துவம்
நம்பிக்கை (Commitment – Belief) – பயிற்சி (Rite – Practice)
இப்பதிவின் நோக்கம் பற்றி இதன் தொடர்ச்சியான அடுத்தப் பதிவில் காண்போம்! வேறொரு மதத்தோடு!!
இறைனிலை என்பது தன்னிலை அறிவதன்றி வேறில்லை!
தன்னை அறிந்தவன் இறைவனே!
பின்குறிப்பு: முன்பே சொல்லியிருக்க வேண்டியது! நாம் எந்த மதத்திற்கும் ஆதரவானவனும் இல்லை; எதிரியும் இல்லை! உங்கள் ஆரோக்கியமான விமர்சனங்கள், விளக்கங்கள், திருத்தங்கள் ஏற்கப்படும்! நன்றி!