Story Highlights
- இது ஒரு தேடல் பதிவு!
இராஜராஜ சோழனின் வாரிசுகள் என்ற நமது முந்தைய பதிவை தாங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் என்றே நம்புகிறோம். அப்பதிவின் மூலம்: https://www.facebook.com/dr.sathiyamoorthi.k/posts/820666758001234. இம்முகநூல் பதிவில் நாம் கண்ட வாக்குவாதங்கள் நம்மை சிறிது குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. அதன் வெளிப்பாடே இப்பதிவு. இப்பதிவின் நோக்கம் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலவே சொல்லிய விசயத்தின் மறுபக்கமாய் இருப்பதையும் பதிவிடுவதே! இதில் எது உண்மை? எது பொய்? என்பது காலம் தான் புரிய வைக்கும். இப்பதிவின் மூலம் யாரையும் காயப்படுத்துவது எம் நோக்கமன்று! உண்மையில் நம் பண்டைய வரலாற்றை நாம் மறந்தோம்; இப்போது உண்மை காண முடியாமல் குழம்புகிறோம் என்பதே நமக்கு அவமானம் தான்!
உண்மையில் யார் இராஜராஜ சோழனின் வாரிசுகள்?
நண்பர் திரு. சத்தியமூர்த்தி அவர்களின் அப்பதிவில் திரு.ஷர்மலன் தேவர் அவர்கள் அப்பதிவிற்கு மறுப்பு தெரிவித்து கருத்து தெரிவித்திருந்தார். அவரின் அனுமதியோடு அவரது வலைப்பதிவிலிருந்து அவர் வாதத்தை இங்கே காண்போம். அதற்கு முன்னதாக திரு. சத்தியமூர்த்தி அவர்களுடனான கருத்து பரிமாற்றங்களை கீழே காண்போம்.
மேலும், திரு.செந்தில்குமார் அவர்கள் பிட்சவரம் சோழன் பற்றிய குறிப்பொன்றையும் பதிவிட்டுள்ளார். அஃதாவது
அது மட்டுமல்லாமல், திருப்பத்தூர் கல்வெட்டு என்று ஒரு குறிப்பையும் இணைத்திருந்தார். அஃதாவது
திரு.ஷர்மலன் தேவரின் அனுமதியோடு அவரின் வலைதளப்பதிவைக் காணும் முன் அவர் நமக்கு வைத்த வேண்டுகோளையும் பதிவிடுவதே உத்தமம்.
பதிவிடுவதற்கு அனுமதித்ததோடு, அவர் வேண்டுகோளாய் வைத்தது இதுதான்: சாதி அடிப்படையில் யாரையும் காயப்படுத்துவது அவரது நோக்கமன்று. வரலாற்றை சரியாக சொல்வதே தமது நோக்கமென்கிறார்
அவரது சொற்களில் அவரது வேண்டுகோள்:
நாம் பதிவிடும் செய்தியின் பதிவு முகவரி: http://sharmalanthevar.blogspot.in/2014/12/pitchavaram-zamin-are-not-cholas.html அதன் ஆசிரியர், திரு. ஷர்மலன் தேவர்.
திரு. ஷர்மலன் தேவரின் கூற்றுகளின் சாரம்
- ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழ் மன்னர்களை பெரும்பாலும் அடக்கியே வைத்திருந்தனர். அவர்களுக்கு ஊழியம் செய்தவர்களுக்கு மட்டும் சலுகையளித்து வந்தனர்.
- அங்கிலேயர் தயவில் வாழ்ந்து வந்தவர்கள் பண்டைய தமிழ் மன்னர்களின் வாரிசுகளாக தம்மை உண்மைக்குப் புறம்பாக கூறிக்கொண்டு வாழ்கின்றனர்.
- சோழனின் வாரிசுகளாக பிட்சவரம் நிலக்கிழார்கள் கூறிக்கொள்வதும் அவ்வாறானதொரு விசயமே. பிட்சவரம் ஜமீன் தான் சோழ மன்னனின் வாரிசு என்று கூறிக்கொள்கின்றனர். சோழ மன்னருக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலில் வழங்கப்படும் பட்டாபிஷேகம் பிட்சவரம் ஜமீனுக்கு வழங்கப்படுவதே இதற்கு சாட்சியென்றும் தங்கள் கூற்றை நியாயப்படுத்துகின்றனர்.
- மேலும் பல சரித்திர மேற்கோள்களை சுட்டிக்காட்டி பிட்சவரம் ஜமீன் சோழ வாரிசு இல்லை என்கின்றார். அது போக யாரும் தனியே வரலாற்றை சொந்தம் கொண்டாட முடியாது என்று பூடகமாக தெரிவிக்கிறார்.
ஆங்கிலத்தில் இதன் உண்மையான பதிவின் திரைக்காட்சியை கீழே காண்க!
பரந்து விரிந்த நிலப்பரப்பை ஆண்ட சோழனின் வாரிசுகளை நாம் நிச்சயம் அங்கீகரிக்க மறந்து அவர்களை துயரத்தில் தவிக்க விட்டோமா? அல்லது அவர்களை தொலைத்து விட்டோமா?