தமிழ்த் திருமண முறை மற்றும் காரணங்கள்
அதென்ன? புதிதாய் தமிழ்த் திருமண முறை? இந்திய பாரம்பரிய திருமண சம்பிரதாயமே மேன்மையானதுதானே? விசயம் இருக்கிறது நண்பர்களே!
பொதுவாக இந்தியப் பாரம்பரிய திருமண முறைகளில் ஓதப்படும் மந்திரங்களின் அர்த்தம் மற்றும் காரணங்கள் பற்றி அறிந்தபோதே அதிர்ந்து போனோம்! அதன் விளைவே இப்பதிவு!
அப்படியென்ன? அதிர்ச்சி தரக்கூடிய தகவல்? உங்கள் ஆவல் புரிகிறது!
சற்றே பொறுங்கள்!
மணமகனை மணமேடைக்கழைத்து வரும் சடங்கின் போது
மணமகளின் தந்தை சொல்ல வேண்டிய மந்திரம்
மணமகன் சொல்ல வேண்டிய மந்திரம்
மணமகன், மணமகளின் தோசக் கழிப்பு
இவ்வாறு நீண்டு செல்லும் சடங்குகளினூடே ஒரு கட்டத்தில் மணமகளைப் போற்றிவிட்டு, மணமகளுக்கும் விண்ணுலக தேவர்களுக்கும் உள்ள சம்பந்தங்களாக மந்திரங்களில் பொருள் தருவது தான் அதிர்ச்சியான விசயம்.
அம்மந்திரம் மற்றும் பொருள்:
ஸாம்:
ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:|
த்ருதீயோ அக்நிஷ்டே பதி:|
துரீயஸ்தே மறுஷ்யா
ஸோம தேவன் இவளை (மணமகள்) முதன்முதலில் அடைந்தான்! பிறகு கந்தர்வன் அடைந்தான். மூன்றாவதாக அக்னி . இவளின் நான்காவது கணவன் தான் மனித குலத்தில் பிறந்தவன் (மணமகன்)
மேலும்
ஸோமோ (அ) தத் கந்தர்வாய கந்தர்வோ (அ) தக் அக்நயே|
ரயிஞ்ச புத்ராகும் ஸ்ச அதாத் அக்நிர் மஹ்யமதோ இமாம்
ஸோம தேவன் உன்னைக் கந்தர்வனுக்குக் கொடுத்தான். கந்தர்வன் உன்னை அக்னிக்குக் கொடுத்தான்.அக்னி தேவனோ உனக்கு நல்ல செல்வத்தையும் மக்களையும் தந்த பின்னர் எனக்கு உன்னைத் தந்தான்
அதன் பிறகு, தொடர்ந்து நடைபெறும் பல சடங்குகள் மற்றும் அவற்றின் காரண காரியங்களை ஆராய்ந்த போது, குறிப்பிட்ட இம்மந்திரங்கள் மணமகளை உயர்த்திப் போற்ற விளைந்து தவறாகப் புரியப்பட்டதோ என்ற ஐயமும் எழுகிறது.
எப்படியாயினும், நேர் அர்த்தம் நம் மனதை சங்கடத்தில் ஆழ்த்துவது நிதர்சனம். எனவே நாம் நமது மனதையும் கலாச்சாரத்தையும் புண்படுத்தாத தமிழ்த் திருமண முறை குறித்து மேலோட்டமாக காண்போம்.
நாம் நமக்கு அர்த்தம் புரியாத சம்ஸ்கிருத மந்திரங்களை சொல்லி திருமணம் செய்வதைத் தவிர்த்து நமது குல வழக்கப்படி மணம் செய்வதே சாலச் சிறந்தது. அவையாவது
- மண அறை அமைப்பு
மணப்பந்தல்
பந்தற்கால்
மண மணை
நிறை குடங்கள்
குட விளக்கு
முளைத்த கூலங்கள் (நவதானியம்)
அம்மியும் குழவியும்
காமாட்சி விளக்கு
அம்மையப்பர்
- மணம் நிகழும் முறை
மணமகன், மணமகளுக்கு நலங்கு
மண ஆடை படைத்தல்
மண ஆடை அவை வாழ்த்து
மண ஆடை வழங்கல்
அரசாணிக்கால் நடுதல்
மணப் பொங்கல்
காப்புக் கட்டுதல்
பெற்றோர் போற்றல்
ஓம்படைச் செய்தல்
இறை வழிபாடு
மங்கல நாண் அவை வாழ்த்து
அழல் ஓம்பல்
மங்கல நாண் சூட்டல்
பட்டங்கட்டல்
மாலை மாற்றல்
மணை வலம் வரல்
அம்மி மிதித்தல்
பொரியிடல்
இவ்வாறு நீண்டு செல்லும் தமிழ்க் குல வழக்கங்களை நாம் விட்டு விடாமல் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இவ்வழக்கங்கள் வாழையடி வாழையாய் தொடர வேண்டுமெனில் இதன் காரணங்கள் யாவர்க்கும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
திருமணங்கள் இறைவனால் நிச்சயக்கப்படுகிறது என்பதே தமிழரின் நம்பிக்கை. அதனாலேயே அரச மரத்தை சாட்சியாக வைத்து திருமணங்கள் நடைபெறுகின்றன. மணப்பந்தல் மற்றும் பந்தற்கால் சடங்குகள் இவற்றைக் குறிக்கும். மண மனை, நிறை குடங்கள், குட விளக்கு,முளைத்த கூலம் இவை வாழ்விற்கு, வாழ்வின் வெற்றிக்கு அவசியம் யாதென்பதை குறிக்கும். அம்மியும் குழவியும் ஆணும் பெண்ணும் இணைந்து செயல்படவேண்டியதைக் குறிக்கும். இதுபோல் நாம் கடைபிடிக்கும் ஒவ்வொரு சடங்கின் காரணம் தெரிந்து அடுத்த தலைமுறைக்கும் சேர்ப்பது நமது கடமையாகும்
திரு. கீ. இராமலிங்கனார் அவர்கள் எழுதிய “தமிழ்த் திருமணம்” என்ற புத்தகம் இவ்விசயத்தில் நமக்கு பேருதவி புரியுமென்பது திண்ணம். இப்பதிவின் பெரும்பான்மை கருத்துக்கள் இப்புத்தகத்திலிருந்தே கையாளப்பட்டுள்ளது. நன்றி: ஆசிரியர் மற்றும் பதிப்பகத்தார்: முல்லை நிலையம்.
I’m a tamil girl & had a proper south Indian marriage. Interesting & well written !
http://www.luv4beautyblog.com
Thank you!
Love your site: Beautyblog too! Fascinating posts!
Hello! My name is MaryMarkova, our compane need to advertise on your website. What is your prices? Thank you. Best regards, Mary.
Really when someone doesn’t understand then its up to other visitors that they will
help, so here it occurs.