Story Highlights
- கண்ணாமூச்சி ரே! ரே! தனி மனித உரிமை
கண்ணாமூச்சி ரே! ரே!
இதைப் படிக்கும் முன் நமது ஏழரையாம் அறிவு என்ற பதிவை படித்து விட்டுத் தொடரவும்.!
மறுப்பு
- இந்தப் பதிவுகள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை
- இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது.
- இவை எனது சமுதாய அக்கரையில் பதிவு செய்யப்பட்டது.
- எனினும் இதில் எவ்விதமான விவாதத்திற்கும் போட்டிகளுக்கும் இடமில்லை.
- இப்பதிவில் தங்களுக்கு உடன்பாடில்லை எனில் படிக்க / பார்க்க வேண்டாம்.
- அப்படியே படித்து / பார்த்து விட்டாலோ இதில் விவாதித்து உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.
நன்றி!!!
Translation in English
Disclaimer
- This post is not for hurting / insulting anybody
- This post is the sole property of the Author
- This post is being published in the view of Welfare of Society
- We do not entertain any discussions / arguments regarding the post
- Please Avoid reading if you disagree with the post
- Even if you have read unknowingly kindly leave it without wasting your valuable time
Thanks
குழந்தைகள் ஆனந்தமாய் விளையாடும் விளையாட்டு! ஏன் நாம் குழந்தையாக இருந்தபோதுங்கூட விரும்பி விளையாடிய விளையாட்டு என்றால் அது மிகையல்ல.
ஆனால் இப்போது நமது வாழ்க்கையின் திசையும் தெரியாமல்தான் வாழ்கிறோமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது. அதற்கும் காரணம் நாம் தான். நாம் என்றால் சமூகம் என்று ஒட்டுமொத்தமாக பொருள் கொள்க. பெரும்பான்மையோர் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசாங்கங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் தான் இவ்வெண்ணம் எழ காரணம்.
தனி நபர் உரிமை
- இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தனி மனிதனின் உடலுக்கும் உயிருக்கும் பாதுகாப்பு வழங்கியுள்ளது. அதன்படி ஒவ்வொரு தனி நபரும் தன்னை காத்துக்கொள்ள எந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பதும் வரையறுக்கப்பட்டுள்ளது. அது அடுத்தவருக்கு நஷ்டம் ஏற்படுத்தும் விதமாக யாரும் ஆதிக்கம் செலுத்தவும் அனுமதிப்பதில்லை. மத உரிமை, அமைப்பு மற்றும் பேச்சுரிமை ஆகியன பற்றியும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இப்படி தனி மனிதனின் உரிமைகளாக வரையறுக்கப்பட்டவை எல்லாமுமே முழுமையான உரிமையன்று. அது சமுதாயத்தின் கட்டுக்கோப்பையும் கருத்தில்கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது.
- அதன்படி சட்டத்தின் முன் அனைவரும் சமம்; சட்டத்தின் பார்வையில் ஒவ்வொரு தனி மனிதனின் பாதுகாப்பும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது. மதம், இனம், குலம், பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றை காரணமாகக் கொண்டு செய்யப்படும் எந்தவிதமான பாரபட்சமான செயலையும் தடை செய்கிறது.
- ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பேச்சுரிமையும் சிந்தனையை வெளிபடுத்தும் உரிமையும் உண்டு. ஒவ்வொரு தனிமனிதனும் தனது நம்பிக்கையையும் கருத்தையும் எவ்வித தடையுமின்றி வெளிப்படுத்தும் உரிமையும் உண்டு. அவ்வதிகாரமானது வாய் மொழியிலோ, எழுத்திலோ, அச்சிலோ, படமாகவோ அல்லது வேறெந்த முறையிலோ இருக்கலாம்.
கட்டுப்பாடுகள்
கொடுக்கப்பட்ட உரிமைகள் யாவும் முழுமையான உரிமையல்ல. அது சமூகத்தின் பொது நீதிக்கும் உட்பட்டதாகும். தனி மனித செயல்கள் கீழ்காணும் விசயங்களில் பங்கம் விளைவிக்குமெனில் தண்டனைக்குரியதாகின்றது.
- அரசின் பாதுகாப்பு
- அந்நிய நாடுகளுடனான நட்புறவு
- பொது அமைதி
- கண்ணியம்
- நாட்டின் பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் மேன்மை
மேலும் கீழ்காணும் செயல்கள் நிச்சயம் தண்டனைக்குரியவை ஆகும்
- நீதிமன்ற அவமதிப்பு
- அவதூறு
- சட்ட விரோத செயல்களுக்கு தூண்டுதல்
இவை போக வாழ்வுரிமை என்பதும் அரசியலமைப்புச் சட்டத்தில் முக்கியமானதாகும். இது வாழ்கிற உரிமை மட்டுமல்ல. வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கியதாகும். அதாவது சுத்தமான குடிநீர், வடிகால் வசதி, போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி, சுகாதாரமான சுற்றுப்புறம், கல்வி வசதி இவையெல்லாம் அனைவருக்கும் சமமாக வழங்குவது அரசின் கடமை என்பதே இதன் அடிநாதம்.
நன்றி: திரு. சி.எஸ்.தேவ்நாத், நூலாசிரியர், ‘அடிப்படை மனித உரிமைகள்’ மற்றும் நர்மதா பதிப்பகம். (இப்புத்தகத்தின் கருத்துக்கள் நம் பதிவில் பெரும்பான்மையாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது)
கண்ணாமூச்சி ரே! ரே!
நாட்டில் தற்சமயம் நிகழ்ந்து வரும் செயல்களே இப்பதிவின் காரணம். அவற்றுள் ஆழமாக செல்ல விரும்பவில்லை. (யாமும் அவதூறு வழக்கிலோ, தேச துரோக செயல்களுக்கான வழக்கிலோ சிக்க விரும்பவில்லை என்பதே வருத்தத்திற்குரிய உண்மை) எனவே சுருக்கமாக நாட்டின் நடப்பை கோடிட்டு காட்டுகிறேன். புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள்! புரியாதவர்கள் மன்னித்து விடுங்கள்! அவ்வளது தான் எமக்கு உள்ள நம்பிக்கை… (எதன் மேல்..?)
- எழுத்தாளர் கொலை
- விருதுகள், பதக்கங்கள் திரும்ப ஒப்படைப்பு
- நாட்டு மக்களை நம்ப வைத்து ஏமாற்றிய தலைவர்
- வீண் விளம்பரங்களால் மட்டும் ஆட்சி
- கருத்துச் சுதந்திரம் எது? தேச துரோகமெது?
- நீதிக்கே காவலில்லை! மக்களுக்கு……… எங்கே?
- உன் வீட்டுத் தோட்டத்தில் செடி கூட வேண்டாம்; உயிர்ப் பயிர் செய்ய தண்ணீர் கூடவா வேண்டாம்
- அந்நியனை அழைப்பதில் மட்டுமே அர்ப்பணிப்பு
- இம்மண்ணின் மைந்தனை காப்பாற்ற வேண்டாம்; வாழவாவது விடலாமல்லவா?
- ஊழல் ஊழல் என்றுரைத்து ஆட்சியேறி.. ஒழிந்ததா? தெரியலையே?
- உயர்வில்லை என்றாலுங்கூட பரவாயில்லை, அழிவில்லை என்றாவது இருக்கலாமல்லவா?
மறுப்பு: இக்கருத்துக்கள் கூட பல நிலைகளில் பல ஊடகங்களில் பார்த்த, கேட்ட, தெரிந்து கொண்ட விசயங்களின் அடிப்படையிலானதே! இவற்றோடு யாம் நேரடி தொடர்பேதும் கொண்டவரில்லை. இப்பதிவின் நோக்கம் ஒன்றே! ஒவ்வொரு முறையும் தேர்தல் நெருங்கும்போது எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியைப் பழிப்பதும், ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை தூற்றுவதும், சிரமத்திற்குள்ளாக்குவதும் தொடர்ந்து நடந்து கொண்டே தான் உள்ளது. இதிலிருந்து அறியப்படுவது யாதெனின்
எம்மைப் போன்ற சுய நல மிக்க கயவர்களுக்கு மத்தியிலிருந்து எப்படி யோக்கியன் வருவான்?
(கடைசியில் எம்மையும் பொய்யுரைக்க வைத்து விட்டீரே! வருங்கால சங்கதிகளே “இந்தத் தண்ணி எந்தண்ணியில்லை” )