மார்கழியில் அதிகாலை பூஜை ஏன்?
மார்கழி மாதம் என்பது பனிக்காலம் என்பது நாமனைவரும் அறிந்ததே! இயல்பாகவே மனிதன் உறங்கும்போதும்கூட உடல் உறுப்புகள் இயங்கிக் கொண்டே தான் உள்ளன. ஆனால், என்ன கூடுதலாக எப்பணியிலும் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்வதில்லை.
குளிர் அதிகமாக உள்ள காலத்தில் நாம் நமது உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். பொதுவாகவே சூரியோதயத்தின் போது மனிதன் ஆரோக்கியமாக வாழத்தேவையான ஜீவ வாயுக்கள் மிகுந்து காணப்படும்.
எனவேதான் இவ்விரண்டையும் கருத்தில்கொண்டு அதிகாலை வேளையில் எழுந்து குளித்து கோவிலுக்கு சென்று கடவுளை தரிசிக்கச் செய்தனர். அதிகாலை எழுந்து குளிப்பது உடலுக்குத் தூய்மையும் எழுச்சியும் தரும். பக்தியும் பக்தி சார்ந்த சிந்தனையும் மனதிற்கு தூய்மையும் எழுச்சியும் தரும்.
இலை மறை காயாக நமக்கு நன்மை பயப்பனவற்றையே நம் முன்னோர்கள் வாழ்க்கை நெறிமுறையென்று செய்திருக்கின்றனர் என்பது நமக்கு பெருமையான விசயமாகும்.
மார்கழியில் அதிகாலை எழுந்து இறைவனைத் தொழுது முக்தி பெறுவோம்!