Story Highlights
- அறிமுகம்: குழிப்பந்தாட்டம் - Golf
Golf – குழிப்பந்தாட்டம்
நன்றி: விக்கிபீடியா மற்றும் கூகுள் இணைய தளங்கள். இந்தப் பதிவின் அனைத்து கருத்துக்களும் விபரங்களும் கேள்வியறிவு மட்டுமின்றி மேற்கூறிய இணைய தளங்களின் உதவியோடே பதிவிடப்பட்டுள்ளது.
விளையாட்டு அறிமுகம்
நம்மில் பெரும்பான்மையோர் இவ்விளையாட்டைப் பற்றி அறிந்திருந்தாலும் சிறிது ஞாபகப் படுத்திக்கொள்வோம் அல்லது நமது ஞாபகங்களை சரி பார்த்துக் கொள்வோம்
GOLF – குழிப்பந்தாட்டம்
‘கோல்ஃப் – Golf’ ஒரு திறந்த வெளி மைதானத்தில் பல விதமான மட்டைகள் கொண்டு பந்தை சீராக அமைக்கப்பட்ட குழிகளுக்குள் குறைந்த முறை அடித்து விழ வைக்கும் விளையாட்டு. அம்மைதானத்தை ‘கோர்ஸ் – Course” என்பர். அம்மட்டையை ‘கிளப் – Club’ என்பர்.
இவ்விளையாட்டை, ‘கோல்ஃப் – கோல்ப்’, விளையாடும் மைதானதிற்கென்று எந்த நிலையான அளவுகோலும் இல்லை. கோர்ஸில் 9 அல்லது 18 குழிகள் வைக்கப்படும். ஒவ்வொரு குழியாக வரிசையாக பந்தை விழ வைக்க வேண்டும்.
பந்து அடிக்க ஆரம்பிக்கும் இடம் ‘டீ பொட்டி – Tee Box’ எனப்படும். குழி இருக்கும் இடம் ‘கிரீன் – Green’ எனப்படும். இவை இரண்டுக்கும் இடையே நிறைய நிலையான பகுதிகள் உண்டு. அவை ‘நன்னிலம் – Fairway’, ‘கடின தரை – Rough’ மற்றும் ‘இடையுறுகள் – Hazzards’
விளையாடுபவர்களில் யார் குறைந்த முறை பந்தை அடித்து குழிக்குள் விழ வைக்கின்றனரோ அவரே வெற்றியாளர். பந்தை அடிப்பதை ‘Stroke Play’ என்பர். குழுவாக விளையாடும்போது பந்தை அடிப்பதை “Master Play’ என்பர்.
வரலாறு
ஆதாரப்பூர்வமாக இவ்விளையாட்டு தோன்றிய காலம் மற்றும் நாடு தெரியாவிடினும், தற்போதைய நவீன கோல்ஃபின் தோன்றல் ஸ்காட்லாந்து என்றறியப்படுகிறது. கி.பி. 15வது நூற்றாண்டிலிருந்து விளையாடப்படுவதற்கு ஆதாரங்கள் உள்ளன. இவ்விளையாட்டுக்கான விதிமுறைகள் 1744ம் வருடம் முதல் இறுதி செய்யப்பட்டிருக்கின்றன. அதன் பின்னர் 2004ம் ஆண்டு உலக அளவில் சீர்திருத்தம் செய்யப்பட்டு நெறிப்படுத்தப்பட்டது.
கோல்ஃப் – ஒரு பார்வை
கோல்ஃப் மட்டை – GOLF CLUB
கோல்ஃப் பந்தை அடிக்க பயன்படும் மட்டை கோல்ஃப் கிளப் எனப்படுகிறது. ஒவ்வொரு மட்டையும் கைப்பிடியுடன் கூடிய நீளமான இரும்பினாலான கம்பியில் தலைப்பகுதியாய் ‘ட’ வடிவிலான பாகம் இணைக்கப்பட்டிருக்கும். இந்த தலைப்பகுதி தான் பந்தை அடிக்கப் பயன்படும். நன்னிலத்தில் நீண்ட தொலைவிற்கு பந்தை கடத்த பெரும்பாலும் மரத்திலான தலைப்பகுதியையே பயன்படுத்துகின்றனர். ஒரு போட்டியில் அதிக பட்சமாக 14 விதமான கிளப்களை பயன்படுத்தலாம். ஒவ்வொரு கிளப்பும் ஒவ்வொரு விதமான ஷாட்களுக்கு பயன்படுத்துவர்.
கோல்ஃப் பந்து – GOLF BALL
கோல்ஃப் பந்து இவ்விளையாட்டிற்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படுவது. இதன் நிறை 45.93 கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதன் விட்டம் 42.67 மில்லி மீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும். கோல்ஃப் கிளப் மற்றும் பந்து ஆகியன R & A மற்றும் USGA ஆகியவற்றின் அனுமதி பெற்றவையாக இருக்க வேண்டும்.
கோல்ஃப் மைதானம் – GOLF COURSE
கோல்ஃப் மைதானம் (Golf Course) 9 அல்லது 18 குழிகள் கொண்டதாய் இருக்கும். ஒவ்வொரு குழிக்கும், டி பொட்டி (பந்தை அடிக்கும் இடம்), நன்னிலம் (சம தளம்), கடின தரை மற்றும் தடைகள் (நீர் நிலைகள் அல்லது மணல் குவியல்கள்) இறுதியாக பசுங்குழி (Green) ஆகியன இருக்கும்.
கோல்ஃப் களத்தின் மாதிரியாவது,
- பந்து அடிக்கும் இடம் (Teeing Ground)
- நீர் நிலை (Water Hazard)
- கடின தரை (Rough)
- வெளி எல்லை (Out of Bound)
- மணல் குவியல் (Sand Bunker)
- நீர் நிலை (Water Hazard)
- நன்னிலம் (Fairway)
- குழிப்பகுதி (Putting Green)
- கொடிக்கம்பம் (Flagstick)
- குழி (Hole)
விளையாடும் முறை மற்றும் விதிகள்
உலகளவில் கோல்ஃப் விளையாட்டின் விதிமுறைகள் 1754ம் வருடம் நிறுவப்பெற்ற ‘தி ராயல் அண்ட் ஆன்சியன்ட் கோஃல்ப் ஆஃப் செயின்ட். ஆண்ட்ரூஸ்’ கிளப் (The Royal and Ancient Golf Club of St Andrews) மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் கோல்ஃப் அசோசியேசன் (United States Golf Association – USGA) ஆகியவற்றால் கூட்டாக நிர்வகிக்கப்படுகின்றது.
கோல்ஃபெர்கள் (Golfers) இவ்விளையாட்டின் விதிமுறைகளுக்குட்பட்டு, மட்டுமின்றி Golf Etiquette (கோல்ஃப் விளையாட்டின் ஒழுங்குமுறைகள்)ன் வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொரு சுற்றிலும் ஒரு கொடுக்கப்படுகின்ற வரிசைப்படி பந்தை குழிக்குள் விழ வைக்க வேண்டும். பொதுவாக ஒரு சுற்று என்பது 18 குழிகள் கொண்டதாய் இருக்கும். ஒவ்வொரு குழிக்குள்ளும் ஒருமுறை பந்தை விழ வைக்க வேண்டும். 9 குழிகள் கொண்ட மைதானத்தில் வீரர்கள் குறுகிய சுற்றுப்போட்டி அல்லது முழுச்சுற்றுப்போட்டியாக விளையாடுவர். குறுகிய சுற்றுப் போட்டியாவது 9 குழிகளுக்குள் ஒவ்வொரு குழியாக ஒருமுறை பந்தை விழச்செய்து மீண்டும் ஒருமுறை அதே வரிசையில் விழச்செய்வதாகும். முழுச்சுற்றென்பது 9 குழிகளுக்குள் ஒவ்வொரு குழிக்குள்ளும் இரண்டு முறை பந்தை விழச் செய்வது.
தரமிடுதல் (Scoring)
சம நிலை – Par
ஒவ்வொரு குழியும் ‘Par- சம நிலை’ கொண்டே வகைப்படுத்தப்படுகின்றது. ‘Par-சம நிலை’ என்பது ஒரு திறமையான, தேர்ந்த கோல்ஃபெர் ஒரு குழியை ஆட குறைந்த பட்சமாக எடுத்துக் கொள்ளும் ஷாட்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். எந்தவொரு குழியையும் ஆட குறைந்த பட்ச அளவு Par 3 ஆகும். அஃதாவது ஒரு டி ஷாட், இரண்டு தள்ளல்கள் (Putts). பெரும்பான்மையான கோல்ஃப் மைதானங்கள் Par 4 மற்றும் 5 ஷாட்கள் ஆடுபவையாகவே உள்ளன.
பொதுவாக, சராசரியாக Par 4 அளவு உள்ள 18 குழிகள் கொண்ட ஒரு மைதானத்தின் Par அளவானது ஒரு முழுச்சுற்றுக்கு 72 ஆக இருக்கும்.
ஒரு கோல்ஃபெரின் குறிக்கோளாவது எவ்வளவு குறைவாக பந்தை அடித்து குழிக்குள் விழ வைக்க வேண்டுமென்பதே. ஒரு கோல்ஃபெரின் ஸ்கோரானது ‘Par Score’ க்கும் அந்த கோல்ஃபெரின் ஷாட்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசமே ஆகும். ‘Ace – ஒன்றில் குழி’ என்பது, ஒரு கோல்ஃபெர் ஒரே அடியில் ‘டி’ யிலிருந்து குழிக்குள் விழ வைப்பது. இதே போல் ஒவ்வொரு ஸ்கோருக்கும் ஒரு சொல்லடை (சொற்பெயர்) உண்டு.
- -4 Condor (கருடன்) [Par ஐ விட 4 ஷாட்கள் குறைவாக அடித்தல்]
- -3 Albatross (கடற்பறவை) [Par ஐ விட 3 ஷாட்கள் குறைவாக அடித்தல்]
- -2 Eagle (கழுகு) [Par ஐ விட 2 ஷாட்கள் குறைவாக அடித்தல்]
- -1 Birdie (பறவை) [Par ஐ விட 1 ஷாட் குறைவாக அடித்தல்]
- E Par (சம நிலை) [Par க்கு இணையான ஷாட்களில் அடித்தல்]
- +1 Bogey (எச்சரிக்கை) [Par ஐ விட 1 ஷாட் கூடுதலாக அடித்தல்]
- +2 Double Bogey [Par ஐ விட 2 ஷாட்கள் கூடுதலாக அடித்தல்]
- +3 Triple Bogey [Par ஐ விட 3 ஷாட்கள் கூடுதலாக அடித்தல்]
கோல்ஃப் -ன் வடிவங்கள்
கோல்ஃப் விளையாட்டு பெரும்பாலும் இரண்டு விதமாக விளையாடப்பட்டு வருகின்றது.
- மாஸ்டர் ப்ளே (Master Play)
- ஸ்ட்ரோக் ப்ளே (Stroke Play)
இவற்றில் ஸ்ட்ரோக் ப்ளே முறை மிகவும் பிரபலமானதாகும். இவற்றைப் பற்றி சுருக்கமாக காண்போம்.
மேட்ச் ப்ளே – Match Play
இரண்டு வீரர்கள் அல்லது அணிகள் ஒவ்வொரு குழியையும் தனித்தனியாக எதிரெதிர் விளையாடுவது. குறைந்த ஸ்கோர் எடுக்கும் வீரர் / அணி வெற்றி பெற்றவராவர்.
ஸ்ட்ரோக் ப்ளே – Stroke Play
ஒரு சுற்றில் ஒவ்வொரு குழியும் விளையாடிய பிறகு அனைத்து ஸ்கோர்களையும் இறுதியாக கூட்டிய பிறகு யார் குறைவாக ஸ்கோர் செய்திருக்கிறாரோ அவரே வெற்றியாளர்.
காத்திருங்கள்! இந்தியாவில் கோல்ஃப்!!
மிக விரைவில்!!