Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

Law and Court are not the King of Life

Law is not the King
Law is not the King

Story Highlights

  • Stop acting too Smart!

மறுப்பு

  • இந்தப் படங்கள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை
  • இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது.
  • இவை எனது சமுதாய அக்கறையில் பதிவு செய்யப்பட்டது.
  • எனினும் இதில் எவ்விதமான விவாதத்திற்கும் போட்டிகளுக்கும் இடமில்லை.
  • இப்பதிவில் தங்களுக்கு உடன்பாடில்லை எனில் படிக்க / பார்க்க வேண்டாம்.
  • அப்படியே படித்து / பார்த்து விட்டாலோ இதில் விவாதித்து உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.
  • கூடுதல் மறுப்பையும் சேர்த்துப் பார்க்கவும் (இப்பதிவின் இறுதியில்)

நன்றி!!!

 

 

Translation in English

Disclaimer

  • This post is not for hurting / insulting anybody
  • This post is the sole property of the Author
  • This post is being published in the view of Welfare of Society
  • We do not entertain any discussions / arguments regarding the post
  • Please Avoid reading if you disagree with the post
  • Even if you have read unknowingly kindly leave it without wasting your valuable time
  • Also read the disclaimer at the end of this post

Thanks

Law and Court are not the King of Life!!

சட்டமும் நீதிபதிகளும்

சகலமும் அறிந்த

சாணக்கியருமல்ல!

சத்தியம் காக்கும் 

சத்ரியருமல்ல!

குருடாய்ப் போன 

குறுக்கு விசாரணைகளையும்

பதராய்ப் போன

பொய் சாட்சிகளெல்லாம்

வாத ஒளி கொண்டே அறியப்படும் போது

நீதி எங்கே? அதன் பதி எங்கே?

நீதிஎன்றால் என்ன?

அவை கோலோச்சும் மன்றமென்றால் என்ன?

அரசன் விசாரிக்காது

தவறிழைத்தானென்று

தன்தவறுணர்ந்த போது 

உயிர் துறந்தான்!

அதுவே நீதி! அவன் அரனே 

நீதி மன்றம்!

உன்னிலை இவ்வாறிருக்க

என்னிலை குறித்துரைக்க 

மண்ணிலே மாண்பேது?

ஆட்டம் அறிவாயா?

அதன் தோற்றமறிவாயா?

வாட்டம் அறிவாயா?

அதன் ஊக்கமறிவாயா?

என் செய்தாய் நீ?

நான் விளையாட?

எங்கள் வீர பொம்மு

பரங்கியனைக் கேட்டதுபோல்

நாம் உன்னைக் கேட்கிறோம்!

மை தானம் தந்தாயா?

மயிறளவு தானம் தந்தாயா?

மட்டை தந்தாயா?

அதிலடித்து விளையாட

பந்து தந்தாயா?

அரசாங்கங்கள் வருமானமாய்

அலங்கரித்தால் 

அதில்நீயும் குளிர்காய்வாயா?

தர்மப்படி தகுதியில்லை

நீ தீர்ப்பு சொல்ல!

நல்ல சாலையில்லை

குருட்டு நீதியே!

கவசமெதற்கு கட்டாயம்

மலட்டுத் தலைக்கு!

பொதுப்பணமெல்லாம்

தனிநபரின் தண்டோராவாய்போயும்

நீதி எங்கே அதன் அதிபதிகள் எங்கே?

சட்டம் படித்துவிட்டால்

சகலமும் நீரா?

எங்கள் வாழ்க்கைநெறி

பண்பாடு உமக்கு கீழா?

காசுக்காய் மாரடித்த நீரா

தேச நீதிக்கு அதிபதி?

நான் போற்ற மாட்டேன்

உம்மை என்றும்!

தூற்றியுமிருக்க மாட்டேன்

இன்றும்!

ஆனால்…!

நாளொரு பொழுதும்

மனநிலை தவறிய 

பாழ்நிலையடைந்த

ஊடகங்களில்

அவர்களுமறியாமல்

பதியப்பட்டுவிட்ட

சான்றுகளே 

பாவியாய் எமைச் செய்தன

இல்லை பாவியானேன் 

நானின்று!

தர்மம் காப்பதே நீதி

தீர்ப்புக்கள் திருத்தப்படும்போது

அத்தீர்ப்பின் நீதிபதிகளும்

சாட்சிகளும், 

வாதாடிய வழக்குரைஞர்களும்

திருத்தப்பட வேண்டும்

Law is not the King
Law is not the King

எமக்கு சம கால நீதியின் மீதும் அதன் காவலர்களின் மீதும் எழுந்த மனக்குறையே இப்பதிவு! எல்லா துறைகளிலும் நல்லவர்கள் இருந்தாலும் இன்றைய காலத்தில் கெட்டவையே பெரிதாக புலப்படுகிறது! நீதிமன்றகளில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது சட்ட நுணுக்கங்களை மட்டும் அடிப்படையாக வைத்து சுய விளம்பரங்களுக்காக கவனம் செலுத்தும் நிலை அதிகமாக உள்ளது Hence the Law and Court are not the King of Life

  • தலைக்கவசத்தை விட தரமான சாலைகளே முக்கியம்
  • ஆன்மீகத்தில் தலையிடுவதை விட ஆட்சியாளரின் மாண்பே முக்கியம்
  • விளையாட்டில் தலையிடுவதை விட மக்கள் வாழ்க்கைத் தரமே முக்கியம்

 

உங்களால் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா?

  • மக்களை மக்களுக்காக என்று மிரட்ட தெரிந்த உங்களுக்கு (தலைக்கவசம் கட்டாயம்) அரசாங்கத்துக்கு ஆணையிட துணிவு உள்ளதா? (தரமான சாலைகள் அவசியம் என்று)
  • குறிப்பிட்ட சில ஆன்மீக விசயங்களில் தீர்ப்பு சொல்கின்ற நீங்கள் எல்லா மதத்திலும் தலையிட்டு தீர்ப்பு சொல்லத் துணிவு உள்ளதா?
  • விளையாட்டில் தலையிடும் நீர் அவ்விளையாட்டின் நலனுக்கு ஒரு ஆணியாவது அடித்திருப்பீரா?
  • எங்கள் பண்பாட்டை மிருகவதை என்று சொல்லும் நீர் மிருகங்களை கொண்றுண்ணும் பழக்கத்தை தடை செய்யத் துணிவு உள்ளதா?
  • கடைசியாக, உங்கள் முதுகில் இல்லை, முகத்தில் உள்ள திரையை சுத்தம் செய்யுங்கள். ஊரின் ஊனமெதுவென்று தெரியும்

நீதிதேவனின் கண்கள் மூடப்பட்டிருப்பது நீதியைப் பாரபட்சமின்றி வழங்குவதற்காகவே!

நீதி குருடாய்ப் போவதற்கில்லை!!

 

Disclaimer (மறுப்பு): இதன் (இப்பதிவின்) எதிர் விளைவுகள் யாவும் இக்கருத்து உண்மையென்று நிரூபிப்பவை ஆகும்! எதிர் விளைவுகள் இல்லையெனில் இப்பதிவில் உண்மையில்லை மேலும் தாம் எம்மை மன்னித்து விட்டதாய் ஆகும்

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *