Story Highlights
- ஒரு நாள் கூத்து!
Advantage ஆளுங்கட்சி
வந்தாச்சு தேர்தல் தேதி! எல்லோரும் ஏமாற ரெடி!
மக்களாட்சி
எங்கள் பாரத தேசமென்று தோள் தட்டுவோம்! எங்களை நாங்களே ஆள்கிறோம்! (ம்! அப்படியா?)
எங்கள் பிரதிநிதி எங்கள் சேவகன் எனில் ஏன் உரைக்க வேண்டும் மாண்புமிகு சேர்த்து?
எங்கள் உரிமை எங்கள் கடமை எமது வாக்கு! ஆனால் ஏன் செலுத்த வேண்டும்?
எங்கள் சேவகர் எமக்கு எதற்கு பணம், பொருள், பரிசு தரவேண்டும்; எங்கள் வாக்கிற்கு?
எல்லாமும் எல்லோருக்கும் பொதுவெனில் ஏனிந்த ஏற்ற தாழ்வு?
மக்கள் சேவை மகேசன் சேவை என்பர்! இங்கே மதம், மனம் புண்படும் செயலேன்?
பொய் உரைத்து, பொருள் கொடுத்து பெரும் சாதனையா ஆற்றுவர்?
அட! இந்த அறிவு இருந்திருந்தா மாத்தி மாத்தி குற்றம் சாட்டப்பட்டவங்களையே ஏன் கொண்டாடப்போறீங்க?
உண்மையைச் சொல்லக்கூடாது நண்பரே! பேராசை பிடித்த, பிச்சைக்கார, ஈனமற்ற, துரோகிகளிடமிருந்து நல்லவன் எப்படி வருவான்? (ம்! யாரைச் சொல்ற? அட சத்தியமாக உங்களையும் என்னையும்தான் சொல்றேன்!) தவறே செய்யாதவன் நேர்மையானவனென்று பொருளில்லை! எவனொருவன் தவறு செய்ய வாய்ப்பு இருந்தும் தவறிழைக்காமல் கட்டுப்பாடோடு இருக்கிறானோ அவனே நல்லவன்!
அரசாங்கம்
மக்களின் அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்வது மற்றும் அனைவர்க்கும் சமமாய் தருவதும் அரசின் கடமை
அடிப்படை தேவைகள் என்ன?
உண்ண உணவு, உடுத்த உடை, உறைய இடம்!
இதை அரசாங்கமா தரும்? அப்படி தந்தால் அது அரசாங்கமா?
தனி மனிதன் ஒருவன் தன் மனம், அறிவு தெளிய கல்வி, உறைய, உடுத்த, உண்ண வருமானத்தை நேர்மையாக அடைய, உகந்த தொழில் வாய்ப்புகள் மற்றும் பயிற்சிகள்
போக்குவரத்து, பொழுதுபோக்கு, மருத்துவம், பாதுகாப்பு இவற்றை உறுதி செய்வதும் அரசாங்கமே!
குடும்பத்தலைவர் ஒருவர் பொறுப்பும் திறமையும் அற்றவராய் இருந்தால் குடி விளங்குமா?
பின் எப்படி பொறுப்பும் திறமையும் அற்றவரை தலைவரென்கிறீர்?
இடம் அவற்றின் வசதி வாய்ப்புகள், பொருள் மற்றும் அவற்றின் தேவை மதிப்புகள், காலம் மற்றும் திட்ட நோக்குகள் பற்றி அறிந்து, ஆராய்ந்து, தெளிந்து தேர்தலே ஒரு சிறந்த அரசின் இலக்கணம்!
தேர்தல் கூத்து
எப்படியும் ஏதோ ஒருத்தருக்கு ஒட்டுப் போடப்போறீங்க! காசு கொடுத்தா வாங்கிட்டு போட்டீங்கன்னா உங்களை வித்துடீங்க, உங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படற அரசாங்கத்தைக் குறை சொல்ல தார்மீக உரிமையில்லை! காசு வாங்காம ஓட்டுப் போட்டீங்கன்னா நீங்க ஒரு ஏமாளிம்பாங்க! தேர்ந்தெடுக்கப்படற அரசாங்கத்தை உங்களால ஒண்ணும் சொல்ல முடியாது! சொன்னாலும் யாரும் கேட்க மாட்டாங்க!
போடுங்க (ம்மா)/(ண்ணா) ஓட்டு
போடுங்கம்மா ஓட்டு! ஓசி டிவியக் கேட்டு!
போடுங்கண்ணா ஓட்டு! ஓசி போனைக் கேட்டு!
என் வாக்கு என் கடமை! என் கடமை என் உரிமை!
என் வாக்கைப் பெறும் தகுதி எவருக்கும் இத்தேர்தலில் இல்லை!
ஆனாலும் உள்மனம் சொல்கிறது! ஆளுங்கட்சியே வெல்லுமென்று!
பைனல் பஞ்ச்
சாக்கடையில் ஊறிய மட்டையில் எந்த மட்டை நல்ல மட்டை?
தெரியாத பிசாசை விட, தெரிந்த பேயே மேல்!