Story Highlights
- Net Run Rate
Net Run Rate
நெட் ரன் ரேட் (நிகர ரன் விகிதம்) என்பது கிரிக்கெட் விளையாட்டில் குறிப்பாக ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளில் அணிகளின் தர வரிசையை நிர்ணயிக்க முக்கிய பங்காற்றுகிறது!
குறிப்பிட்ட ஒரு போட்டியில் ஒரு அணியின் ‘Net Run Rate’ என்பது அவ்வணியின் பேட்டிங் ரன் ரேட்டிலிருந்து எதிரணியின் பேட்டிங் ரன் ரேட்டைக் கழித்தால் வரும் எண்ணிக்கை ஆகும்!
How to calculate Net Run Rate in Cricket ஒரு உதாரணத்தின் மூலம் இதைக்காண்போம்!
போட்டி: நீங்க vs நாங்க
- நீங்க முதலில் பேட் செய்து 385 ரன் அடிச்சுட்டீங்க 50 ஓவரில்
- நாங்க ரெண்டாவது பேட் செய்து 340 ரன் அடிச்சுட்டோம் 50 ஓவரில்
இப்போது ரெண்டு அணிகளின் பேட்டிங் ரன் விகிதத்தைப் பார்ப்போம்!
- நீங்க – 7.7 ரன்/ஒரு ஓவருக்கு
- நாங்க- 6.8 ரன்/ஒரு ஓவருக்கு
அப்படின்னா ரெண்டு அணிகளின் நெட் ரன் ரேட்
- நீங்க = +0.900
- நாங்க= -0.900
இப்போது இது எப்படி வந்ததுன்னு பார்ப்போம்!
ஒரு அணியின் பேட்டிங் ரன் ரேட்ங்கிறது அந்த அணி எடுத்த ரன்னை எத்தனை ஓவர்கள் விளையாடி எடுத்தாங்களோ அவ்வோவர்களால் வகுத்தால் வருவது. இதுல ஒரு முக்கியமான விசயம் என்னன்னா, அந்த அணி முழுமையாக விளையாடாம இடையிலேயே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்திருந்தால் கூட அப்போட்டியில் அவ்வணிக்கு ஒதுக்கப்பட்ட ஓவர்களால் வகுக்க வேண்டும். 50 ஓவர் போட்டியில் 35 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 50 ஓவர் விளையாடியதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்!
இப்போது கணக்கைப் பார்ப்போம்!
நீங்க
எடுத்த ரன் – 385
விளையாடிய ஓவர் – 50
ரன் ரேட் – 385 /50 = 7.7
நாங்க
எடுத்த ரன் – 340
விளையாடிய ஓவர் – 50
ரன் ரேட் – 340 /50 = 6.8
Net Run Rate
நீங்க = (எடுத்த ரன் ரேட் – கொடுத்த ரன் ரேட்) 7.7 – 6.8 = +0.900
நாங்க= (எடுத்த ரன் ரேட் – கொடுத்த ரன் ரேட்) 6.8 – 7.7 = -0.900
இது ஒரு எளிய கணக்கு! ஒரு போட்டித்தொடரில் அவ்வணிகளின் நெட் ரன் ரேட் என்பது அனைத்துப் போட்டிகளுக்கும் சேர்ந்ததாய் இருக்கும். அதாவது அனைத்துப் போட்டிகளிலும் எடுத்த, கொடுத்த ரன்களின் வித்தியாசமாய் எடுத்தக்கொள்ளப்படும்!