Story Highlights
- A self remembrance
Prayer – இறைவழிபாடு
நல்ல மனிதனாக இருக்க வேண்டும்!
நல்ல வேலைக்காரனாக இருக்க வேண்டும்!
அசாத்தியமான அமைதியும் நிதானமும் வேண்டும்!
இறையருளும் ஆசியும் இருந்தால்
இவையனைத்தும் தானாகவே கிடைக்கும்!
எம்மதம் சார்ந்தவராயின், எக்கடவுளைத் தொழுபவராயின் இறைவன் ஒருவனே! அவன் அம்சமே நாம்! நமக்கு பிடித்த பெயரில், பிடித்த முறையில் வணங்குவோம்! வணங்காவிடிலுமவன் வருந்துவதுமில்லை! பிரார்த்தனைகள் நன்னீரோடும் நதிபோல் நம்மை தூய்மைப்படுத்துபவை!
தனியொரு மனிதன்
மனிதனாக வாழ
பணி செய்தே
வாழ்ந்திடல் வேண்டும்!
உணவிற்கும் உறைவிட்கும்
உழைப்பும் ஊதியமும்
உயிர் வாழ வேண்டும்!
உலகம் நல்லதாக
உன்னிலிருந்தே
ஊக்கமும் ஆக்கமும் வேண்டும்!
உழைப்பே அவசியமதில்
உழைப்பாளியா முதலாளியா
பழிப்பு விலக்க வேண்டும்!
ஆசைகளும் ஆபத்துக்களும்
ஆழியெங்குமென்றும்
பொது நிலையே!
கோபங்களும் துரோகங்களும்
பூவுலகமெங்குமென்றும்
இணை நிலையே!
எச்சூழல் எச்சூது வரினும்
அமைதியும் நிதானமுமே
கரைசேர்க்கும் பரிசல்!
இறைவனைத் தொழுது
இறைவனில் தோய்ந்து
இயற்கையாய்ச் செழிப்போம்!
மாற்றம் எதுவும் – மனதில்
ஏற்றம் இல்லையெனில்
உலகில் தோற்றம் இல்லை!
தனி மனிதனுக்கு உண்ண உணவு, தங்க உறைவிடம் அடிப்படை தேவையாகும். அது அனைவருக்கும் கிடைத்திட வேண்டும்! அதற்கு அவர் உழைத்திட வேண்டும்! தங்கமே உருக்கி குழம்பாக ஊற்ற நினைத்தாலும் அதை ஏந்தும் பாத்திரம் அச்சூட்டை தாங்கும் வலுவுள்ளதாக இருக்க வேண்டும்! எனவே, ஒரு தனி மனிதன் தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள, அவனுக்கான உணவை, உறைவிடத்தை நேர்மையாக அமைத்துக்கொள்ள வாய்ப்புகள் தரப்பட வேண்டும்!
நேர்மை, நீதி, நியாயம் பேசும் உலகில்
ஏன் அதைக் கடைபிடிக்க இவ்வளவு கடினம்?
மனமிருந்தால் மார்க்கமுண்டு!