Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

கபாலி – திரை விமர்சனம்

Kabali
Photo Credit To Downloaded via Google Search

Story Highlights

  • தத்துவம், கவிதை

கபாலி – திரை விமர்சனம்

வேறு யாரும் முந்திக்கொள்ளும் முன் சொல்லி விடுவோம்! இந்தப் பதிவுக்கு முன்பே கடந்த சில மாதங்களாக பதிய வேண்டிய ஒரு விசயம் இன்று இந்தப் பதிவிலேயே சிறிது வெளிப்படப் போகிறது! இருந்தாலும் பரவாயில்லை! தொடர்வோம்! இந்த சம்பிரதாய மறுப்பை தாண்டி வந்தீர்களென்றால் நமது பார்வை: கபாலி – திரை விமர்சனம்!

 

மறுப்பு

  • இந்தப் படங்கள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை

  • இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது.

  • இவை எனது சமுதாய அக்கரையில் பதிவு செய்யப்பட்டது.
  • எனினும் இதில் எவ்விதமான விவாதத்திற்கும் போட்டிகளுக்கும் இடமில்லை.
  • இப்பதிவில் தங்களுக்கு உடன்பாடில்லை எனில் படிக்க / பார்க்க வேண்டாம்.
  • அப்படியே படித்து / பார்த்து விட்டாலோ இதில் விவாதித்து உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.

நன்றி!!!

 

Translation in English

Disclaimer

  • This post is not for hurting / insulting anybody

  • This post is the sole property of the Author

  • This post is being published in the view of Welfare of Society
  • We do not entertain any discussions / arguments regarding the post
  • Please Avoid reading if you disagree with the post
  • Even if you have read unknowingly kindly leave it without wasting your valuable time

Thanks

 

கபாலி

திரு. ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருக்கும் படம். லிங்காவிற்குப் பிறகு வரும் படம் என்பதாலும் அப்படத்தின் போது எழுந்த சில சலசலப்புகளை மறக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் வரும் படம். இயக்குநர் ரஞ்சித் ‘மெட்ராஸ்’ ன் வெற்றிக்கு பிறகு இயக்கும் படம். படத்தைப்பற்றி இயக்குனரின் சொந்த விமர்சனம், இது வழக்கமான ரஜினி படமாக இருக்காது என்பது.

எதிர்பார்ப்பு

இயக்குனரின் இந்தப் பதிலே ஒரு செயற்கையோ என்னும் சந்தேகத்தோடே படம் காணச் சென்றோம். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில் பாடல்கள் மற்றும் அதன் வரிகள்! ஆக படம் ரஜினி படமா? ரஞ்சித் படமா? என்பதே ஒரு குழப்பத்தைத் தந்தது!

கபாலி – கதை

அதை சொல்லும் உரிமை நமக்கில்லை. படத்தின் அடிநாதம் இது தான் “கத்தியை எடுத்தவனுக்கு கத்தியே தான் தீர்வும் தரும்!”. மேலும் “உலகம் துரோகிகளால் நிறைந்து கிடக்கிறது!”

இந்தப்படம் பார்த்த பிறகு நமது மனநிலையில் சிறிது உறுத்தல்! அது உறுத்தலா? அல்லது தவிப்பா? அதையும் சீர் தூக்கிப் பார்ப்போம்! எப்படி? இனி வரும் எல்லா விசயங்களையும் இரண்டு விதமாக பார்ப்போம்! ஒன்று உண்மை! இன்னொன்று பொய்!

ரஜினி 

கபாலி படம் ரஜினி படம்ங்கிற கோணத்தில் பாப்போம்!

உண்மை

படம் மற்றும் ரஜினியின் ஸ்டைல், நடிப்பு எல்லாம் அருமை! திரைக்கதை அருமை! வேறு எப்படியும் இதை விட நன்றாக எடுக்க முடியாது! பாடல்கள், சண்டைக்காட்சிகள் அருமை! படம் ஹிட்! நன்றாக ஓடிடும்! அருமையாக வியாபாரமாகக் கூடிய கதைக்களம்!

பொய்

ஆனாலும் இது ரஜினி படமாக எம்மால் பார்க்க இயலவில்லை. எப்படி இருக்காரோ, அப்படியே நடித்திருக்கிறார் என்பது எனக்கு புரிந்தாலும், காலத்தின் கோலமதை ஒத்துக்கொள்ள மறுக்கும் மாந்தர்களைக் காணும்போது விந்தையாகவே உள்ளது. அது நம்மையும் மறு சீராய்வு செய்யச் சொல்கிறது – ஒரு வேளை நாம் தான் சரியில்லையோ என்று! எல்லா இடங்களிலும் ஒரு வெற்றிடமும் அதைச் செயற்கையாக நிரப்பும் அவசரங்களும் உணர முடிகிறது. அந்தக்கலவை பார்வையாளனின் எண்ணத்தில் ஒரு ஏமாற்றத்தை உண்டு பண்ணுவதை உணர முடிகிறது.

ரஞ்சித்

கபாலி படம் ரஞ்சித் படம்ங்கிற கோணத்தில் பார்ப்போம்!

உண்மை

படம் செம! ரஞ்சித் ரஜினி ஸ்டைலையும், கதையையும் சரியாக கலந்து ஒரு வெற்றிப்படம் தந்திருக்கிறார். எல்லா நடிகர்களிடம் மிகவும் அருமையாக வேலை வாங்கி ஒரு அருமையான படம் தந்திருக்கிறார்.

பொய்

படம் மற்றும் திரைக்கதை அமைப்பு ஒரு இயக்குனரின் படம் போன்ற தோற்றம் கொடுத்தாலும் இது நிச்சயம் ரஜினியின் அக்மார்க் படமுமல்ல! ரஞ்சித்தின் அக்மார்க் படமுமல்ல! களம், தளம் வேறென்றாலும் தொழில் நேர்த்தியில் சிறிது செயற்கைத்தனம் தெரிகிறது. ஒருவேளை இயக்குனரின் தொலைக்காட்சி பேட்டியின் வரிகளையும் நினைத்துப்பார்க்க வைக்கிறது – “படத்தை விளம்பரப்படுத்தியது போதும்! வெளியிடுங்கள்!”

கபாலி – களம்

கதையைத்தான் சொல்லக்கூடாது! அது நடைபெறும் இடமாக சொல்லப்பெறும் இடம் – நாடு: மலேசியா! படத்தின் பெரும்பான்மையான பகுதிகள் பதிவு செய்யப்பட்ட தேசம்! ஆனால் படத்தின் கதையினால் அந்நாட்டின் மேல் நம் மக்களுக்கு ஏற்படப்போவதோ எதிர்மறையான எண்ணம்தான். அது மட்டுமன்றி சீனர்கள், மலேசிய மக்கள், ஏன் அங்கு வாழும் சக தமிழர்கள் மீதும் கூட ஒரு தவறான பார்வையையே பதிவு செய்கிறது. இது வெறும் ரஜினி படமாக இருந்திருந்தால் கூட மக்களுக்குப் பிடித்த மாதிரி இருந்திருக்கும். ஆனால் இயக்குனர் படம்ன்னு அவரே சொல்கிறாரே! ரஜினி போன்ற ஒரு காந்த சக்தியை நல்ல விஷயங்களுக்கே பயன்படுத்த வேண்டும்.

கபாலி-தளம்

ரஜினி, சாதிக்க வேண்டியதென்று எதுவுமில்லை! யாருக்கும் நிரூபிக்க வேண்டிய எந்தத் தேவையுமில்லை! அழகா, சாதாரணமாக செய்தாலே போதும். ஆனால் அவரை வைத்து தயாரித்து இருக்கும் நண்பர்களுக்கு, அவர் படத்தை விநியோகம் செய்து வியாபாரம் செய்யும் மற்ற அனைவருக்கும் இது ஒரு திருவிழா! ஏனெனில் இது அவர்களின் வருமானத்தின் வாய்ப்பு! அந்த வியாபாரத்தின் விசுவரூபம் பல இடங்களில் உணர முடிகிறது. நடிகர், நடிகையர், படப்பிடிப்பு செய்யப்பட்ட இடங்கள் இப்படி எல்லாவற்றிலும் அந்த வியாபாரத்தின் கால் வெளிப்படையாகத் தெரிகிறது. இருந்தாலுங்கூட ரஜினி நடிப்பதாலேயே பெரும்பான்மையான மக்களும் பொருட்படுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை!

பாடல்கள் மற்றும் இசை

பாடல்களில் இருந்த வீரமிகு மற்றும் புரட்சிகர சொற்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமை. ஒரு வேளை அதன் வீரியம் வியாபார நோக்கிலான திரைக்கதை, காட்சி அமைப்புகளின் பலவீனத்தை நம் மனதில் பதிவு செய்து விடுகிறதோ!

ரஜினி
ரஜினி

கபாலி

மேலே படித்த அனைத்து விசயங்களையும் படிக்கும்போது ஒரு எதிர்மறை உணர்வே தோன்றும்! ஆனாலுங்கூட பதிவு செய்ய மற்றொரு விசயமும் உண்டு. சம காலங்களில் வெளிவந்த மற்ற படங்களைக்காட்டிலும் கபாலி நிச்சயம் நல்ல படம்தான். ஒரு சில நிமிட காட்சிகள் தவிர்த்து ஆபாசம் இல்லை. கதையின் பொருட்டு வன்முறைக்காட்சிகள் உண்டு. மற்றபடி கபாலியின் சாதனைகளைப் பற்றி எழுத விருப்பமுமில்லை! அதில் ஆர்வமுமில்லை! ஏனெனில் மொக்க படத்தையே  ‘XX ‘ ஹிட் ,’—-‘ ஹிட் என்று தவமிருந்து போட்டிபோட்டு பார்க்கிற மக்களுக்கு சுடச்சுட சூடாக பிரியாணி கணக்கா, கொஞ்சம் சென்டிமென்ட், கொஞ்சம் திருப்பம், கொஞ்சம் அதிரடி, கொஞ்சம் ஸ்டைல், கொஞ்சம் கதைன்னு ஒரு படம் கிடைச்சா விடவா போறாங்க? எப்படியும் இந்தப்படத்தின் வியாபாரத்தில் ஈடுப்பட்ட அனைத்து குடும்பங்களும் நல்ல நிலையை அடைவாங்க! மகிழ்ச்சி!

கபாலி – மதிப்பீடு

ரஜினி – வழக்கம்போல் கதை இருந்தாலும் இல்லாவிட்டாலும் படத்தைக் காப்பாற்றும் தலைவன்

இதர நடிகர்கள் – ‘அட்டகத்தி’ தினேஷ் தவிர மற்றவர்கள் கொடுத்த வாய்ப்பை மட்டும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நடிப்பு பயிற்சியின் நோக்கமே இது தானா என்பது அதிர்ச்சி

ரஞ்சித் – மக்கள் சக்தியையும் சரியாக கையாளாமல் தனது முழுத்திறனையும் வெளிப்படுத்த முடியாமல் கட்டுண்டது போல் தெரிகிறது இயக்கம்

இசை – தலையே தடுமாறும் போது, இசை என்ன செய்ய முடியும். பாடல்கள் படம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. அருமையாக பொருந்தியும் வருகிறது. அதில் இரண்டு எப்போதும் மனதில் திரும்ப திரும்ப ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கவும் செய்கிறது

திரைக்கதை – இந்தக்களத்தை இயக்குனர் தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

ஒளிப்பதிவு – குறையொன்றும் பெரிதாய் தெரியவில்லை; சில இடங்களைத் தவிர்த்து!

கதை – மக்கள் நாயகனொன்றே போதும் என்று நினைத்திருந்தால் கதையும் நன்றாகவே வந்திருக்கும். ஏனெனில் இந்த மாதிரி கதைகளில் நடிக்க வேறு நாயகர்கள் உண்டு. ரஜினி – அவர்களெல்லோர்க்கும் மேல்!

சமுதாய அக்கறை – பாடல்களில் மட்டும் போதுமென்று நினைத்து ஒரு சமுதாயத்தையே முற்றிலும் தவறானதாகவே எண்ணுமளவுக்கு காட்சிகள் உள்ளது பின்னடைவே

பாடம் – கத்தி எடுத்தவனுக்கு கத்தியிலே சாவு!

படம்ரசிகருக்கு – செம மாஸ், சூப்பர் ஹிட்!

பொது ஜனத்திற்கு – நல்லாருக்கு!

எனக்கு – பரவாயில்லை! பார்க்கலாம்!

என் குழந்தைகளுக்கு – ???????????? (தயவுசெய்து குழந்தைகள் கேட்டா

நல்ல படியா, நல்லதா சொல்ற மாதிரி

படமெடுங்க தயாரிப்பாளர்களே!)

 

 

கபாலி – திரை விமர்சனம்

Final Punch

‘அடிதடி’ மிகு தத்துவக் கவிதை!

கபாலி!!

மகிழ்ச்சி!!!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *