Story Highlights
- ரக்பி - ஓர் அறிமுகம்
Rugby Football – Introduction
ரக்பி புட்பால் – நம்மில் பலர் இந்த விளையாட்டைப்பற்றிக் கேள்விப்பட்டிருப்போம், சிலர் இந்த விளையாட்டைப்பற்றி நன்கு அறிந்திருப்போம். ஏன் சிலர் விளையாடவுங்கூட அறிந்திருப்போம். இப்போது நாம் இந்த விளையாட்டைப்பற்றி சில முக்கிய புள்ளி விபரங்களைக் காண்போம்!
நன்றி! – Thanks!: விக்கிபீடியா தளம் – Wikipedia.org
இப்பதிவின் மூலங்கள் விக்கிபீடியா தளம் மூலம் அறியப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டது. கருத்துக்கள், விமர்சனங்கள், திருத்தங்கள் வரவேற்கப்படுகின்றன!
நாடு மற்றும் தோற்றம்
இந்த விளையாட்டு தோன்றிய இடம் இங்கிலாந்து. ஆம் கிரிக்கெட் தோன்றிய அதே தேசமே! கீழே இங்கிலாந்து நாட்டின் அரசியல் வரைபடம் காண்க!
நமது பாரத நாட்டில் எவ்வாறு மாநிலங்கள், மாநிலங்களில் மாவட்டங்கள் உள்ளனவோ அதே போல் இங்கிலாந்தில் சிறு மாகாணங்களை ‘கவுன்டி’ என்று வழங்கி வருகின்றனர். அவ்வாறு ‘வார்விக்ஷயர் – Warwickshire’ என்ற கவுன்டியில் உள்ளது ‘Rugby – ரக்பி’ என்னும் ‘விற்பனை நகரம் – Market Town’. கீழ்காணும் படங்களில் இருந்து இங்கிலாந்து மற்றும் ரக்பி நகர் அமைவிடம் அறிவோம்!
அந்த நகரத்தில் உள்ள இங்கிலாந்தின் மிகப்பழமையான இருபாலர் பயிலும் பள்ளியான ‘ரக்பி பள்ளி – Rugby School’ தான் ‘ரக்பி – Rugby’ விளையாட்டின் பிறப்பிடம். ஆம்! 1845ம் வருடம் அந்தப் பள்ளியில் பயின்ற 3 மாணர்வகளால் ‘ரக்பி – Rugby’ விளையாட்டின் எழுத்து வடிவிலான விதிமுறைகள் தயாரிக்கப்பட்டது.
Rugby – ரக்பி
19ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பரவலாக பல விதங்களில் விளையாடப்பட்டது. 1871ம் ஆண்டு இங்கிலாந்தின் அனைத்து சங்கங்களும் ஒன்று கூடி “ரக்பி புட்பால் சங்கம் – Rugby Football Union (RFU)” என்ற சங்கத்தை நிறுவின. தொழில் முறை பிரச்சினைகளால் 1892ம் வருடம் சில சங்கங்கள் வெளியேறி “வடக்கு ரக்பி புட்பால் சங்கம் – Northern Rugby Football Union” , சுருக்கமாக “வடக்கு சங்கம் – Northern Union (NU)” என்ற அமைப்பை உருவாக்கின. பின்னாட்களில் இவ்விரண்டு சங்கங்களும் முறையே “ரக்பி சங்கம் – Rugby Union” மற்றும் “ரக்பி லீக் – Rugby League” என்று அழைக்கப்பட்டன. தொடக்க காலத்தில் இரண்டு சங்கங்களுக்கும் நிர்வாக ரீதியிலான வேறுபாடுகள் மட்டுமே இருந்தது. பிறகு “ரக்பி லீக் – Rugby League” ஆட்டங்களின் விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டன.
Rugby Union – ரக்பி யூனியன்
ரக்பி யூனியன் சுருக்கமாக ரக்பி, தொட்டு விளையாடும் அணி விளையாட்டு. இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டி. ஒவ்வொரு அணியிலும் 15 பேர் விளையாடுவர். ஒரு சதுரமான விளையாட்டு அரங்கத்தில் முட்டை வடிவிலான பந்தை கையில் வைத்துக் கொண்டு விளையாடும் விளையாட்டு.
Rugby League – ரக்பி லீக்
ரக்பி லீக் சுருக்கமாக லீக், தொட்டு விளையாடும் அணி விளையாட்டு. இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டி. ஒவ்வொரு அணியிலும் 13 பேர் விளையாடுவர். ஒரு சதுரமான விளையாட்டு அரங்கத்தில் முட்டை வடிவிலான பந்தை கையில் வைத்துக் கொண்டு விளையாடும் விளையாட்டு.
சரியாக 100 வருடங்கள் கழித்து ரக்பி யூனியன் ரக்பி லீக்குடன் இணைத்துக்கொண்டது.
இணைந்திருங்கள்! எம்மோடு!
விரைவில் ரக்பி விளையாட்டு, விதிகள் மற்றும் இதர விரிவான விபரங்களோடு உம்மை சந்திக்கிறோம்!!