Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

வாக்காளர்களா? வணிகர்களா?

வாக்காளர் கடமை
வாக்காளர் கடமை

Story Highlights

  • மாற்றம் ஒன்றே மாறாதது!

 

வாக்காளர்களா? வணிகர்களா?

 

மறுப்பு

  • இந்தப் படங்கள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை
  • இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது.
  • இவை எனது சமுதாய அக்கறையில் பதிவு செய்யப்பட்டது.
  • எனினும் இதில் எவ்விதமான விவாதத்திற்கும் போட்டிகளுக்கும் இடமில்லை.
  • இப்பதிவில் தங்களுக்கு உடன்பாடில்லை எனில் படிக்க / பார்க்க வேண்டாம்.
  • அப்படியே படித்து / பார்த்து விட்டாலோ இதில் விவாதித்து உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.

நன்றி!!!

Translation in English

Disclaimer

  • This post is not for hurting / insulting anybody
  • This post is the sole property of the Author
  • This post is being published in the view of Welfare of Society
  • We do not entertain any discussions / arguments regarding the post
  • Please Avoid reading if you disagree with the post
  • Even if you have read unknowingly kindly leave it without wasting your valuable time

Thanks

 

மக்களாட்சி

மக்களாட்சி என்பதின் மாண்பே மடிந்தது; கயமை மிகுந்த மக்களால்! தாங்கள் செய்யும் கயமையை புத்திசாலித்தனமாக என்றெண்ணும் மடைமையும் உண்டு.

பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க தேர்தல் என்பது வியாபாரமா? ஒட்டுமொத்தமாக, சமுதாயமே, உழைப்பின்றி வரும் செல்வ மோகத்தில் திரிந்து விட்டு கட்சி, அரசியல் தலைவர்களை பழிப்பதில் பயனென்ன?

மாற்றம்

மாற்றம் என்பது சாத்தியமா? அப்படியென்றால் என்ன மாற்றம்? இதற்கு ஒரு உதாரணம் நமது சமீப கால சம்பவம் ஒன்று. நாம் அனைவரும் நன்கறிந்ததே! ஆம்! கருப்பு பணத்தை ஒழிக்க 500 ரூபாய் மற்றும் 1௦௦௦ ரூபாய் தாள்களை மத்திய அரசாங்கம் விலக்கியது! இதனால் என்ன மாற்றம், எப்படி வரும்? அதைப்பற்றி விமர்சனங்களை தவிர்த்து ஒரு ஆறுதல் என்னவெனில் ஒவ்வொரு தனி நபரின் வருமானம், கையிருப்பு விபரங்கள் அரசாங்கத்திற்கு குறிப்பாக வருமான வரி துறையினருக்குத் தெரிய வரும். இதனால் கணக்கில் வராத பணமெல்லாம் கணக்கில் வந்து நாட்டிற்கு வருமானம் அதிகரிக்கும். ஆனால் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து வெளியே வந்து களவுப் பணிகளில் ஈடுபடுவோரும் அதற்கு துணை நிற்பவரும் யார்? மக்களே தான்!

ஆக, மாற்றம் அரசின் செயல்பாடுகளில் அதன் நோக்கத்தில் நாட்டின் நலன் முதன்மையானதாக மாறும்போது வரும். மக்களுக்கும் அவ்வாறே பொருந்தும்!

தேர்தல்

தேர்தலை, தேர்தல் ஆணையம் தன்னாட்சியாக நடத்துவது போல், தேர்தல் கூட்டங்களும் தேர்தல் ஆணையம் மூலமாகவே நடைபெற வேண்டும். அதற்கென ஊர்கள்தோறும், பொது இடங்களில், குறிப்பிட்ட சில இடங்களைத் தெரிவு செய்து மேடைகள் அமைத்து, நாள்தோறும் அனைத்து வாக்காளர்களும் ஒரே மேடையில் பங்கு கொண்டு வாக்காளர்களுக்கு தங்களது தேர்தல் உரைகளை வழங்க வேண்டும்.

தற்சமயம் DD பொதிகையில் கூட தினமும் தேர்தல் நாட்களில் இவ்வாறு ஒளிபரப்பப்படுகிறது

அவ்வாறான தேர்தல் அறிக்கைகள், முன்பே தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றதாகவும் இருக்க வேண்டும். சபை நாகரிகம், தனி நபர் மதிப்பு, சுய மரியாதை போன்ற மாண்புகள் கடுமையாக பின்பற்ற வேண்டும்.

நாட்டை, நாட்டின் அனைத்து  மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டியவர்கள்  அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல் இருந்தால் எப்படி?

தேர்தல் நாட்களில், ஒரு ஊரில் அதிக பட்சமாக 3 முறைகள் மட்டுமே பொதுக்கூட்டங்கள் நடைபெற வேண்டும். அப்பகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் – சுயேட்சைகள் உட்பட அனைவர்க்கும் சம வாய்ப்பு அளிக்கப்படவேண்டும்.

வேறு எந்த சூழ்நிலையிலும் யாரும் வேட்பாளராய் மக்களை சந்திக்கக் கூடாது; வாக்கு சேகரிக்க!

ஆளும் அரசை, அரசின் கொள்கைகளை, செயல்களை விமர்சிப்பவர்கள் தகுந்த ஆதாரங்கள் மற்றும் அவற்றிக்கான மாற்றுத் திட்டங்கள் குறித்த முன்மாதிரி திட்டங்களோடே மக்களை சந்திக்க வேண்டும்.

செவி வழி வதந்திகளை பெருமையாகப் பரப்பும் இழிநோய் நம் மக்களுக்கு வந்து விட்டது. சொல்வதெளிது! செய்வது?

புதிதாக திட்டங்கள், சலுகைகள் குறித்த அறிவிப்புகள் தகுந்த திட்டமிடல், நிதி ஆதாரம், செலவீனங்களின் புரிதல், செயல் திட்டங்கள், திட்டங்களின் கால வரைமுறை, பயன்பாட்டு முறை மற்றும் பயன்பாட்டுக் காலம் ஆகியவற்றை குறித்த தெளிவான விளக்கங்களோடே தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று அறிவிக்க வேண்டும்.

அவ்வாறான  எந்தத் திட்டத்திற்கும்,  அரசாங்கத் திட்டமென்றே பெயரிடப்பட வேண்டும்! யார் வீட்டுப்பணம்? யார்  பெயர் வைப்பது? எம் தாழ்மையான கருத்து: காந்தியடிகள் பெரியவரா? பாரதம் பெரியதா? என்று வந்தால், காந்தி வேறு பாரதம் வேறு இல்லை என்று சொல்வதைக் காட்டிலும் பாரதமே பெரிதென்பேன்! எந்த தனி மனிதரும் இந்த நாட்டின் முன் பெரிதல்ல! ஆனால் ஒரு நாட்டின் ஆதாரமே  ஒவ்வொரு தனி மனிதன்  தான். பணத்தில் காந்தியடிகள் படம் குறித்தே எமது இந்தக் கருத்து! காந்தியடிகள் மட்டுமல்ல  மற்ற அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களின் மீதும் சமமான மரியாதை – பக்தி உண்டு.

இவ்வாறான பொதுக்கூட்டங்களின் செலவை, பங்கெடுத்தாலும் பங்கெடுக்கா விட்டாலும், அனைத்து வேட்பாளர்களும் சமமாகப் பிரித்து ஆணையத்திற்கு செலுத்த வேண்டும். மேலும், அரசாங்க தொலைக்காட்சி, வானொலிகளில் மட்டுமே விளம்பரங்கள் இடம் பெற வேண்டும். அதுவும், அனைவரின் விளம்பரங்களும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே ஒலி-ஒளிபரப்பு செய்ய வேண்டும். தேர்தல் மனைகள் என்று எதுவும், எக்கட்சிக்கும், இருக்க கூடாது. கொடிகள், விளம்பரப்பதாகைகள், ஒலி-ஒளி விளம்பரங்கள் எங்கும் இருக்கக்கூடாது

தேர்தல்- தேர்வு போல் இருக்க வேண்டும்! ஆனால், இங்கே, எழுதுபவர்கள் பயமின்றி, குழப்பமின்றி தேர்ந்தெடுக்க, வேட்பாளர்கள் பய பக்தியோடு, தேசப்பணியாற்ற காத்திருக்க வேண்டும்!

இதுவும் நடக்கும், எப்போதென்றால்..? தற்போதைய பாரதப் பிரதமரின் அதிரடி அறிவிப்பு போல், இவரே, அல்லது வேறு எவரோயொருவர், நாட்டிற்காக தத்தமது அரசியல் எதிர்காலம் – பதவி, குறித்த பற்றின்றி, முன்னெடுத்தால் மட்டுமே சாத்தியம்!

மன்னிக்கவும்! வாக்களர்களா? வக்கற்றவர்களா? என்று தான் தலைப்பு வைக்க எண்ணினோம்!

 

ஆனால், பெரும்பான்மையான மக்கள், நாட்டின் நலன் கருதி, எதிர்கட்சிகளின் மாய பிம்பங்களைப் புறந்தள்ளி, கருப்பு பண முதலைகளின் நீலிக்கண்ணீரை ஒதுக்கியும், தேச விரோதிகளின் பாதகங்களை தனிமைப்படுத்தியும் மத்திய அரசிற்கு ஆதரவும், ஒத்துழைப்பும் நல்கி வருவது மிகப்பெரிய மாற்றமே!

விழித்தெழுந்த பாரதத்திற்கு இனி ஏறு முகமே!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *