

Story Highlights
- உங்களுக்கு வெட்கமே இல்லையா?
- - இது நிச்சயம் இத்திட்டத்தை தூற்றுபவர்க்கு!
பதிலில்லா கேள்விகள்!
கலக்கிட்டீங்க தலைவரே!
என்னம்மா இப்படி பண்றீங்களேமா?
பார்த்தீங்கன்னா தலைவரே!
நாங்க உலக விபரம் தெரிஞ்சவங்க!
எந்த விசயத்தையும் எந்த விதமான
அடிப்படை குறிப்புகள் இல்லாம
நாட்கணக்காக பேசத்தெரிஞ்சவங்க!
நேத்து ஒரே நாள் ஒரே ஒரு அரை நாள்
செய்தி படிக்கலை!
முக நூல் நோக்கலை!
தொலைக்காட்சி செய்தி துய்க்கலை!
காலைல, இவ்ளோ பெரிய அதிர்ச்சியா?
நேத்து இரவு 10 மணிக்கு ATMல
கூட்டத்த பார்த்தப்போ வராத
யோசனை, இன்னிக்கு வந்ததுன்னா
பாத்துக்கோங்க!
எங்களோட சாமர்த்தியத்தை!
ஆனா ஒண்ணு தலைவரே!
எங்க பிஞ்ச பர்சுல இருந்த பணம்
எனக்கு சந்தோசத்தை தந்ததுன்னா
அது இன்னிக்கு தான் தலைவரே!
பின்ன! இருக்காதா? இந்தியனாச்சே!
அடுத்தவனுக்கு ஒரு கஷ்டம்னா
நமக்கு தான் குஷியாச்சே!
பணம் இருக்கறவனுக்குதானே பிரச்சினை!
கறுப்புப்பணம்-ங்கறீங்க வெள்ளையாகு-ங்கறீங்க
போர்ங்கறீங்க! பெட்ரோல் விலைய எப்ப சரியாக்குவீங்க?
எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை ஈடுகட்ட விலை
ஏற்றிக்கலாங்கறீங்க! ஆனா எந்த நிறுவனமும்
நஷ்டமானதாக இது நாள் வரையிலும்
வருமான வரிக் கணக்கு காமிக்கலையே?
அது சரி! நம்ம பிஞ்ச பர்சுல 10 ரூபாவ வெச்சுக்கிட்டு
நமக்கெதுக்கு இந்த வாய் ஜம்பம்!
மகிழ்ச்சி!!!
கள்ளர்களின் mind voice: என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேமா?