Story Highlights
- சிங்கம் களம் இறங்கிருச்சு!
பதிலில்லா கேள்விகள்!
தயாராயுடுங்க தலைவரே!
என்னம்மா இப்படி பண்றீங்களேமா?
இன்னும் இருக்கிறது
வெறும் 15 நாட்களே!
தயாராயுடுங்க தலைவரே!
எங்ககிட்ட பணமுமில்லை
அதனால் கவலையுமில்லை
இருபது நாள் இனிமையாகவே
இருந்தது!
கூடவே கொஞ்சம்
அரசியல் காமெடி!
அவ்வப்போது ரைடுங்கிற
அதிரடி காமெடி!
பணம் வெச்சிருந்தவனெல்லாம்
பிச்சைக்காரர்களாய் ATMகளில்
வங்கிகளில்!
என்ன ஒரு கொடூரமான
மனநிலை தெரியுமா அது!
பணம் இல்லாத கவலையெல்லாம்
பணம் சேர்க்க முடியாத
கையாலாகாத தனமெல்லாம்
ஒன்று சேர்ந்த கயமைத்தனம்
நல்லவர் கெட்டவர் என்ற
பகுத்தறிவின்றி
வங்கிகளில் நின்றவரையெல்லாம்
வஞ்சகராய்ப் பழித்த பண்பு?
கறுப்புப்பணம் வெளியாகும்
என்றிருந்தவரெல்லாம்
தம்கருப்பு முகம் கண்ட திங்கள்?
தயாராயுடுங்க தலைவரே!
தினம் ஒரு அறிவிப்பு
தினம் ஒரு விளம்பரம்
ஒரு திகில் படம் போல்
உங்கள் கவர்ச்சிகரமான
காணொளி அல்லது செய்தி!
திகட்டி விட்டது!
சற்றும் இடைவெளி விடாமல்
வருமான வரிச் சோதனை!
பணம் எடுக்கக் கட்டுப்பாடு
என்று களைகட்டியது தேசம்
இந்தியருக்கு இது பொதுப் பிரச்சினையென்றால்
இங்கே தமிழருக்கு இன்னொரு புது தனிப் பிரச்சினை!
அண்ணன் எப்ப போவான்
திண்ணை எப்ப காலியாகும்
கதைபோல், தமிழருக்கு
யார், யாரை ஏமாத்தறாங்க
எப்படி என்ன செய்தாங்கங்கிற
மிகப்பெரும் ஜீவாதாரப்பணி வேறு!
அதுல நீங்களும் உள்ளோங்கிற
சந்தேகமும் அவங்களுக்கு!
தயாராயுடுங்க தலைவரே!
சம்பளத்தேதி வந்தபோதே
சத்தியம் தெரிந்தது!
ஏன்னா? இப்பதானே
நமக்கு வந்திருக்கு!
கசப்பு மருந்து!
ஒரு நாள் பணம் இல்லைன்னா
பரவாயில்லை!
ஒரு வாரம் பணம் இல்லைன்னா
பரவாயில்லை!
ஒன்றரை மாதம் பணம் இல்லன்னா
ஏதோ அடிப்படை
தவறுன்னு அர்த்தம்!
புதுப்பணம் கூட கோடிக்கணக்கில்
ரைடுல சிக்குதுன்னா?
சிக்காத பணம் எவ்வளவு இருக்கும்?
அய்யா! நாங்க அரசியல் பேச வரலை!
ஆனா! உங்க ஆட்டத்துக்கு
எங்கள ஏன் வெட்டறீங்க?
அச்சச்சோ!
உடனே தேச விரோதின்னு
பட்டம் கொடுத்து,
இராணுவ வீரர்கள்,
மக்களைப் பார்த்து
எங்களுக்குந்தான் இவுங்க
எதிரியில்லை நாங்க ஏன் எதிர்க்கணும்னு
மீமீ போட்றுவாங்களே?
அட உங்க தேச பக்திக்கு ஒரு
அளவேயில்லையா?
தயாராயுடுங்க தலைவரே!
எங்களுக்கும் டவுட்டுதான்!
இந்த வங்கி ஊழியர்கள் எல்லாம்
அவங்க சங்கம் மூலமா
இப்படி பணம் பற்றி ஒரு
பரபரப்பு உண்டாக்குறாங்களோன்னு
ஏன்னா?
நம்ம கணக்குல இருக்கிற
பணத்தை எடுக்கிறதுக்கு
என்னமோ இவங்க பணத்தை
எடுத்துத்தர்ற மாதிரி
எகிருறாங்க!
பணிச்சுமை! பொதுமக்கள்
பொறுப்பின்மை தாண்டியொரு
பதற்றம் பதறச் செய்கிறதே!
எதிர்க்கட்சிகளைப் பற்றி சொல்லவே
தேவையில்லை!
அவர்கள் முதல்லயே எதிரிக்கட்சிகள்
போல் தான் நடப்பார்கள் – வெறும்
வாயை மெல்வார்கள்!
அவலைக் கொடுத்தால் கேட்கவா
வேண்டும்?
கட்சி, காட்சி, மின், பொன்
போன்ற அனைத்து விதங்களிலும்
கலகம் செய்ய, களங்கம் செய்ய
காரிய சித்தியாய் உள்ளனர்.
மறுபடியும் முதல்ல சொன்ன விசயத்துக்கே வர்றேன்!
தயாராயுடுங்க தலைவரே!
வெறும் 15 நாட்கள் தான் உள்ளது! எங்க கிட்ட மடியில கணம் இல்லை! அதைவிட அடுத்தவன்கிட்ட இருக்கறதைப் பார்த்து பொறாமையும் இல்லை! ஆனா எங்களுக்கு நடக்கிற இதுவும், தொடர்ந்தா நல்லதா தெரியலை! மக்களை அழித்து நாட்டைக் காப்பவன் அரசனல்ல, எதிரி! நன்மக்களை காத்து தீமைகளை களைபவரே மன்னன்! மக்களாட்சியில் இருக்கிறோம்! நீர் மன்னரல்ல! எம் தலைவருமல்ல! எம் பிரதம (முதன்மை) சேவகர்!