Story Highlights
- திருத்திக்கொள்ளுங்கள்! இல்லாவிடில்
- வரலாற்றில் பழிக்கப்படுவீர்கள்!
மறுப்பு
- இந்தப் படங்கள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை
- இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது.
- இவை எனது சமுதாய அக்கறையில் பதிவு செய்யப்பட்டது.
- எனினும் இதில் எவ்விதமான விவாதத்திற்கும் போட்டிகளுக்கும் இடமில்லை.
- இப்பதிவில் தங்களுக்கு உடன்பாடில்லை எனில் படிக்க / பார்க்க வேண்டாம்.
- அப்படியே படித்து / பார்த்து விட்டாலோ இதில் விவாதித்து உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.
நன்றி!!!
Translation in English
Disclaimer
- This post is not for hurting / insulting anybody
- This post is the sole property of the Author
- This post is being published in the view of Welfare of Society
- We do not entertain any discussions / arguments regarding the post
- Please Avoid reading if you disagree with the post
- Even if you have read unknowingly kindly leave it without wasting your valuable time
Thanks
மக்களாட்சியின் மாண்பு!
மக்கள் தத்தம் சொந்த வேலைகளில் கவனம் செலுத்தக் கூடாது! நாம் என்ன சொல்கிறோமோ, அதையே அவர்களும் நினைத்து உழல வேண்டும் என்பது தான் இன்றைய தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களின் எண்ணமோ என்னவோ?
மாணவர்கள் போராடினார்கள்! மக்கள் ஆதரவு தந்து அவர்களை வெற்றியாளர்களாக்கினர்! பிறகு இதுவே அனைத்து அரசியல்வாதிகளின் பாணியாகிவிட்டது! கப்பல் மோதிடுச்சாம்! மாணவர்களை அழைக்கின்றனர்! அடடா! அப்ப என்ன ……(தணிக்கை செய்யப்பட்டது) நீங்க ஆட்சி செய்யறீங்க?
அப்புறம்! ஒரு நடிகர் பேர்ல உலா வர்ற செய்தி அபத்தத்திலும் அபத்தம்: திருட்டு விசிடி ஒழிக்கப் போராட மாணவர்கள் முன் வரணுமாம்!
அரசியல் நாகரீகம் மட்டுமல்ல அடிப்படை நாகரீகம் கூட இல்லாத ஒரு மனித வடிவில் உலவும் முதுகெலும்பில்லா விலங்கினமொன்று ஒரு தலைமுறையையே தவறான வார்த்தைப் பிரயோகங்களால் இழிக்கின்ற நிலையைக் கண்டும் காணாமல் அதட்டவும், அடக்கவும் கையாலாகாத மத்திய தலைமை; அப்பாவிகளை தேச துரோகிகளாகக் கூறி விளாசிய காவல்துறை மற்றும் ஆணையிட்ட அரசாங்கம், அதைப்பற்றிக் கண்டும் காணாமல் இருக்கும் முற்போக்கு சிந்தனைச் செம்மல்கள் நிறைந்த தேசத்தில் யார் வேண்டுமானால் முதல்வரும் ஆகலாம்! பிரதமரும் ஆகலாம்!
எனவே நண்பர்களே!
“என்னம்மா ஆயாம்மா! நீயெல்லாம் CMஆ” என்ற வெற்று கோஷங்களைத் தவிர்த்து விட்டு, முதலில் ஓட்டுப் போடுங்கள்! நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுங்கள்! இல்லையா நல்ல தலைவராய் நீங்களே மாற முயற்சி செய்யுங்கள்! ஆனால், ஒரு நல்ல தலைவன் வானத்திலிருந்து குதிப்பதில்லை! உங்களுக்குள் இருந்து தான் வரமுடியும்! எனில் நாம் நல்ல குடிமகனாக இருக்க வேண்டும்!
மக்களாட்சி
அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நிகழும் எந்த ஒரு கட்சியின் நிகழ்வுகளிலும் நாம் எந்த விதத்திலும் தலையிடாமல் கண்ணியம் காப்போம்! இவங்க எல்லாம் முதலமைச்சர் ஆனா தமிழ்நாடு அப்படி ஆகிவிடும் இப்படி ஆகிவிடும்னு ஒரு நடிகர் டுவீட் விடறார்! அவர் தமிழ்நாட்ட விட்டே போக வேண்டியிருக்கும்னு சொன்ன உத்தமர்! அப்படியெல்லாம் ஆகாதுங்க நண்பரே! உங்கள் தமிழ் சினிமா சொல்லிக்கொடுக்காத தீமைகளா, செய்யாத கலாச்சார சீரழிவா? அப்படி இருந்தும் எம் குல தெய்வங்கள் இன்று ஒரு மாபெரும் சாதனை செய்ய வில்லையா? அதனால இனி மேல் யார் என்ன சொன்னாலும் எம் குழந்தைகள் ஏமாற மாட்டார்கள்! நீங்க நடிக்கறத படத்தோடு நிறுத்திக்கொள்ளுங்க! உங்கள மாதிரி நண்பர்களை நம்பி இன்னொரு முறை எங்கள் குல தெய்வங்கள் ஏமாற மாட்டார்கள்!
மாண்பு
ஒரு வெற்றி பெற்ற கட்சி, அதன் தலைமையின் மறைவின் போது, குழப்பங்கள் கோஷ்டி மோதல்கள் இவையெல்லாம் வரக்கூடியது தான்! அதற்காகவெல்லாம் எம்மாணவச்செல்வங்களை அழைக்காதீர்! அவர்கள் பயணிக்க வேண்டிய தூரம் இன்னமும் நிறைய உள்ளது. மாற்றம் என்ற கோஷத்தை துரோகிகள் உச்சரித்தல் மிகவும் அபாயகரமான தருணம். இப்போது ஆளும் மாநில அரசின் விரோதிகளும், துரோகிகளும் ஒன்று சேர்ந்து குழப்பம் செய்கின்றனர்! மக்களை குழப்ப அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளுகின்றனர். எங்களுக்கு இன்னமும் மறக்கவில்லை, எந்த ஆட்சி தமிழ் நாட்டை சூறையாடியது! எந்த ஆட்சியில் அராஜகம் அளவில்லாமல் கட்டவிழ்த்து விடப்பட்டது என்று!
அப்புறம் இந்த விசயத்தையும் சொல்லியே தீரணும்! நாங்க NOTA க்கு ஓட்டு போட்ட 5 சதவீதம் பேர்ல ஒருத்தர்! ஆனாலும் மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்டவர்! அதனால, சும்மா, ‘அதுக்கு போராடு, இதுக்கு போராடு’ ன்னு குழந்தைகளையே கூப்பிட்டுட்டு இருக்காம, இனிமேலாவது இலவச பிச்சைகளைப் பொறுக்கிக் கொண்டு (ஓ! இதனால தான் அவரு அப்படிச்சொன்னாரோ?) தீயவர்களுக்கு ஒட்டுப்போடாம யோசிச்சு வாக்களியுங்க!
இல்லை!
நாங்க ஒவ்வொண்ணுக்கும் இப்படித்தான் அவங்களை இழுப்போம்னா!,
இளைஞர்கள் கட்சி ஆரம்பிச்சு அரசியலுக்கு
வருவதிலும்
தப்பே இல்லை!