Story Highlights
- விழித்தெழு தோழா!
122 திருடர்களும் 11 துரோகிகளும்!
மதியிழந்து விதிவழியே
வினை செய்தோம்!
கதியிழந்து வினைவழியே
மதி செய்தோம்!
இரட்டைத்தவறு!
பொன், பொருள் பெற்று
பொது உரிமை புதைத்து
பொன் பொருள் திருடும்
பொதுவரசை அமைத்தோம்!
அடிப்படைத்தவறு!
உடல் உழைப்பின் உறுதியும்
ஊர் அடித்த உலையும்
ஒன்றென்றுமாகா!
நீர் தொலைத்தோம்!
நிலம் குலைத்தோம்!
காற்றைக் கெடுத்தோம்!
வான்வழியே மான்பழித்தோம்!
நெருப்பையும் தோற்கடித்தோம்!
உலகின் முன்னோடி
இனமொன்று
வாழ்வின் மூன்றாம் தொகுப்பைப்
பிடித்து
உலகின் கீழ்நிலை
அடைந்தோம்!
முத்தமிழ் மறந்தோம்! அதில் முதல் இழந்தோம்!
இளைஞர்கள், இளைஞிகள்
எளியோர்கள், முதியோர்கள்
ஏவி விடப்பட்ட சூதறிவோம்!
தலைவர்கள், தலைவிகள்
முதல்வர்கள், தாதாக்கள் (Sorry தாத்தாக்கள்)
ஏவல் செய்யும் சூழலறிவோம்!
திரைப்படங்கள், நாடகங்கள்
திகில் தொடர்கள்
திகைத்தன!
கதாசிரியர்கள், கதாநாயகர்கள்
இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்
குழம்பினர்!
தூங்குவதுபோல் நடிக்கும் நடிகர்கள்
நாம் – மக்கள்!!
விழிக்க வேண்டும்!
உழைக்க வேண்டும்!
எப்படியாவது
பிழைக்க வேண்டுமெனில்
மானம் இழக்க வேண்டும்-
நமது
122 திருடர்களும்
11 துரோகிகளைப்போல்!