Story Highlights
- விழித்திருப்போம்! வென்றிடுவோம்!
Natural Gas AKA Hydro Carbon Gas
ஹைட்ரோ கார்பன் திட்டம் – தமிழ்நாடு மற்றும் புதுவை!
தமிழக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளான ஒரு செய்தி! ஹைட்ரோ கார்பன் திட்டம் நல்லதா? கெட்டதா? தொடரும் போராட்டங்கள் – அரசியல் நோக்கிலா? சமுதாய அக்கறையிலா? போன்ற நமது கேள்விகளின் பதிலே இப்பதிவு!
இப்பதிவுக்கென்று எந்த மறுப்பும் பொறுப்பு துறப்பும் கிடையாது! மேலும், விக்கிபீடியா மற்றும் கூகிள் வலைதளங்களுக்கு நன்றி! இப்பதிவு, இவற்றின் துணையோடே முழுமை பெற்றது!
Hydro Carbon
இந்தத் திட்டத்தைப்பற்றி பேச, விவாதிக்க சில அடிப்படை விஷயங்கள் நமக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம்! Hydro Carbon என்பது ஹைட்ரஜன் மற்றும் கார்பன் கலந்த கூட்டு கலவை.
இந்த ஹைட்ரோகார்பன் பெரும்பான்மையாக பூமியில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெயிலேயே உள்ளது. கார்பன் மூலக்கூறின் அளவைப் பொருத்து இந்த ஹைட்ரோகார்பன் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது!
Number of Carbon Atoms Alkane
1 Methane
2 Ethane
3 Propane
4 Butane
5 Pentane
6 Hexane
7 Heptane
8 Octane
9 Nonane
10 Decane
இந்த ஹைட்ரோகார்பன் தான் இயற்கை வாயுவின் (Natural Gas) மூலம். இது ஒரு படிம எரிபொருள் (Fossil Fuel). இதை வெப்பமாக்க, சமையல் மற்றும் வாகன எரிபொருளாக பயன்படுத்தலாம். பூமியின் ஆழத்தில் பாறைகளுக்கடியில் படிமங்களாக, நிலக்கரி தளங்களாக, பெட்ரோலிய பொருட்களாக, இயற்கை வாயுவாக ஹைட்ரோகார்பன் நிறைந்து கிடக்கின்றது.
Natural Gas
இயற்கை வாயு பூமியின் ஆழத்தில் படிவப்பாறைகளிடையே அமைந்திருக்கின்றது.
Natural Gas AKA Hydro Carbon Gas – இயற்கை வாயு மற்றும் அதன் விபரங்கள்
- இயற்கை வாயு (Natural Gas)
எண்ணெய் எடுக்கும்போது கிடைக்கும் உபரிப் பொருளே இயற்கை வாயு.
- படிவ வாயு (Shale Gas)
படிவப்பாறைகளிலிருந்து பெறப்படும் இயற்கை வாயு – Shale Gas
- கோல் வாயு (Coal or Town Gas)
நிலக்கரியிலிருந்து உற்பத்தியாகும் வாயு – Coal Gas
ஹைட்ரோகார்பன் வாயுவின் பயன்கள்
- வாகன எரிபொருள்
- சமையல் எரிபொருள்
- தொழிற்சாலைகளில் வெப்பமாக்கல் மற்றும்
- மின்சார உற்பத்தி
ஹைட்ரோகார்பன் வாயுவின் குணம்
ஹைட்ரோகார்பன் வாயுவில் பென்சீன் (Benzene) மற்றும் பெட்ரோலியம் (Petroleum) உட்கொள்ளும் போதோ, முகரப்படும்போதோ அது நரம்பு மண்டலத்தை, மூளையை, சுவாச அமைப்பை, சிறுநீரகத்தைக் கடுமையாக பாதிக்கும்.
ஹைட்ரோகார்பன் – எதிர் விளைவுகள்
- கழித்தல் வினை
- கூட்டல் வினை
- எரித்தல் வினை
இம்மூன்றில் நமக்கு பெரும்பாலும் ‘எரித்தல்’ வினையே பயன்படுகின்றது. மின்சாரம், சமையல் மற்றும் வீட்டு ஹீட்டராக பயன் படுகின்றது.
தோண்டியெடுக்கப்படும் ஹைட்ரோகார்பன் நீர்ம நிலையிலிருந்தால் அதை petroleum அல்லது கச்சா எண்ணெய் என்கிறோம். வாயு நிலையிலிருந்தால் இயற்கை வாயு என்கிறோம்.
ஹைட்ரோகார்பன் – பாதுகாப்பு
பெரும்பான்மையான ஹைட்ரோகார்பன்கள் எளிதில் தீப்பற்றக்கூடியன. எனவே இவற்றை கையாளும்போது கூடுதல் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்த வேண்டும். பென்சீன் (Benzene) மற்றும் பல வாசனை பொருட்கள் கதிர்வீச்சுத்திறன் கொண்டவையாகும். நெருக்கமான பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எரிக்கப்பட்டால் நச்சு வாயு வெளிப்படும் அபாயங்கள் உண்டு. மேலும் ஹைட்ரோகார்பன்கள் ப்ளோரின் கலவைகளிலிருந்து விலக்கியே வைக்கப்பட வேண்டும். இல்லையெனில் அது வேதியியல் வினை புரிந்து ‘Hydrofluoric acid’ உருவாகும். Hydrofluoric acid அல்லது Hydrogen Fluoride gas ஒரு கடுமையான விசவாயு. அது கண்ணின் வெண்படலம் மற்றும் நுரையீரலுக்கு உடனடியான பாதிப்புண்டாக்கும்.
ஹைட்ரோகார்பன் – சுற்றுப்புறச் சூழல் விளைவுகள்
- இயற்கை வாயு மற்ற அனைத்து வகையான எரிபொருள்களால் ஏற்படும் உலக வெப்பமயமாதல் விளைவுகளை விட குறைவாகவே விளைவுகளை ஏற்படுத்துகிறது
- இயற்கை வாயு வெளியிடும் கரி அமில வாயு மற்ற எரிபொருள்களை விட குறைவு
இந்த பதிவின் நோக்கம் ஹைட்ரோகார்பன் வாயு என்றால் என்ன? அதனால் ஏற்படும் பயன்கள், எதிர் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? என்பதை அறிவதேயாகும்.
இந்தியாவில் செயல்படுத்தப்படும் ‘இயற்கை வாயு’ திட்டங்கள் என்னென்ன? அதன் சாதகங்கள், பாதகங்கள் என்ன? அரசியல் தாண்டி அனுமானிப்போம்; உண்மைதனை! வாழ்க பாரதம்!
Thanx vel… I was searching for Tamil version of it.. now I got…
Actually each n every fuel can destroy the environment of the world, but the safety measures should be taken as first priority… Thus we are using patrol, petroleum gas as LPG… Then hydrogen gas, which is more explosive… We prepare atom bomb, n we do know it will destroy our own place, but we are accepting to manufacture it… So i support hydrocarbon processing with well safety measures… Thanx again…