
Story Highlights
- உங்களுக்கு வெட்கமே இல்லையா?
Moyar and Cauvery misconception – என்று தீரும் அறிவின் தாகம்?
நன்றி: கூகுள் மேப்ஸ், விக்கிபீடியா, மேப்ஸ் ஆப் இந்தியா Thanks to: Google Maps, Wikipedia.org and MapsofIndia.com
Moyar
மோயார் என்ற சிற்றூரில் உருவாகி 20 கிலோமீட்டர் பயணித்து பவானி ஆற்றில் கலக்கும் ஒரு துணை நதியே மோயாறு. ஆனால் சமீப காலமாக வலைதளங்களில், என்னாச்சு செயலியின் கூட்டங்களில் உலா வரும் ஒரு தவறான தகவல், நமது பாரத தேசத்தின் இறையாண்மைக்கு குந்தகம் செய்வதாயும், இரு மாநிலங்களுக்கிடையே நிரந்தரமாக பகையையும், அதிருப்தியையும் ஏற்படுத்துவதாயும் உள்ளன.
கீழ்காணும் படங்களை கவனிக்க!

படம் 1ல் மோயாறு உருவாகும் இடம் காணலாம்!

படம் 2ல் மோயாறு கர்நாடக – தமிழக எல்லைகளை ஒட்டி பயணிப்பதைக் காணலாம். சிறிது தொலைவு கர்நாடகப் பகுதியில் பயணிப்பதைக் காணலாம்!

படம் 3ல் மோயாறு முழுமையாக தமிழக வனப்பகுதியில் நுழைந்து விட்டதைக் காணலாம்.

படம் 4ல் மோயாறு சத்தியமங்கலம் வனப்பகுதியைக் கடப்பதைக் காணலாம்

படம் 5ல் மோயாறு பவானி சாகர் நீர்த்தேக்கத்தை அடைந்ததைக் காணலாம்
இவ்வாறு மோயார் என்னும் சிற்றூரில் தோன்றி சிறிது தொலைவு கர்நாடக வனப்பகுதிகளில் ஓடி (அதுவும் மலைக்குகைகளில், கால்வாய்களில்) மறுபடியும் தமிழகத்தை அடைந்து விடுகிறது. பவானி சாகர் நீர்த்தேக்கத்தில் அது பவானி ஆற்றோடு சங்கமித்துக்கொள்கிறது.
Moyar and Cauvery misconception – என்று தீரும் அறிவின் தாகம்?
கீழ்காணும் நீலகிரி மாவட்ட வரைபடம் நமக்கு இன்னும் சிறிது தெளிவைக் கொடுக்கும்

இப்படத்தில் மோயாறு உருவாகி, கர்நாடக வனப்பகுதிகளில் நுழைந்து தமிழகம் திரும்புவதையும் அது வேறு எங்கும் பிரியாததையும் காணலாம்.
மேலும், இந்தப் புரளிகளின் நோக்கம் என்னவென்று தெரியாவிடினும், அவற்றின் அடிப்படை தவறை உணர்வோம். காவிரி! காவிரி! என்று ஊடகங்களும், அரசியல்வாதிகளும் மக்களை, குறிப்பாக, விவசாயிகளை உசுப்பேற்றி வரும் பொய்களையும் புரிந்து கொள்ள முயல்வோம்!
காவிரி (River Cauvery)

கர்நாடகத்தின் குடகுமலையில் தோன்றி, தமிழகத்தில் தவழ்ந்து வங்கக்கடலில் இணையும் நதி, காவிரி! செல்லுமிடமெல்லாம் செழிப்பு செய்யும் தாய், காவிரி!

காவிரியும் மோயாரும்
காவிரியும் மோயாரும் என்ற ஒப்பீடே தவறு! ஏனென்றால் காவிரியாறு சுமார் 800 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கிறது. அதில் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உருவாகிய பவானி ஆறு (கிட்டத்தட்ட 215 கிலோமீட்டர் பயணிக்கும்) பவானியில் காவிரியாற்றுடன் கலக்கிறது. அந்த பவானி ஆற்றின் ஒரு துணை நதியே மோயாறு. அதன் அதிகபட்ச தொலைவே 20 கிலோமீட்டர் தான்.
கீழ்காணும் படங்களிலிருந்து இன்னும் தெளிவு பெறலாம்

மோயற்றின் பாயும் பகுதியும், காவிரியின் பகுதியும் வேறு வேறானவை. மேலும் பவானிசாகர் நீர்தேக்கத்திலிருந்து வெளிவருவது பவானி என்று பெயர் பெறுகிறது. அதுவும் காவிரியுடன் பவானியில் தான் கலக்கிறது.

மேலும், இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம், மோயாறு மலைப்பகுதியில் தோன்றி, மலைக்குகைகளின் வழியே கர்நாடக – தமிழக வனப்பகுதிகளில் பயணிக்கிறது.


இதில் முக்கியமாக நாம் சொல்ல வரும் விசயம் இதுதான்! மோயாறும் காவிரியும் வேறு வேறு பாதைகளில் பயணிக்கின்றன. அதனால் இதில் இருக்கும் அரசியல் தந்திரம், அறியாமை – ஆர்வக்கோளாறு இவற்றை உணர்ந்து, நாம் நமது இனமானப்பற்றை வெளிபடுத்துவதாக எண்ணி ஏமாற வேண்டாம்!
இவற்றையெல்லாம் விடுத்து நமது வார்டு கவுன்சிலர்களைக் கேள்வி கேளுங்கள்! சாலையில் வீணாக விரையமாகும் குடிநீரைப்பற்றி! நமது அரசியல்வாதிகளைக் கேளுங்கள். நீர்வளம் காக்க, பெருக்க என்ன திட்டம் நிறைவேற்றினீர்கள் என்று!
அடடே! நாம் எப்படி கேக்க முடியும்? நம்மில் பலர் 1000, 2000க்கு விலை போனவர்கள் தானே? அது மட்டுமா? கோடி சம்பாரித்தாலும் ஓசி டிவி வேண்டும், மிக்சி வேண்டும், காற்றாடி வேண்டும்.
AFTER ALL இலவசங்களுக்கு விலைபோன ஏமாளிகள் தானே?
கடைசியாக ஒன்று!
இல்லை! நாங்க இப்படித்தான்! எங்கள் தமிழ் இனத்தை நாங்க தான் தூக்கி நிறுத்தப்போறோம்! அதுவும் இப்படித்தான் தூக்கி நிறுத்தப்போறோம்! அப்படின்னு சொன்னீங்கன்னா, இந்தாங்க! இதையும் சேர்த்து சுமங்க! மோயாற்றின் ஒரு பகுதி Glenmorgam அணை நீர்த்தேக்கத்தைச் சேர்ந்து பைகாரா நதியில் இணைந்து கேரளாவிற்கு செல்கிறது. அங்கே அணையெல்லாம் கட்ட வேண்டாம். கட்டுனதே இருக்கு! தண்ணிய நிறுத்தி வெட்XXX சாXXX!

இலவச பிச்சைகளுக்கு நாம் கையேந்தும் வரை நமது அரசியல் தலைவர்கள் நாட்டுக்கு – தமிழ் நாட்டுக்கு நல்லது செய்யப்போவதில்லை! வாழ்க பாரதம்!