Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST (NEET) and Politics

NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST

Story Highlights

  • இது ஒரு விழிப்புணர்வு பதிவு

NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST (NEET) and Politics

 

மறுப்பு

  • இந்தப் படங்கள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை
  • இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது.
  • இவை எனது சமுதாய அக்கறையில் பதிவு செய்யப்பட்டது.
  • எனினும் இதில் எவ்விதமான விவாதத்திற்கும் போட்டிகளுக்கும் இடமில்லை.
  • இப்பதிவில் தங்களுக்கு உடன்பாடில்லை எனில் படிக்க / பார்க்க வேண்டாம்.
  • அப்படியே படித்து / பார்த்து விட்டாலோ இதில் விவாதித்து உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.

நன்றி!!!

Translation in English

Disclaimer

  • This post is not for hurting / insulting anybody
  • This post is the sole property of the Author
  • This post is being published in the view of Welfare of Society
  • We do not entertain any discussions / arguments regarding the post
  • Please Avoid reading if you disagree with the post
  • Even if you have read unknowingly kindly leave it without wasting your valuable time

Thanks

இப்பதிவின் நோக்கம் தற்சமயம் பொதுவாழ்வில், ஊடகங்களால், அரசியல்வாதிகள் மூலம் ஏற்படுத்தப்பட்டுவரும் ஒரு இடர் பற்றியது. ஆம்! நீட் தேர்வின் காரணமாய் ஏழைகளின் வாழ்வு பாழாகிவிடும் என்று பரப்பப்படும் செய்திகளின் உண்மைத்தன்மை அறிய உதவும் பதிவு!

What is meant by NEET?

ஊடகங்களில் பயத்தை உண்டுபண்ணும் இந்த ‘நீட்’ தேர்வென்றால் என்ன?

  • National Eligibility cum Entrance Test அஃதாவது “தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு” என்பதன் சுருக்கமே “NEET – நீட்” என்றழைக்கப்படுகின்றது.

நன்றி / Thanks: CBSE இணையதளம் [NEET சம்பந்தமான அனைத்து தகவல்களும் இத்தளத்தின் விபரங்களிலிருந்தே தொகுக்கப்பட்டுள்ளன]

இந்திய அரசாங்கத்தின் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவ கவுன்சில் / இந்திய டென்டல் கவுன்சிலின் அனுமதியுடன், மத்திய கல்வி வாரியம் (CBSE), MBBS மற்றும் BDS படிப்புக்களில் சேர நடத்தும் தேர்வே இந்த நீட் தேர்வு. கடந்த 2016ம் ஆண்டு முதல் இதற்கான சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தேர்விலிருந்து விலக்கும் சில கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விலக்கின் சாத்தியம் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

NEET Syllabus – நீட் பாடத்திட்டங்கள்

Higher Secondary Stage (மேல்நிலை) கல்வியில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும். அவற்றின் முழுமையான விபரங்கள் CBSE இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

NEET – More Details நீட் – மேலும் விபரங்கள்

இந்தத் தேர்வில் எவ்வாறு கலந்துகொள்வது. அதன் முறை என்ன? தேர்வின் நாள், நேரம், முறை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி இவையாவும் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளன.

சரி! இப்ப விசயத்துக்கு வருவோம்! இப்ப கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் அரசியல்வாதிகள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மற்றும் அதன் விளைவாய் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகள் உண்மையான காரணத்தை ஒழித்து விட்டு அவரவரின் சுய நலத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதே வருத்தத்திற்குரியது.

Political Comments

இதில் மிக விபரமாக, குறிப்பாக யாரையும் கூற விரும்பாவிடினும், அவர்களின் சில கூற்றுகளைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

  • கையாலாகாத தமிழக அரசாங்கமே தார்மீகப் பொறுப்பு
  • நீட் தேர்வை எதிர்த்திருந்தால் இவ்வாறு நிகழ்ந்திருக்காது
  • கீழ்ஜாதிப்பெண் என்பதால் இவ்வாறாயிற்று
  • இது தற்கொலையல்ல; படுகொலை
  • இது சமுதாய மேல்தட்டு மக்களின் அடக்குமுறைக்கு எதிரான ஆரம்பம்
  • கல்வியை மத்திய அரசாங்கத்தின் உரிமைக்குள் கொண்டு சென்றதால் தான் இது நிகழ்ந்தது

இன்னும் பலப்பல! இவையெல்லாவற்றிலும் பிணம் திண்ணும் கழுகுகளின் பார்வையும், கிடைத்த இறையில் கொழுக்க முயற்சிக்கும் காரிய சித்தியும் மட்டுமே தெரிகின்றன. அதற்காக ஆளும் அரசாங்கங்களையும் உத்தமர்கள் என்று கூற மாட்டோம்!

 

உண்மைக்கல்வி

இறுதியாக, கீழ்காணும் உண்மையை உணராதவரை, நாம் நல்லவரல்ல! வெறும் நடிகர்களே!

கல்வித்தேர்வில் தோல்வி என்பது ஒரு தனி மனிதனின் வாழ்வின் முடிவல்ல என்பதைப் போதிக்காத எந்தக்கல்வித்திட்டமும், அதை உணர்த்தாத எந்த சமுதாயமும் பண்பட்டதல்ல; அது மானுடத்தின் இழுக்கு!

 

வாழ்க்கையில் எண்களை விட, வாழ்ந்து பார்க்க எண்ணிலடங்கா விஷயங்கள் உண்டு! இனிமேலாவது வாழப்பழக்கிக்கொடுங்கள்!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *