ஹேவிளம்பி ஆண்டு – ஐப்பசி திங்கள் ‘௨௬’ ம் நாள் (26) ஞாயிற்றுக்கிழமை / 12.11.2017
பொருள்கள் மற்றும் சரக்கு வரி என்பது ஒரு புதிய முறை வரி விதிப்பு! இது முழுமையாகவும் சிறப்பாகவும் செயல்பட குறைந்தது ஒரு வருடமாவது ஆகும்! உண்மையை உடைத்துச்சொல்ல வேண்டுமென்றால் இது இப்போது இருக்கும் வடிவம் ஒரு சோதனை வடிவமே! இதிலிருந்து தவறுகளைக் குறைத்து சரி செய்து மட்டுமே முழுமைபடுத்த முடியும். அதனால் இதுவுங்கூட நிரந்தரமன்று! இதை இப்போதே, இந்த நிலையிலே அரசியல் நோக்கில் விமர்சிப்பது அரைவேக்காட்டுதனம்! மன்னிக்கவும் இந்திய மூத்த அரசியல் கட்சியின் இளவரசே மற்றும் குருட்டுக் குதிரைகளே என்றுதான் சொல்ல நினைத்தாலும் பசுந்தோல் போர்த்திய நரிகளே என்ற எண்ணமே மேலோங்குகிறது! அதற்காக தற்போதைய GST அருமையானது எனவும் கூறமாட்டோம்!
“குருவி அமர பனங்காய் விழுந்தாற்போல்!
குஜராத் தேர்தலும், இளவரசரின் அழுத்தமுமே வரி விகிதக் குறைப்பின் காரணமாம்!
என்னம்மா இப்படி பண்றீங்களேமா”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஹேவிளம்பி ஐப்பசி ௨௬