நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஹேவிளம்பி ஆண்டு – கார்த்திகை திங்கள் ‘௧௦’ ம் நாள் (10) ஞாயிற்றுக்கிழமை / 26.11.2017
காட்டில் மிருகங்களோடு போட்டியிட்டு, மிருகங்களை வேட்டையாடி, மிருகங்களை உண்டு, காட்டை அழித்து பயிர்செய்து தனிமனிதர் தத்தம் விருப்பு வெறுப்புகளைப் பேணி அதுவும் பொதுவெளியில் ஒழுக்கம் தவறாது வாழும் முறைசெய்த செயல் பகுத்தறிவெனினும் படைத்தவனை இறைவன் என்பது மூடத்தனமா? அறவியல் மனவியல் சம்பந்தப்பட்டது! அறிவியல் மருத்துவம் சார்ந்தது!
“பூனை கண்கள் மூட உலகம் இருளுமா?
எல்லா கேள்விகளுக்கும் விடை சொல்லாய் மட்டுமே கிடைக்காது; பல நேரங்களில் அது உணரப்படாமலே கலந்து கிடக்கிறது!
விழித்திரு! பசித்திரு!”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஹேவிளம்பி கார்த்திகை ‘௧௦’