இந்த (எதிர்வரும்) ஆங்கிலப் புத்தாண்டு தமிழர்களுக்கும் மகிழ்ச்சியான ஆண்டு தான்!
திராவிடக் கட்சிகளின்
தரமிலா காட்சிகளால்
மாநில உரிமைகளெல்லாம்
அரசாங்கங்களின் மானமிலா
கானகமாய் போனது!
அரசியல் சேற்றை – நீ
அன்பின் பொருட்டு
அருவருத்து ஒதுக்க
அன்புற்றோம்!
ஆனால் – நீ
அவ்வன்பின் பொருட்டே
சேற்றை ஆறாய்
மாற்றி சோறாய் செயமுயல
இன்புற்றோம்!
அரசியல் அசிங்கமானது
அதைவிட ஊடகம்
ஆபத்தானது என்று
யார் சொல்லிடுனும் – (சோ)ர்
வடையாமல் வருவதே மகிழ்ச்சி
ஆனால் – நாம்
அறிவோம்
அரசியல் மட்டுமல்ல அது
சார்ந்த ஊடகங்களால் மட்டுமே
அது அவ்வாறு தெரிகிறது!
இவ்வூடகங்கள் இனிவரும்
இரு வாரங்களுக்கு
இழிநிலை மாந்தர் முதல்
இரும்புத்திரை கோமாளி வரை
இயன்றவரை பதிவு செய்யும்
இருப்போர் இறந்தவரெல்லாம்
இனிமேல் நல்லவரே
இது(வே) இவ்வரசியலின்
இழிநிலையே!
உனைப் பழிக்க இனி
உன் இனம் உரிக்க
உன் மொழி இழிக்க – எங்கள்
உத்தம சிங்கங்கள்
உண்மை – நாம் தமிழரென்றே
ஊளையிட ஊக்கம் பெறும்!
எங்கும் எதிலும் என்றும்
எண்ணம் எதுவும் நீயே!
எனினும் எங்கே வேண்டுமோ
எப்போது வேணுமோ – அன்றே அப்போதே
எழில் தருவோம்!
ஏக்கம் மிகு ஏழரைகள் – சுய
ஏற்றம் வேண்டி, மண் படுத்த
ஏளனங்கள் இனி வேண்டாம்
ஐம்புலன்களின் ஆசைக்கிணங்க
ஐம்பூதங்களில் ஊழல் செய்து – பின்னும்
ஐயமின்றி இன்னமும் காத்திருக்கும்
ஐவிரல் வீணர்கள் வேண்டாம்
அருவருப்பான அரசியல் சேற்றை
அருவாய் ஆறாய்ச்செய்து
அறம் ஆற்ற
இறையளித்த ஈசனாய்
உனை ஊருக்கு
எடுத்துரைப்பதில் ஏற்பே
ஐயமின்றி ஒப்புரவு
ஓதுவது ஔவை மட்டுமல்ல
நாமும்தான் – ரஜினி
ஊடகங்கள் எல்லாம் போலி அல்ல!
ஆனால் அவை அரசியல் கட்சி சார்ந்து இயங்கத் தொடங்கிய பின்பே அவை அபாயகரமானவை ஆகிவிட்டன. காரணம், இவ்வூடகங்களின் நோக்கம் நேர்மையான செய்திச்சேவையன்று. உணர்ச்சிகளைத் தூண்டி, வலைவிரிக்கும் வேடரைப்போல் மக்களாகிய நம்மை அவர்கள் பால் திசை திருப்புவது மட்டுமே அவர்களின் நோக்கம்! மக்கள் இவ்வூடகங்களை தற்போது சிறிது உணரத் தொடங்கியுள்ளனர்.
எது எப்படியாயினும், தமிழர்களின் எண்ணம், எதிர்பார்ப்பு, மாற்றம் வேண்டி இருந்த தவம் பூர்த்தி அடைந்ததில்
மகிழ்ச்சி!!!