நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஹேவிளம்பி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௬’ ம் நாள் (6) வியாழக்கிழமை / 21.12.2017
மீண்டும் ஒருமுறை, இந்திய நீதித்துறையின் மீதான நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் நிலை இன்று. நமது சட்டங்களையும் அதைக் கையாளுபவரையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது. இந்திய நீதித்துறையை சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டி அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி!!!
“குருடாய் நீதி தேவதை இருந்து, வழக்கறிஞர்கள் தான்
ஒளியூட்டி நீதியை எடுத்துரைக்க வேண்டுமெனின் அது வெறும் பஞ்சாயத்துதான்! பொய்யைப் போல் உண்மை யாரையும் கெஞ்சிக்கொண்டிருக்காது –
அலைக்கற்றை ஊழல் தீர்ப்பு!!”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஹேவிளம்பி மார்கழி ‘௬’