

Story Highlights
- பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் "Like" பண்ணாதீங்க!
- "Share" செய்யவே செய்யாதீங்க!
VView: Velaikkaran – Tamil Movie
VView: Vel's View of Velaikkaran - Tamil Movie
திரைப்படங்களின் விமர்சனங்களைத் தவிர்ப்போம் என்ற கொள்கையை மாற்றிய இரண்டாவது படம்!
நடிப்பு: கடைசி பத்தியில் பார்க்க
கதை: கடைசி பத்தியில் பார்க்க
திரைக்கதை: கடைசி பத்தியில் பார்க்க
இசை: கடைசி பத்தியில் பார்க்க
ஒளிப்பதிவு: கடைசி பத்தியில் பார்க்க
சண்டைக்காட்சி: கடைசி பத்தியில் பார்க்க
பாடல்கள்: கடைசி பத்தியில் பார்க்க
இயக்கம்: கடைசி பத்தியில் பார்க்க
மொத்தத்தில் படம்: கடைசி பத்தியில் பார்க்க
அப்படியென்றால் கடைசிப் பத்தியையே பார்த்துட்டு போயிடலாமே!
அது உங்க இஷ்டம்; உங்க நஷ்டம்!
படத்தின் பலம்
பல வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு ஆரோக்கியமான, வரவேற்கத்தக்க முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள்! மக்கள் அனைவருமே குறைபட்டுக்கொள்ளும் மாற்றுவழி யோசிக்கும் விசயத்தை கையிலெடுத்து நமக்கு சிறிது ஆறுதல் அளித்திருக்கிறார்கள்!
மாற்றம் ஒவ்வொரு தனிமனிதனின் மனதிலிருந்தே வரவேண்டும் என்ற ஆதி தத்துவத்தை, ஆதிக்கெதிராக அறிவோடு சொல்லியிருக்கிறார்கள்! அனைவரது நேர்மையும் விசுவாசமாய் வேலை வழி நம்மை பழி செய்வதை அறிவால் ஒளியூட்டிக் காண்பித்திருக்கிறார்கள்!
எதிலும், எங்கும், குறையை பெரிதாக்காத மனமாய் நம்மை அறிவு செய்ததால் வேறு எதையும் நாம் வேண்டவில்லை இவ்வழகிடம்!
படத்தின் பலவீனம்
இதுவும் ஆதித் தத்துவம்தான்! உலகிலேயே சிறந்த சொல்: செயல் என்று கூறின் அதுவேதான் இவ்வுலகில் மட்டமானதுமாகும்! படத்தின் அறிவால் ஒளிரும் உண்மையே அதன் பலவீனமுமாகும்! பொதுவாய் போய்விடின் அதில் பொருளும் போய்விடும்; அதன் இடைவெளியில் பொய்யும் குளிர் காயும்!
VView: Velaikkaran – Tamil Movie – கடைசிப் பத்தி
என்னங்க நண்பரே! உடனே இங்க வந்துட்டீங்க! பதில்களை முன்பே சொல்லிட்டோமுல்ல? புரியலீங்களா? படத்தின் பலம் பகுதியின் மூன்றாவது பத்தியை இன்னொருமுறை படிச்சுக்கோங்க!
மெய்ப்பொருள் காண்பது அறிவு!!