Story Highlights
- ஊழலசுரன்
- மரிக்கவே இனிவரும்
- தீபாவளி தினங்கள்
- ஒளி - ஒலி வெடிக்கும்!
ஊழல் நீதி
குருட்டு நீதி
மலட்டு நீதி
முட்டாள் நீதி
என்று கொட்டத்தான்
நினைத்தோம்!
இவையனைத்தும் ஒருங்கே
இணைந்து நடிப்பதால்
இது ஊழலே!
ஆம்! நீதியின் ஊழலே
நிலத்தின் மிகப்பெரும் ஊழல்!
சாலைகள் சரியில்லை!
சரி செய்ய அரசை ஆணையிட
சத்தில்லை!
ஆலைகள் சரியில்லை!
அவை தடுக்க அரசை சாட
திராணியில்லை!
மலைத் திருட்டு,
சோலை – மலர்த்திருட்டு,
அலைத் திருட்டு
பாலை – மண்திருட்டு
கலைத் திருட்டு,
எண்ணக்கரு திருட்டு
எண்ணிலடங்கா மரமழிப்பு
எண்ணத்தில் சேரா அறமழிப்பு
எதுவும் தெரியாது
நீதிக்கு!
மன்றமென்ற பேரெதற்கு
நீதி செத்த
மடுக்களுக்கு!
அறம் தவறாது
ஆட்சி செய்தலே
அரசரெனில்
நீதியின் அறம் தவறிய
நிர்மூலர்களை அரசரேன்பதேது!
தகுதியில்லா விச விதைகள்
தரமில்லா விதி செய்ய
நீதியினைத் தேர்தல்
ஊழலின் உச்சம்தான்!
மண்ணின் மான்பறியா
மடையர்கள்
நாட்டின் வேரறியா
பதர்கள்
நம்பிக்கை மற்றும் வாழ்வின்
மூலம் சாய்த்தல் – ஊழலே!
மண்ணில் உயிர் வேறெங்கும்
தோன்றுமுன்னே
அறம் செய்து
வீரம் செய்து
ஆட்சி செய்த பூமியின்று,
இலவசப் பிச்சைகளுக்கும்
இவரிடும் எச்சைகளுக்கும்
இயல், இசை மற்றும்
நாடகப் போலிகள் கொண்டு
அரசின் இயல் கெடுத்த
அரக்கர்களின்று
முன்னேற்றக் கழகங்கள் என்றே
கலகங்கள் செய்தும்
கழகங்கள் செய்யும்
கயவர்கள் பால் ஈர்ப்பும் –
போற்றுதலுங்கொண்டு
இனம் மறந்து – பிறப்பின்
குணமிழந்து – இன்று
ஊழலின் நிழலாய்
நிழலின் பயனாய்
நிஜத்தின் எதிரியாய்
பணத்திற்கு விலைபோன
பாவிகளாய் – நரகாசுரன்களாய்
தீபாவளிக்குத் தடையாய்! – கட்டுப்பாடாய்!
தீமையின் தாக்கம் சேரத்தொடங்கியுள்ளது!
மறுபடியும் இந்த ஊழலசுரன்
மரிக்கவே இனிவரும்
தீபாவளி தினங்கள்
ஒளி – ஒலி வெடிக்கும்!
அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்!