Story Highlights
- அட்டகாசமான மிரட்டல்
2.0 – பார்வை பலவிதம்
அவரவர் அறிவின் திறனால் கிடைக்கும் அனுபவம் அற்புதம்!
2.0 – திரை விமர்சனம்
ரஜினி
ரஜினி என்ற மூன்றெழுத்தின் சக்தி படம் முழுவதும் ஆக்கிரமித்து கதையைத் தாங்கி, கதையில் தங்கி, காணும் மாந்தரை நல்லதே நடக்கும், நன்மையே வெல்லும் என்ற ஆக்கபூர்வமான நம்பிக்கையை நமக்கு தருகின்றது.
ரஜினி என்ற பிம்பம் இந்த உலகத்தின் சாதாரண மக்களின் மேலெழுந்த உணர்வின் வெளிப்பாடே என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது.
உலகளாவிய வியாபாரம் என்ற போலி சாக்குகளைத் தள்ளிவிட்டு உற்று நோக்கினால், ரஜினியின் அருமை, பங்களிப்பு தெளிவாகத் தெரியும்.
இயக்கம்
இந்தப் படத்தின் தொழில்நுட்பம் பொருத்தவரையில், இப்படம் எம்மறிவிற்கு எட்டிய வரையில் தமிழகத்தின் மற்ற இயக்குனர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் ஒரு வழிகாட்டி மற்றும் பாடம்.
இயக்குநர் சங்கர் தனது திறமையையும், சமுதாயம் சார்ந்த நல்லெண்ணத்தையும் ஒருங்கே சேர்த்து மக்களுக்குப் புரியும்படியும் பிடிக்கும்படியும் கொடுக்கும் கலை கற்ற அறிஞர் என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது.
படத்தின் கதை மற்ற விசயங்களை நாம் விரிவாக கண்டு படத்தைக் காணும் போது கிடைக்கப் போகும் அனுபவத்தைக் கெடுக்க வேண்டாம் என்பதால்…
2.0 – பார்வை பலவிதம்
டிக்கெட் விற்கும் விலையில், குடும்பத்தோடு திரையரங்கம் சென்று பார்க்கத் தகுதியுள்ள ஒரே படம் என்றால் மிகையில்லை!