VView: Bigg Boss Tamil – Season 3
VView: Vel's View of Bigg Boss Tamil - Season 3
மறுப்பு மற்றும் பொறுப்பு துறப்பு / Disclaimer
-
இப்பதிவின் கருத்துக்கள் முழுக்க எம்முடைய எண்ணத்தில் / பார்வையில் உருவானவை! இதில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லையெனினும், செயல்களின் எதிர்வினையாய், கோபப்பதிவுகள் மனம் நோகும்படி, அமையும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. எனவே நல்லுள்ளங்கள் பொறுத்தருள்க! / THIS POST IS THE RESULT OF OUR OWN VIEW! WE HAVE NO INTENTION TO DEFAME OR INSULT ANY INDIVIDUAL. HOWEVER THE NATURAL REACTION MAY GIVE RESEMBLANCE TO TEASE ONE’S MENTAL COMPOSURE. HENCE FORGIVE US FOR THAT!
வணக்கம் நண்பர்களே! Bigg Boss 2ம் சீசன் பற்றிய பார்வை பதியாததின் காரணம், அதற்கான தகுதி அதன் போட்டியாளர்கள், நிகழ்ச்சி மற்றும் தரம் ஆகியவற்றிற்கு இல்லாதிருந்ததே! இப்பதிவின் காரணமும், இந்த மூன்றாம் சீசனின் போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் நேர்மை, IQ மற்றும் மன முதிர்வே! ஏன்? இப்போதே? என்றால் இனி வரும் 10 நாட்களில், இதன் போட்டியாளர்கள், நிர்வாகம் மற்றும் அனைவரும் ஆxxxர் என்று அழைக்கும் (குறிப்பிட்ட ஜால்ரா கோஷ்டிகள்) அxxxxனுங்கூட இந்த நிகழ்ச்சியை தூக்கி நிறுத்த முடியாது!
சாதனைகளும் வாழ்த்துகளும்
ஸ்டார் விஜய்
ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்கு, நாம், ஒரு பெரும் வாழ்த்து மற்றும் பாராட்டும் சொல்ல வேண்டும்; இந்த நிகழ்ச்சியில், சில யதார்த்தமான நல்லவர்களை, புத்திசாலிகளை மற்றும் நேர்மையான மனிதர்களை, தெரிந்தோ தெரியாமலோ பங்கு பெறச்செய்தமைக்கு!
நடிகர் கமலஹாசன்
முதல் சீசனில், மக்களுக்குப் புரியாத போது, பெரிதாய்த் தெரிந்த திறமை, சாயம் வெளுத்துப் போச்சு நடிகரே! நாட்டின் பல்வேறு வியாபார, விளம்பர மற்றும் அரசியல் யுக்திகளின் கலவையாய், அருவருக்கத்தக்க வகையில், உங்கள் செயல்பாடுகள், உங்கள் உண்மையான முகத்தை, உலகிற்கு தெரிவித்துவிட்டது!
முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள்
இந்நிகழ்ச்சியின் முதலீட்டாளர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் ஆகியோருக்கு, இந்த வருடம், கொஞ்சம் போன வருடத்தைவிட சிறிது ஏற்றம்தான்; வெறும் மூன்று, நான்கு உண்மையான யதார்த்தவாதிகளின் நேர்மையில் தப்பிவிட்டீர்கள்
போட்டியாளர்கள்
இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள், சிலரைத்தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு ஒரு கதை சொல்லியுள்ளனர்! புரிந்தவர் போதி மரம் செல்லாமல் நமது வாழ்கையை முன்செலுத்தலாம்! புரியாதவர்கள் நின்ற இடத்திலேயே புலம்பிக்கொள்ளலாம்!
வியாபாரம் மற்றும் பிரபலம்
இந்நிகழ்ச்சியின் மூலம் அனைத்து முதலீட்டாளர்களும், விளம்பரதாரர்களும் தங்கள் வியாபாரத்தை பிரபலப்படுத்த முயன்ற போதும் சற்று ஏமாற்றமே! ஸ்டார் விஜய் தொலைக்காட்சி, இந்த முறை, மக்களின் கோபத்தை சேர்த்துக்கொண்டதை, இனிவரும் பத்து நாட்களில் தீர்ப்பதென்பது, குதிரைக் கொம்பே!
இதுவரை, ஒரு பொதுப்படையான கருத்தோட்டத்தைக் கண்டோம்! இந்த ‘Bigg Boss’ நிகழ்ச்சியின் சோதனைகளையும், வேதனைகளையும் அதற்கான குட்டுக்களையும் காண்போம்!
VView: Bigg Boss Tamil – Season 3
நிகழ்ச்சியின் தரம்
இந்த சீசன் பிக் பாஸ், முதல் வருடத்தைப் போல் அவ்வளவு கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற முயன்றதாய்க் கூட தெரியவில்லை. ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’, ‘என்ன வேண்டுமானாலும் செய்வோம்-செய்யலாம்’ போன்ற வசனங்களின் நிழலில், ஒரு சர்வாதிகார, வியாபார நோக்கிலான, கயமைத்தனமிக்க கொடுங்கோலனின் செயல்பாடாகவே, இந்நிகழ்ச்சியின் தரம் விளங்குகிறது.
நூறு நாட்கள், கேமராவில் தொடர்ந்து பதிவு செய்வதாகக் கூறினாலும், வெறும் ஒரு மணிநேரத்திற்குள் அனைத்தையும் நேர்மையாக காண்பிக்காமல், ஒரு விதமான, தந்திரமிக்க வியாபார யுக்தியாகவே விளங்கும் காட்சிகளை நிகழ்ச்சியின் இயக்குநர்கள் கவனிக்கத் தவறி விட்டனர்.
VView: Bigg Boss Tamil – Season 3
வாழ்க்கை
நம் அன்றாட வாழ்கையில், யதார்த்தவாதிகள், நேர்மையான அப்பாவிகள், புத்திசாலியான நரிகள், நம்பிக்கைத் துரோகிகள் எப்படி வாழ்கின்றனர். அவர்கள் குணம், செயல் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை, இந்த பிக் பாஸ் வீட்டிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அதுவும் பலம் மிகுந்த வலியவன், அவன் விரும்பும் பாணியில், அவன் நினைக்கும் தொனியில் மட்டுமே காண முடியும். உண்மை ஒன்றிருக்க, மறைத்து வரும் பாதியில்-பகுதியில், காணும் அர்த்தம், அனர்த்தமாவதை அந்த வலியவன் மட்டுமே அறிவான்.
பாடம்
Bigg Boss வீட்டில், நமது நாட்டின் அரசியல் போலத்தான். ஆள்பவர்கள், ஆட்சிக்கு வருபவர்கள், நேர்மையானவர்களாய் இருந்து விட்டால் பிரச்சினை இல்லை. ஆனால், வியாபாரியாய் நினைத்துப் பாருங்கள் – அதுதான் “பிக் பாஸ்”.
அவர் நினைத்தால், ஒரு நல்லவரை கெட்டவராய் காண்பிக்கவும் முடியும். ஒரு கெட்டவரை, நல்லவராய்க் காண்பிக்க முடியும். அதிலும் புதிதாக, அனைவரும் இது ஒரு விளையாட்டு! விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும் என்கின்றனர்!
விதிகள் தெளிவாய் இருப்பதே விளையாட்டிற்கும், விளையாடுபவர்களுக்கும் நன்மை தரும்; ஏற்றம் தரும். எப்படி வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் மாறுமென்றால், அது விதியுமல்ல; விளையாட்டுமல்ல – சதி மற்றும் பயங்கரம்!
பிக் பாஸ்: உன்னால நான் கெட்டேனா? என்னால நீ கெட்டாயா? என்று endemol நிறுவனமும் விஜய் டிவியும் கேட்டுக்கொள்ள வேண்டும்.
பலமுறை, பார்வையாளர் மதிப்பீட்டிற்காக செயற்கையாய் செய்த தவறுகள், உண்மையான உறவுகளின் போது, தொலைக்காட்சி நிலையத்தை, திருப்பித் தாக்கிவிட்டது.
இவையெல்லாவற்றையும் விட, சாத்தான் ஓதும் வேதம், நம்மை நோகச் செய்கிறது. தத்தம் வாழ்வில் ஒழுக்கம், நேர்மை, சீரிய பண்பு கைக்கொள்ளா அரசியல் காளான்கள், உலகிற்கே தரம் மற்றும் மாற்றம் குறித்து போதனைகள் செய்கிறார்கள்.
மனித காட்சி சாலை
இப்பொழுது இந்த வார்த்தை, சாதாரண வார்த்தை ஆகிவிட்டது. ஆம், எந்தவொரு மனிதரின் மனமும், செயலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டதோ; கடுமையான விவாததிற்குள்ளாயினவோ, அப்போதே, அவை அப்பட்டமான தனி மனித விதிமீறல் ஆகிவிடுகிறது. ரியாலிட்டி ஷோ என்னும்போது, அதை, அவரவர், அவரவர் பாணியில், பார்வையில் விளையாட அனுமதிப்பதே உத்தமம். ஆனால், நாட்டில் மக்களின் பிரதிநிதிகள் என்ற போர்வையில் எவ்வாறு மக்களை ஏமாற்றுகின்றனரோ, அதையும்விட ஹை-டெக்காக ஏமாற்றும் திறமைசாலியைக் கொண்டு, மக்கள் விரும்பும் நபர்களை, மக்கள் பெயரிலேயே மக்கள் நம்பும்படி (ஏற்காத போதும்), ஜால்ராக்கள் துணை கொண்டு சிதைக்கின்ற சின்னத்தனம்,இந்த வருட சீசன் தரும் தனிச்சிறப்புப் பாடம்!
வெற்றியாளர்
தான் நினைத்ததை, தன் சுயவிருப்பத்தோடு எடுக்கும் அறிவும், தைரியமும் உள்ளவரே வெற்றியாளர்!
மாற்றம்
இப்பொழுது, இந்த நிகழ்ச்சியின் மீது, மக்கள் கொண்டுள்ள, நீதி மாற்றத்திற்கான நேரம், மய்யம் கொண்டுள்ளது. அரசியலில் தீர்ந்துவிடுவோம் என்றே, செய்திகளைக் கூட ஒளிபரப்ப துணியாத தொலைக்காட்சியில் ஓர் அரசியல் அநாகரீகம்! விழிக்காவிடில், பன்னாட்டு நிறுவனம் யோசிக்க வேண்டிய தருணம் – மாற்றம்!
பெரியண்ணா – வியாபாரிகளின் மறுபிம்பம்!!!