Story Highlights
- செவ்வாயையும் சந்திரனையும் விட வாழும் பூமி சொர்க்கமாக வேண்டும்!
Featured Image Courtesy: New York Times. We have no intention either to portray that "New York Times" had insulted US - Indians or to defame ourselves! But to register the fact of our failure in saving human life despite of records in the space
எம்முதுகின் பின் எ_ன்?
ஏழுகண்டம் தாண்டும்
ஏவுகணைகள் எதற்கு?
வாழும் மனிதர் காக்கும்
வழியில்லை எனும்போது!
வான் அளக்கும் அறிவியல்
வாழும் பூமி அறிய மறந்ததோ?
கடல் ஆழம் கண்ட திறன்
காணி நிலமுணர தோற்றதோ?
செவ்வாயும் சந்திரனும் – இவ்விந்தியர்
செயல்வீரரென களிக்குங்கால்
சோற்றுக்கும் வீட்டிற்கும் – இவர்
தினம் வரி நிற்பதழகா?
போர் ஆயுதங்கள் செய் – அரசின்
கூர் ஆர்வத்தின் முன்
குடி போற்ற வழி செய்வதும் – அதை
மனம் ஏற்க செய்வதழகா?
அறிவியல் வளர்ச்சியில் வளர்ந்து விட்டோம். ஆனால் நம் நிலையதை மறந்து விட்டோம்! கல்வி செய்தோம்; அதன் பயன் கண்டோம்! ஆபத்தில் உயிர் இழப்பை மட்டுமே கண்டோம்! கற்கும் அறிவில், அறிவியல், இயந்திரமாய், இயந்திரத்தனமாய் போனதால், இயங்கவும் மறந்து போனோம். அடிப்படையில், தனி மனித ஒழுக்கமின்மை, தத்தம் குழந்தைகள் பால், பொறுப்பின்மை, செய்யும் செயலின், விளைவு – தாக்கம் பற்றிய தெளிவின்மை; இருந்தாலும், சமுக அக்கறையின்மை, சுயநலமாய் அபகரிக்கும் நேர்மையின்மை, அவற்றைக் கைக்கொள்ள திறனின்மை, இப்படி, இந்த தேசத்தில், இருந்த பல – ஆன்ம பலம்சார் திறன் – இன்று இல்லாமல் போனதால்; எம்முதுகின் பின் எவன்? என்றென்னும்போது எமன் என்றே நிற்கிறான்!