சோழப்பேரரசு
பொறுப்பு துறப்பு: இது ஒரு வரலாற்றுக் குறும், நெடுந்தொடர்த் தேடல் தொடர் பதிவு! இக்கருத்தில், இத்தகவல்களில் உடன்பாடில்லாதவர்கள், மாற்றுக்கருத்து தெரிவிக்க விரும்பும் நண்பர்கள் தகுந்த சான்றுகளைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அக்கருத்துகளும் பதிவு செய்யப்படும்! பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
கொடி செய்வோரெல்லாம் தலைவருமன்று. கொடி பிடித்தோரெல்லாம் தர்மருமன்று. காலம் கலியதனால் கீற்கொடியவனும் வீரனாய்க் காட்சி தருவான். விழித்தெழு மனமே!
தேடல் 3
கடந்த பதிவில் தெரிவித்தது போல், கி.பி.3ம் நூற்றாண்டு தான் சோழர் காலமெனில், பழியே மிஞ்சும். வரலாற்றின் தேடலில், ஒரு சிறு குறிப்பு வைத்தலும், அதைச் சார்ந்து காய் நகர்த்தலும், உண்மை விளம்பில் நன்மை தரும். கடைச்சங்க காலம், கிட்டத்தட்ட மூன்றாம் நூற்றாண்டு என்பதை பல வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
சோழர் வரலாற்றைப் படிக்க உதவும் நூல்கள் எவை?
- சோழர் சரித்திரம் – நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார்
- கரிகாலன், இராசராசன் – உலகநாத பிள்ளை
- இராசேந்திரன் – பி.நா.சுப்பிரமணியன்
- முதற்குலோத்துங்கன் – பண்டிதர் சதாசிவப் பண்டாரத்தார் மற்றும் L. சீனிவாசன்
- மூன்றாம் குலோத்துங்கன் – இராமச்சந்திர தீக்ஷிதர்
- இரண்டாம் குலோத்துங்கன் – டாக்டர். மா.இராசமாணிக்கனார்
வரலாற்றைத் தேடும் வண்டுகளுக்கு, முன்மாதிரியான வண்டுகளை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி.
கடைச்சங்க காலம் தோராயமாக கி.மு. நான்காம் நூற்றாண்டாகவும் அதன் முடிவு கி.பி. மூன்றாம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்பே கூட இருக்கலாம். வான்மீகியின் காலம் கி.மு. எட்டாம் நூற்றாண்டாக இருப்பின், அவர் புறநானூற்றில் பாடல் பாடியுள்ளார் என்பதும், இராமாயண நிகழ்வுகள் சில புற-அக நானூற்றுப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதும், தமிழும் தமிழ்ப்புலமையும் கி.மு. 1௦௦௦ ஆண்டுகளுக்கு முந்தையது என்பதும் விளங்கும்.
தொல்காப்பியம்
தமிழகத்தில் வடமொழியாளர்கள் புகுந்த காலம், ஏறத்தாழ கி.மு. 1௦௦௦ என்று நம்பப்படுகிறது. தொல்காப்பியரின் காலம் கி.மு. 4ம் நூற்றாண்டிற்கு முற்படிருக்க வேண்டும். ஏனெனில் பெளத்த, சமண குறிப்புகள் எதுவும் தொல்காப்பியத்தில் இல்லை. ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்ற சொல்வழக்கிலிருந்து, பாணினீயம், ஐந்திரம் இலக்கண நூலுக்குப் பிந்தையது என்பது தெளிவாகிறது.
இறையனார் களவியல் உரையின்வழி உணர்வதாவது, கவாடபுரம், கடல்கோளால், தொல்காப்பியர் காலத்தில் அழிந்தது. எனில், இது இலங்கையில் நடந்த கோளாகவே கருதப்படுகிறது. “மகாவம்சம்”, “இராசாவழி” போன்ற நூல்கள் மூலமறிவது, இலங்கையை அழித்த பல கோள்களில், முதலில் நடந்தது, கி.மு.2387ல், இரண்டாவது கி.மு.504ல் மற்றும் மூன்றாவது கி.மு.306ல். தமிழகத்தின் கபாடபுரம் கிட்டத்தட்ட, இரண்டாம் கடல்கோளால் அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதே பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் ஒப்பும் நிலை
தொல்காப்பியர் தம் நூலில் 16 சதவீதம் அளவே, முந்தைய நூல்களையும், ஆசிரியர்களையும் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதே, தொல்காப்பியர் காலத்து முன் தமிழும், தமிழ்ப் புலவர்கள் பலர், சிறந்து விளங்கியுள்ளனர் என்பதும் தெளிவு
இதுகாறும், தமிழும், தமிழ்ச் சமுதாய வரலாற்றையும் சிறிது திரும்பிப் பார்த்தோம் அடுத்த பதிவிலிருந்து, முழுமையாக ‘சோழப்பேரரசின்’ தேடல் தொடரும்…
நன்றி: “சோழர் வரலாறு” – நூலாசிரியர்: திரு. டாக்டர்.மா.இராசமாணிக்கனார்,
ஜீவாதாரம், காருண்யம் – படைத்தவனுக்கே படையல் செய்த மழலைகள் கண்டு தேவனும், தேவியும் பேருவகை கொண்டனர்.
- அண்டமதில்
ஓர்கோளாம் பூமி
பிண்டமதே
எவ்வுயிரின் சாமி
புரிந்தோர்
போகுமிடம் காமி
விளியாதோர்
சாகுமிடம் சேமி
சோழர் வரலாறு – பழைய பதிவுகள்
இராஜராஜ சோழனின் வாரிசுகள், உண்மையில் யார் இராஜராஜ சோழனின் வாரிசுகள்?
சோழப்பேரரசு
Arumai Bro
Arumai
https://nattumarunthu.com/