Story Highlights
- வரலாற்றுப்பதிவு
சோழப்பேரரசு
பொறுப்பு துறப்பு: இது ஒரு வரலாற்றுக் குறும், நெடுந்தொடர்த் தேடல் தொடர் பதிவு! இக்கருத்தில், இத்தகவல்களில் உடன்பாடில்லாதவர்கள், மாற்றுக்கருத்து தெரிவிக்க விரும்பும் நண்பர்கள் தகுந்த சான்றுகளைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அக்கருத்துகளும் பதிவு செய்யப்படும்! பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
வான் ஞானம் அறிதலைக்காட்டிலும் ஒருவர் தன் மனதை அறிவதே அறத்தில் சிறந்தது. அதுவே மெய்ஞானம், மெய்யான ஞானமுங்கூட!
தேடல் 1
சோழர்கள் வாழ்ந்த காலம் என்பது மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் என்று கணிக்கப்படுகிறது. பல்லவர்களை வென்று, முதன்முதலில் ஆதித்ய சோழர், சோழ ராஜ்ஜியத்தை நிறுவுகின்றார். அவ்வாறு நிறுவப்பெற்ற சாம்ராஜ்ஜியத்தின், ஒரு ஐநூறு ஆண்டு கால வரலாற்றைப் பதிவு செய்யும் சான்றுகள் மிகச்சிலவே!
அவற்றுள் பேருதவியாக அமைந்துள்ள சில
- பல்லவர் பட்டயங்கள்
- பாலி, வடமொழி மற்றும் தமிழ் நூல்கள்
- பாண்டியர் பட்டயங்கள்
- சாளுக்கியர், கங்கர், இராட்டிரகூடர் பட்டயங்கள்
ஆகும். இவற்றுடன் தேவாரத்திருமறையும் பேருதவி புரிகின்றது. வரலாற்றைப் பிழையின்றி உணர, இன்னமும்கூட கிடைக்காத, அறியப்படாத உண்மைகளைக் கொண்டே புரிந்துணர முடியும்.
{Adhithya Chola defeated Pallavas and established Chola Kingdom approximately at the end of 3rd Centenary Year (300AD)}
சோழர்களின் ஆரம்ப கால சரித்திரத்தை அறிய நாலாயிர திவ்யப்பிரபந்தம் மற்றும் சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் முதலிய புத்தகங்கள்தாம் பேருதவியாக உள்ளன.
நன்றி: “சோழர் வரலாறு” – நூலாசிரியர்: திரு. டாக்டர்.மா.இராசமாணிக்கனார்
இறைவன் தன் தேவியுடன் தனித்திருந்த வேளையில், தேவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அவர் ஆழ்ந்த சிந்தனையிலிருந்தார். தேவிக்குத் தெரிந்து விட்டது, எதுவோ, எதையோ, எதிர்பார்த்து, இறைவன் காத்துக்கொண்டிருக்கிறார் என்று. தேவியின் கேள்வியைப் புரிந்து கொண்ட இறைவன்,
- இந்தப்பந்தில் செய்து வைத்த
இயல்பில்
இனிக்காண்பாய் இயக்கம்
இயக்கமா இடரா
இந்தக்கதை இனி தொடரும்- பல ஓருயிர் செய்தேன்
அவற்றின் விதி படி
பிற பல்லுயிர் வளர்த்தேன்
இனிவரும் ஓருயிர்
இறை-நம் நிலை எய்வான்
தேடல் தொடரும்…
சோழர் வரலாறு – பழைய பதிவுகள்
இராஜராஜ சோழனின் வாரிசுகள், உண்மையில் யார் இராஜராஜ சோழனின் வாரிசுகள்?