நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஸ்ரீவிகாரி ஆண்டு – பங்குனித்திங்கள் ‘௧௭’ ம் நாள் (17) திங்கட்கிழமை / 30.03.2020
தனித்திருந்தால், விழித்திருந்தால் மட்டுமே பாதுகாப்பு என்றால் அறிவியல் – விஞ்ஞானம் மட்டுமே, கற்ற கோழைகள் நாம். இந்நோய் பரவாமல் தடுக்க மருந்து, வருவதைக் கண்டுணர வழிமுறை, வந்து விட்டால் தீர்க்கும் செயல்முறை அறிதலும், அரசின் கடமையே! ஆபத்தில் தான் அதன் தேவை, அவசரம் – அவசியம்! அதை விடுத்து, ஓடி, ஒளிதலும், விலகி இருத்தலும் மட்டுமே தீர்வாகாது! இது தாற்காலிகத் தீர்வுதானே ஒழிய, நமது மருத்துவக் கல்வி – வாழ்க்கைக் கல்வியைச் சீர்தூக்கி, பார்க்க வேண்டிய காலமிது. நமது அறிவியல் ஞானமும், விஞ்ஞான வித்தகமும், வாழும் மனிதர்க்கு, ஒரு அச்சமற்ற சூழ்நிலையைத் தரவேண்டும்.
“கொரோனா – நம்மிடம் இருந்த இன – மானத்தைத் துறந்த இழிநிலையை, வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டதோ!”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஸ்ரீவிகாரி பங்குனி ‘௧௭’