Story Highlights
- குறும் - நெடுந்தொடர்கதை
செக்க சிவந்த வானம் – விடியல் 3
ஒன்று கூடி வாழ்தல் என்பதின் பலத்தை தனிமையை விட யாரும் / எதுவும் நமக்கு உணர்த்த முடியாது.
குடும்பம்! குடும்பம்! என்று சொல்கிறோமே?, பள்ளியில் தானே படித்துக்கொண்டிருந்தோம்? எப்பொழுது பெரியவனானோம்? எப்படி இந்த அனுபவமான வார்த்தைகள் எல்லாம் பேசத் தெரிந்து கொண்டோம்? அப்பா மலரவன் எங்கே? பாசமிகு தாய் கயல்விழி எங்கே? எப்போதும் காலைச் சுற்றிக் கொண்டிருக்கும் தங்கை மலர்க்கொடி எங்கே?
நமது வயதுதான் என்ன? பள்ளிப் படிப்புக்கு பின் என்ன செய்தோம்? இப்பொழுது எந்த நிலைமையில் உள்ளோம்?
இது உண்மையாகவே அறைதானா அல்லது அதைப் போன்ற பிம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? நமது நண்பர்கள், சொந்தங்கள் அனைவரும், நம்முடன் அருகிலேயே இருந்தாலும், நமக்குத் தெரியாத வண்ணம் அமர வைக்கப்பட்டு இருக்கிறார்களா?
அதனால்தான், எண்ணங்கள் தோன்றினாலும், நம்மால் எந்த இயக்கமும் உடலளவில் செய்யமுடியாமல் உள்ளதா?
உலகத்து மனிதர்கள் யாவரையும் ஒருவரால் இப்படி செய்ய வைக்க முடியுமா? அல்லது நாம் மட்டும் தான் இப்படியாக்கப்பட்டுள்ளோமா?
ஆக இதில் ஒரு தெளிவு கிடைத்துள்ளது!
நாம் மட்டும் தான் இப்படி ஆக்கப்பட்டு உள்ளோம் என்று நம்புவோம் எனில் நமது நண்பர்கள் சொந்தங்கள் யாவரும் நலமாக உள்ளனர் என்றே நம்புவோம்.
இது நமக்கு ஏன் நடந்தது? எதனால் இப்படி நடந்தது?
நாம் இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்று கனவு கண்ட விஷயங்களையே, நமக்கு செய்து அதையே நமக்கு எதிராக நிறுத்தி இருப்பதன் மூலம், இது அக்கனவுகளை பிடிக்காதோர் செயலாக யூகிக்கலாம்.
இன்றைய நாள் தான் அந்த நாள்! எங்கே செல்வதற்கான அழைப்பு இது? யார் அழைக்கிறார்கள் ? எப்படி அமர்ந்த நிலையிலேயே கட்டப்பட்டுள்ளோம் ? இந்த நாற்காலி எங்கு நகர்கிறது? ஏன் இப்பொழுது திரும்பிக்கூட முடியவில்லை? இரவும் பகலும் தெரியா நிலையில், ஈர்க்கும் ஒளிப்புயல் ஏது?
படுத்தே இருக்கும்போது – குழந்தையாய், தவழ்தலும் நடைபலகலும் எவ்வாறு ஆனந்தமோ? அட! எப்படி இப்போது கட்டுகளை நம்மால் அவிழ்க்க முடிகிறது? அடக்கடவுளே! இவ்வளவு நேரம் கட்டுண்டோம் என்றெண்ணியிருந்தோம்! ஆனால், ஏன் இப்போது பறக்கிறோம்? எங்கே பறக்கிறோம் ?
நம் கட்டுக்குள் எதுவுமில்லை தான். ஆனால்?
இந்த அணைப்பு, ஸ்பரிசம் முத்தம் நமக்கு தெரியாததா?
நாம் இப்போது மிகவும் அன்பான பாதுகாப்பான கரங்களில் தவழ்கிறோம்! நல்ல வேலை! இவையெல்லாம் வெறும் கனவுதான்!
தாங்கள் விரும்பும் முந்தைய பகுதிகளைக் காண, கீழே சொடுக்கவும்:
முற்றும்