Story Highlights
- இருக்கு!
- நிறைய இருக்கு!
- கிடைக்கும்படி இருக்குமா?
சுய சார்பு பாரத இயக்கம் – Atma Nirbhar Bharat Abhiyaan Part 2
பொறுப்பு துறப்பு: நாம் அரசாங்கத்தின் ஊதுகுழல் இல்லை. அரசாங்கத்தின் நிவாரண தொகுப்பின் விபரம் பதியவே முனைகிறோம். இந்தப் பதிப்பின் நோக்கம், பாரத அரசாங்கத்தின் நிவாரண தொகுப்பின் பலன்களை அறிவதோடு, அதன் நன்மை தீமைகளை சீர்தூக்கிக் காண்பதுமாகும். நன்றி: PIB, Chennai இணைய தளம்.
நாட்டு மக்களுக்கு, 12.05.2020 அன்று, பிரதமர் அறிவித்த சுயசார்பு பாரத இயக்கம் குறித்து, நிதி அமைச்சரின் பத்திரிகை வெளியீடு மற்றும் Atma Nirbhar Bharat Abhiyaan – சுயசார்பு பாரத இயக்க நிவாரணத்தொகுப்பு – பகுதி 2 குறித்து வரிசையாக பார்ப்போம்.
பத்திரிகை செய்தி வெளியீடுகள்
பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அறிவித்த இரண்டாம் கட்ட நிவாரணத் தொகுப்பு விபரம்
- புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
- தெருவோர வியாபாரிகள்
- புலம்பெயர்ந்த நகர்ப்புற ஏழைகள்
- சுய தொழில் செய்யும் சிறு வர்த்தகர்கள்
- சிறு விவசாயிகள்
- கட்டுமானத் தொழிலாளர்கள்
ஆகியோரின் பொருளாதார மேம்பாட்டிற்காக, குறுகிய கால, நீண்ட கால நடவடிக்கைகள் பற்றி விளக்கினார்.
சுயசார்பு பாரத இயக்க நிவாரணத் தொகுப்பு – பகுதி 2
- புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இரு மாதங்களுக்கு, உணவு தானியங்கள் விலையில்லாமல் வழங்கப்படும் – திட்ட மதிப்பீடு ரூ.3500 கோடி.
- மாநில பேரழிவு நிவாரண நிதி (SDRF) ஐப் புலம் பெயர்ந்தவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்தல், அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்டவை வழங்கல் போன்றவற்றிக்கு பயன்படுத்த மாநில அரசுகளுக்கு அனுமதி.
- மாநில பேரழிவு நிவாரணத் தொகுப்பிற்கான மத்திய அரசின் பங்களிப்பான ரூ. 11002 கோடியை முன்கூட்டியே வழங்கப்பட்டது.
- நகர்ப்புற வீடற்றவர்களுக்கான முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு, மார்ச் 28, 2020 முதல் தினமும் 3 வேளையும் சுகாதாரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
- 12000 சுய உதவிக் குழுக்கள் மூலம், 3 கோடி ‘முகக்கவச உறைகள்’ மற்றும் 1.20 இலட்சம் லிட்டர ‘கிருமிநாசினி’ தயாரிக்கப்பட்டுள்ளது.
- சுய உதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி முன்னோட்ட அடிப்படையில் குஜராத்தில் ஏப்ரல் 2020ல் PAISA முனையம் மூலம் செலுத்தப்பட்டது. இப்பொது மே 2020ல் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
- 15 மார்ச், 2020 முதல் நகர்ப்புற ஏழைகளுக்கு, 7200 புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் அல்லது மாநில அட்டைப் பயனாளிகள் அல்லாத இடம் பெயர்ந்தோருக்கு அவர்கள் தங்கியுள்ள மாநிலங்களில், ஒரு நபருக்கு 5 கிலோ தானியங்கழும், ஒரு குடும்பத்திற்கு 1 கிலோ பருப்பும், 2 மாதங்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம், சுமார் 8 கோடி புலம் பெயர்ந்தவர்கள் பயன் பெறுவர். இதன் திட்ட மதிப்பீடு: ரூ. 3500 கோடி.
- மத்திய அரசு இதற்கான நிதியை வழங்கும். புலம் பெயர்ந்தோரை அடையாளம் காணல் மற்றும் முறையாக செயல்படுத்துதல் , மாநில அரசாங்கங்களின் பொறுப்பாகும்.
- மார்ச் 2021 முதல் அமலாகும் “ஒரே நாடு, ஒரே ரேசன்” திட்டத்தின் மூலம், புலம்பெயர் தொழிலாளர்கள், நாட்டின் எந்த மூலையிலில் இருக்கும் அத்தியாவசிய கடைகளில் பொருட்கள் பெறும் வகையில் தொழில் நுட்பத்தை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மாநிலங்களுக்கிடையேயான பெயர்வுத்திறன் வசதி 20 மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2020க்குள், 83 சதவீத மக்கள், 23 மாநிலங்களில் தோராயமாக 67 கோடி பயனாளிகள், தேசிய பெயர்வுத்திறன் வசதியில் இணைக்கப்படுவார்கள்.
- புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் / நகர்ப்புற ஏழைகளுக்கு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், வாடகை வீட்டுவசதிக் குடியிருப்புகள் திட்டம்
- அரசு – தனியார் கூட்டு முறையில், நகரங்களில் உள்ள அரசு நிதியுதவியில் கட்டப்படும் வீடுகள், கட்டுப்படியாகக்கூடிய வாடகை வீடு வளாகங்களாக மாற்றப்படும்.
- கட்டுப்படியாகக்கூடிய வாடகை வீடு வளாகங்களை, தத்தம் தனியார் இடங்களில் செயல்படுத்த தயாரிப்பு தொழிற்சாலைகள், நிறுவனங்கள், சங்கங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
- கட்டுப்படியாகக்கூடிய வாடகை வீடு வளாகங்களைகே கட்டி செயல்படுத்த மாநில அரசு முகமைகள் / மத்திய அரசு நிறுவனங்களுக்கு இதே போன்று ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
- சிசு முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்றவர்களுக்கு 12 மாதங்களுக்கு 2 சதவீத வட்டி குறைப்பு – திட்ட மதிப்பீடு ரூ. 1500 கோடி.
- முத்ரா – சிசு கடன்களின் தற்போதைய மதிப்பு ரூ. 1.62 இலட்சம் கோடி (அதிக பட்ச கடன் தொகை ரூ. 50000)
- தெருவோர வியாபாரிகளுக்கு ரூ. 5000 கோடி கடனுதவி
- நடைபாதை வியாபாரிகள் எளிதில் கடன் பெறும் வகையில் சிறப்புத்திட்டம் ஒரு மாத காலத்தில் அறிவிக்கப்படும்.
- ரூ.10000 வரையிலான முதற்கட்ட மூலதனம்
- டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஊக்குவிப்பு நிதி, வெகுமதி மற்றும் சிறந்த முறையில் திருப்பிச் செலுத்துவோருக்கு முதலீட்டுக் கடன் அதிகரிக்கப்படும்
- இதன் மூலம் 50 இலட்சம் நடைபாதை வியாபாரிகள் பயன்பெறுவர்.
- வீட்டுவசதித் துறை மற்றும் நடுத்தர பிரிவினரின் மேம்பாட்டிற்கு ரூ.70000 கோடி நிதி
- 2017 மே முதல் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு (ஆண்டு வருமானம் ரூ. 6 இலட்சம் முதல் 18 இலட்சம் வரை) செயல்படுத்தப்பட்டு வரும் கடன்சார் மானியத்திட்டம் 2021 மார்ச் வரை நீட்டிக்கப்படுகிறது.
- இதுவரை இத்திட்டத்தில் 3.3 இலட்சம் நடுத்தர பிரிவினர் பயன்பெற்றுள்ளனர். 2020-21ல் மேலும் 2.5 இலட்சம் நடுத்தர வருவாய் குடும்பங்கள் பயனடையும்.
- காடு வளர்ப்புக்கான இழப்பீடு மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையகத்தின் (CAMPA) நிதியைக் கொண்டு வேலைவாய்ப்பு உருவாக்கல் – திட்ட மதிப்பீடு – ரூ. 6000 கோடி
- இந்நிதி, மாநில அரசுகள் மூலம் கீழ்க்காணும் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
- நகர்ப்புறப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் காடு வளர்ப்பு மற்றும் மரம் நடுதல் பணிகள்.
- இயற்கை மறு உற்பத்தி மூலம் செயற்கை மறு உற்பத்தி
- வன மேலாண்மை, மண், ஈரப் பாதுகாப்புப் பணிகள்
- வனப்பாதுகாப்பு, வனம் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான உள்கட்டமைப்பு மேம்பாடு, வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை உள்ளிட்டவை.
- விவசாயிகளுக்கு NABARD வங்கி மூலம் கூடுதல் அவசரப்பணி மூலதனம் – ரூ. 30000 கோடி
- கிராமப்புற கூட்டுறவு வங்கிகளுக்கும், மண்டல ஊரக வங்கிகளுக்கும், பயிர்க்கடன் வழங்கத் தேவையான கூடுதல் நிதி ஆதரவாக, இம்மூலதனம் இருக்கும்.
- இத்திட்டம் 3 கோடி விவசாயிகளுக்கு பயன் தரும்.
- 2.5 கோடி விவசாயிகள் பயன் பெறும் வகையில் கிசான் கடனுதவித் திட்டம் – ரூ. 2 இலட்சம் கோடி
- விவசாயக் கடன் அட்டைகள் மூலம் PM Kisan திட்டப்பயனாளிகளுக்கு சலுகைக் கடன் வழங்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
- மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறும்.
நேரடி உதவி
- 3 கோடி விவசாயிகளுக்கு, கடனைத் திருப்பிச் செலுத்த அவகாசம் 3 மாத காலம் நீட்டிப்பு.
- மார்ச் 1, 2020க்குள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன்களை உரிய காலத்தில் செலுத்துவதற்கான ஊக்கத்தொகை மற்றும் வட்டி தள்ளுபடி சலுகைகள் 31 மே, 2020 வரையில் நீட்டிப்பு.
- ரூ. 25000 கோடி கடன் வரம்புடன் 25 இலட்சம் புதிய விவசாயக் கடன் அட்டைகளுக்கு அனுமதி
- 01.03.2020 முதல் 30.04.2020 வரையில் வேளாண்மைக்கு ரூ. 86600 கோடிக்கு, 63 இலட்சம் கடன்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- கூட்டுறவு வங்கிகள், பிராந்திய ஊரக வங்கிகளுக்கு மார்ச் 2020ல் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) ரூ.29500 கோடி மறு நிதியளிப்பு வழங்கியுள்ளது.
- மார்ச் 2020ல் மாநிலங்களுக்கு, ஊரக கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ. 4200 கோடி நிதியுதவி
- வேளாண் விளை பொருள் கொள்முதலுக்கு, மார்ச் 2020லிருந்து மாநில அரசு நிறுவனங்களுக்கு, ரூ. 6700 கோடி நடைமுறை மூலதன வரம்புக்கு அனுமதி.
தலைவரே! உங்கள் திட்டக் குழுவில் யாரோ கள்வர் உள்ளனரோ? என்றே எண்ணத் தோன்றுகிறது! ஏனெனில், போலி M.P, 13.05.2020 அன்று மாலையே, விவசாயிகளுக்கு ஒன்றுமில்லை, புலம்பெயர் தொழிலாளிகளுக்கு ஒன்றுமேயில்லை என்று ஓத ஆரம்பித்து விட்டாரே? (சாத்தானுக்கு, 14.05.2020 அன்று செய்யப்போகும் அறிவிப்பு முன்கூட்டியே தெரிந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம் !