நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஸ்ரீசார்வரி ஆண்டு – வைகாசித்திங்கள் ‘௧௬’ ம் நாள் (16) வெள்ளிக்கிழமை / 29.05.2020
யாசகர் நிலையைக் குடிகள் கொண்டால், அந்நாட்டின் அரசனும், அவ்வாறே யாசகர்களின் அரசன் என்றே அறியப்படுவான். மக்களின் உழைப்பை, உயிர் பயமூட்டி, நிறுத்தி விட்டு, அவர்களின் சேமிப்பு பெட்டகத்தில், வரிகள் பெயரால் ஆதிக்கம் செய்து, நோய் நிவாரணம் தருகிறேன் என்பது ஒரு நல்ல அரசிற்கு அழகன்று! தனி மனிதருக்கு கிடைக்க வேண்டிய பெட்ரோல் விலை குறைப்பு ஆதாயம் தடுத்ததும், தொழில் துறையினர் சிரமம் பகிர்ந்துகொள்ள GST வரி சலுகை மறுத்ததும், சொத்து வரி, நீர் வரி, மின்சார கட்டணம் போன்றவற்றில் சலுகை தராததும், மக்களுக்கு சலுகையில்லாமல், மக்களை சேவை செய்யச் செய்ததும், ஒருவிதமான அதிகாரத்துவத்தையே வெளிப்படுத்துகிறது.
“மக்கள் நலத் திட்டங்கள், மக்களைச் சுதந்திரமாய், நன்னெறி கொண்டு வாழ அனுமதிக்க வேண்டுமேயன்றி, அவர்களை யாசகர்களாய், தன்னம்பிக்கை இழந்தவர்களாய் மாற்றக்கூடாது – ‘ஈயென இரத்தல் இழிந்தன்று’ “
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஸ்ரீசார்வரி வைகாசி ‘௧௬’