Story Highlights
- விழித்திரு! வென்றிடு!
நன்றி: PIB சென்னை
மாண்புமிகு பாரதப் பிரதமர் 12.05.2020 அன்று நாட்டிற்கு வழங்கிய உரையின் சாராம்சம் தமிழில்!
Self Reliant India – சுயசார்பு பாரதம்
கொரோனா மற்றும் உலகம்
கடந்த நான்கு மாதங்களாக, உலக சமுதாயமே எதிர்த்துப் போராடி வரும் இந்நோய்க்கு, 42 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.75 இலட்சத்திற்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். உலகமே, ஒரு போரை கட்டுப்பாட்டுடன் எதிர்கொண்டு வருகிறது.
சுயசார்பு நிலை
நமது புராணங்கள் காட்டும் பாதைதான், தன்னிறைவு பெற்ற இந்தியா. கொரோனா நெருக்கடி ஆரம்பித்த போது, தனி நபர் பாதுகாப்பு கவசங்கள் ஒன்று கூட தயாரிக்கப்பட வில்லை மற்றும் N-95 வகை முகக் கவசங்கள் தயாரிப்பும் குறைந்த அளவிலேயே இருந்தது. ஆனால் இந்த நெருக்கடி நிலை, நாளொன்றுக்கு இரண்டு இலட்சம் N-95 வகை முகக்கவசங்கள் மற்றும் தனி நபர் பாதுகாப்பு கவசங்கள் தயாரிக்கும் நிலையை எட்டியுள்ளோம். சுயசார்பு என்பது மனிதர்களை அடிப்படையாகக் கொண்ட உலக மயமாக்கலா அல்லது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட உலக மயமாக்கலா என்பது பெரும் விவாதமாகியுள்ளது. இந்தியாவின் கலாச்சாரமும், பாரம்பரியமும் சுய சார்பு நிலையை அடிப்படையாகக் கொண்டது. இதன் ஆன்மா, உலகமே ஓர் குடும்பம் என்றெண்ணிய பாரம்பரியமாகும்.
உலகம் – ஓர் குடும்பம்
இந்தியக் கலாச்சாரம், பூமியைத் தன் தாயாகக் கருதி வாழும் கலாச்சாரமாகும். இந்தியாவின் வளர்ச்சி மற்றும் தன்னிறைவென்பது, உலகத்தின் வளர்ச்சி மற்றும் நலனில் பெரும் பங்கு வகிப்பதாகும். இந்தியாவின் தன்னொழுக்கமிகு நடவடிக்கைகள், உலகின் பார்வையில், இந்தியாவின் மதிப்பைக் கூட்டியுள்ளது.
இந்திய தேசத்தின் நோய் தடுப்பு நடவடிக்கைகள், சுகாதார நடவடிக்கைகள், இயற்கையைப் பேண செய்த முயற்சிகள், தனி மனித சுய மேம்பாட்டிற்கான யோகப் பயிற்சிகள், இந்த உலகத்திற்கே முன்மாதிரியானவையாகும், அது உலகத்தின் பொது நலனும் சார்ந்ததாகும்.
சுயசார்பு பாரதம் – ஐந்தூண்கள்
- பொருளாதாரம் (Economics)
- கட்டமைப்பு (Structure)
- அமைப்பு (System)
- மக்கள் (People)
- தேவை (Need)
20 இலட்சம் கோடி
- 20,00,000 கோடி = 20,00,000,00,00,000 = 2,00,00,00,00,00,000
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், 10% அளவிற்கான தொகுப்பாக இந்த 20 இலட்சம் கோடி நிவாரணம் இருக்கும். இந்தப் பொருளாதார தொகுப்பு கீழ்வரும் துறைகளை மேம்படுத்த உதவும்.
- குடிசைத்தொழில்
- வீட்டுத்தொழில்
- சிறு தொழில்கள்
- சிறு-குறு-நடுத்தர நிறுவனங்கள்
இந்தத் தொகுப்பின் வழி பயன் பெறும் இனங்கள்:
- தொழிலாளர்கள்
- விவசாயிகள்
- நடுத்தர மக்கள்
- தொழிற்துறையினர்
சுயசார்பு பாரதத்தை நிறுவ, பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது, அவசியமாகிறது. இந்த சீர்திருத்தங்கள், எதிர்காலத்தில் ஏற்படும், எந்தவொரு இடரின் போதும், விவசாயம் மற்றும் மக்களை பாதிப்பிலிருந்து காப்பதாய் இருந்திட வேண்டும். சீரான வரி, எளிதான மற்றும் தெளிவான சட்டத்தின் ஆட்சி, சிறந்த கட்டமைப்பு, திறமையான மற்றும் தகுதி வாய்ந்த மனித வளங்கள் மற்றும் வலுவான நிதி கட்டமைப்பு ஆகியவற்றை நிறுவுவதே, இச்சீர்திருத்தங்களின் பிரதானமான நோக்கமாயிருக்கும்.
தலைவரே! இந்த ஊரடங்கின் போது, உள்ளிருந்து, தனித்திருந்து, தற்போது, நம்மை நாமே காக்காவிடில், நாம் பல வருடங்கள் பின்தங்கி விடுவோமென்று கூறினீர்களே? ஆனால், இன்று, வல்லுநர்களும், விஞ்ஞானிகளும், கொரோனா நீண்ட காலத்திற்கு தங்கி விடுமென்று சொல்கிறார்கள் என்றும் கூறுகிறீர்களே?
இதைத்தான் தலைவரே, முதலிலிருந்து சொல்கின்றோம். வீழ்வது இழிதன்று! ஆனால் வீழ்ந்தே கிடப்பதுதான்! இயக்கமே இவ்வையத்தின் இதயம்! முடக்கமன்று!