Story Highlights
- சாயம் வெளுத்துப் போச்சு
- சிங்க வேடம் போட்ட நரி
- "சிங்கி"க் கொண்டே வெளி வந்துவிட்டது
சுய சார்பு பாரத இயக்கம் – Atma Nirbhar Bharat Abhiyaan Part 4
பொறுப்பு துறப்பு: நாம் அரசாங்கத்தின் ஊதுகுழல் இல்லை. அரசாங்கத்தின் நிவாரண தொகுப்பின் விபரம் பதியவே முனைகிறோம். இந்தப் பதிப்பின் நோக்கம், பாரத அரசாங்கத்தின் நிவாரண தொகுப்பின் பலன்களை அறிவதோடு, அதன் நன்மை தீமைகளை சீர்தூக்கிக் காண்பதுமாகும். நன்றி: PIB, Chennai இணைய தளம்.
நாட்டு மக்களுக்கு, 12.05.2020 அன்று, பிரதமர் அறிவித்த சுயசார்பு பாரத இயக்கம் குறித்து, நிதி அமைச்சரின் பத்திரிகை வெளியீடு மற்றும் Atma Nirbhar Bharat Abhiyaan – சுயசார்பு பாரத இயக்க நிவாரணத்தொகுப்பு – பகுதி 4 குறித்து வரிசையாக பார்ப்போம்.
பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அறிவித்த நான்காம் கட்ட நிவாரணத் தொகுப்பு விபரம்
- தொழில் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல்
- தற்சார்பு பாதுகாப்புத்துறை உற்பத்தி
- விமானப் போக்குவரத்து செலவு குறைப்பு
- தனியார் பங்களிப்பு ஊக்குவித்தல் (மின்சாரம், விண்வெளி, அணுசக்தி)
ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கொள்கை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். மத்திய அரசு இன்று (16.05.2020) அறிவித்த நடவடிக்கைகள் வளர்ச்சியின் புதிய உதயம் என்று எண்ணப்படுகிறது.
சுயசார்பு பாரத இயக்க நிவாரணத் தொகுப்பு – பகுதி 4
தற்சார்பு இந்தியா
-
முதலீட்டை ஈர்க்க கொள்கை சீர்திருத்தங்கள்
- செயலாளர்களின் அதிகாரம் அளிக்கப்பட்ட குழு (EGos) மூலம் முதலீடுகளுக்கு விரைந்து அனுமதி அளித்தல்
- அனைத்து அமைச்சகங்களிலும் ‘திட்ட மேம்பாட்டுப் பிரிவு’ ன் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் மத்திய / மாநில அரசுகளை ஒருங்கிணைத்தல்
- முதலீடுகளை ஈர்க்கும் விதமாக மாநிலங்களைத் தரப்படுத்துதல்
- சூரியசக்தி, முன்னேற்ற தொழில்நுட்பத் துறைகளில், ‘புதிய துறை’களை ஊக்குவித்தல்
-
தொழில் உள்கட்டமைப்பு மேம்பாடு
- தொழில் பகுதிகளில் பொது உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இணைப்பு நிலையை மேம்படுத்த, மாநிலங்கள் மூலம் சவால் முறையில் திட்டங்கள்.
- புதிய முதலீடுகளை ஊக்கப்படுத்த, தொழில் நிலம் / நில வங்கி வசதி மற்றும் புவி சார் படமிடலுடன் (GIS Mapping) தொழில் தகவல் அமைப்பு மூலம் தகவல்களை தெரிவித்தல். தொழில் பூங்காக்கள் / பேட்டைகள் / சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொழில் தகவல் அமைப்பில் படமிடப்பட்டுள்ளன.
- 2020 – 2021 ல் அனைத்து தொழில் பூங்காக்களும் தர வரிசைப்படுத்தப்படும்.
-
நிலக்கரித் துறை – வணிக ரீதியில் கனிம வளம்
- ஓரளவுக்கு மட்டும் வளம் கண்டறியப்பட்ட பகுதிகளில், வளம் அறிதல் மற்றும் உற்பத்தி திட்டம்.
- ஓரளவு வளம் கண்டறியப்பட்ட தொகுப்புகளும் ஏலம் விடப்படும்.
- வளம் கண்டறிதலில் தனியார் துறையின் பங்கேற்பு அனுமதி
- குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே உற்பத்தியை தொடங்கினால், வருவாய் பகிர்தலில் சலுகை மூலம், ஊக்குவிப்பு
- ஏலத்தில் நுழைவு விதிமுறைகள் தளர்வு, அனைவரும் பங்கேற்க அனுமதி, ‘ரூபாய்/டன்’ க்குப் பதிலாக, வருவாய் பகிர்வு, உச்சவரம்புடன் கூடிய கட்டணம்
- நிலக்கரி வாயுமயமாக்கல், திரவ மயமாக்கல் வருவாய் பங்கீட்டில் தள்ளுபடி.
- கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 50000 கோடி; 2023 – 2024 க்குள், 1 பில்லியன் டன் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இயந்திரங்கள் மூலம் நிலக்கரியைக் கொண்டு செல்ல, சுரங்கங்கள் முதல் இரயில்வே பக்கவாட்டு மேடைகள் வரை மேம்படுத்த ரூ. 18000 கோடி முதலீடு
- சுரங்கக் குத்தகையில் மாற்றங்களை அனுமதித்தல், கனிமக் குறியீடுகள் அறிமுகம், முத்திரைத் தாள் கட்டணம் முறைப்படுத்தல் ஆகிய கொள்கை சீர்திருத்தங்கள் செய்யப்படும்
-
பாதுகாப்பு உற்பத்தி – மேக் இன் இந்தியா
- ஆண்டு வாரியாக ஆயுதங்கள் / தளவாடங்கள் இறக்குமதி தடைக்கான பட்டியல் அறிவிப்பு
- இறக்குமதி உதிரி பாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி
- உள்நாட்டு மூலதனக் கொள்முதலுக்கு தனி பட்ஜெட்
- ஆயுதத் தொழிற்சாலை வாரியம் வணிக மயமாக்கல்
- பாதுகாப்புத்துறைக்கான உற்பத்தியில் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரம்பு 49% லிருந்து 74% ஆக அதிகரிப்பு
- ஒப்பந்த மேலாண்மைக்கு பணித் திட்ட மேலாண்மைப் பிரிவு (PMU)
-
விமானப் போக்குவரத்து – தனியார் பங்களிப்பு
- பறக்கும் செலவுகளில் ரூ.1000 கோடி வரை குறைக்க இலக்கு
- அரசு – தனியார் – பங்களிப்பு (PPP) அடிப்படையில் 3 விமான நிலையங்களை பராமரிக்க அனுமதி
- தனியார் பங்களிப்பு மூலம் ரூ. 13௦௦௦ கோடி முதலீடு
-
மின்சார விநியோகம் – தனியார் பங்களிப்பு
- யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம் தனியார் மயம்.
- சமூகக் கட்டமைப்புத் துறையில் தனியார் துறை முதலீட்டை அனுமதிக்க ரூ. 8100 கோடி திட்ட மதிப்பு
-
விண்வெளி நடவடிக்கைகள் – தனியார் பங்களிப்பு
- செயற்கைக்கோள்கள் ஏவுதல், கோள் ஆய்வு மற்றும் விண்வெளி தொடர்புடைய சேவைகளில் தனியார்துறை அனுமதி
- இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் வசதிகள் மற்றும் தொடர்புடைய இதர சொத்துக்களை, தனியார்துறை பயன்படுத்திக் கொள்ள அனுமதி
-
அணுசக்தி – சீர்திருத்தங்கள்
- அரசு – தனியார் பங்களிப்பு முறையில் ஆராய்ச்சி அணு உலை.
- PPP முறையில் (அரசு – தனியார் பங்களிப்பு) உணவுப் பதப்படுத்தலுக்கு கதிர்வீச்சு தொழில்நுட்பப் பயன்பாடு.
- தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சிந்தனை உருவாக்கல் மையங்கள்.
தலைவரே! எல்லாத்தையும் தனியார் மயமாக்கிவிட்டு, நீங்க (அரசு) என்ன பண்ணுவீங்க? வXXX கX நடத்தப் போறீங்களா?