நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஸ்ரீசார்வரி ஆண்டு – ஆனித்திங்கள் ‘௧௨’ ம் நாள் (12) வெள்ளிக்கிழமை / 26.06.2020
ஆட்சியாளர்கள் செய்யும் செயல்களை எதிர்ப்பது, குறை கூறுவது மட்டுமே கடமை என்று கொள்வது, எதிர்க்கட்சிகளாகட்டும், சாதாரண மக்களாகட்டும், அது ஒருவிதமான மன நோயாகும். ஆட்சியாளர்கள் செய்யும் செயல்களை ஆதரிப்பது, புகழ்வது மட்டுமே கடமை என்று கொள்வது, அரசியல் கட்சிகளாகட்டும், சாதாரண மக்களாகட்டும், அது ஒருவிதமான ஊழலாகும்.
“நேர்மை கொண்டு வீறு போடும் அரசுக்கு, மக்களின் ஆதரவு சொல்லும் வாக்கிலில்லை!, செலுத்தும் வாக்கிலிருக்கிறது! தன்மானத்தோடு வாழுங்கள்! நேர்மையாக, நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்!”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஸ்ரீசார்வரி ஆனி ‘௧௨’